Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
"ஈழக் கனேடியர்களின் கவனத்திற்கு" - அன்பான வேண்டுகோள்
#1
எமது தாயக பூமியில் ஏற்பட்ட இயற்கையின் சீற்றத்தால் புலத்திலும் நாம் நிலை குலைந்து போயுள்ளோம். நான்கு நாட்கள் கடந்த நிலையிலும் இலங்கை அரசின் மாற்றான் தாய் மனப்பான்மையினால், சர்வதேச சமூகத்தினால் பெருமளவில் வழங்கப்பட்ட அவசர நிவாரணங்களிலிருந்து சீரான எந்த உதவிகளும் எமது மக்களுக்கு சென்றடையவில்லை. எமது தாயகப்பகுதிகளுக்கு செல்லும் அவசர உதவிகள் அணைத்தும் இலங்கை இராணுவத்தால் திருப்பி அனுப்பப் பட்டுக் கொண்டிருப்பதாக செய்திகள் தெரிவித்துக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் அழிவினால் ஏற்பட்ட உயிரனத்தங்களை விட, மருத்துவ வசதியின்மை, சுத்தமான குடிநீர் வசதியின்மை, சுகாதார சீர்கேடு, இறந்த உயிரினங்களிலிருந்து பரவப்போகும் கொடிய கிருமிகளின் தொற்று நோய்களினாலும் ஏற்படப்போகும் அழிவுகளே, தற்போதைய அழிவினால் ஏற்பட்ட பாதிப்புகளை விட பன்மடங்காக இருக்கப் போகிறது.

இச்சந்தர்ப்பத்தில் புலத்திலுள்ள எம்மக்களினால் எம்மக்களின் அவலங்களைத் தீர்ப்பதற்காக பாரியளவு நிதி, மருத்துவப் பொருட்கள், உடுபுடைவைகள், உணவுப்பொருட்கள் போன்றன சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதிலும் குறிப்பாக நிதி சேகரிப்புகள் எம்மின மக்கள் மத்தியில் மட்டுமல்லாமல் பிற இன மக்கள் மத்தியிலும் பெருமளவாக திரட்டப்படுகின்றன. இந்த நிதி சேகரிப்பில் குறிப்பாக லண்டன், பிரான்ஸ், ஜேர்மனி, சுவிஸ், டென்மார்க், நோர்வே உட்பட்ட ஐரோப்பிய நாடுகளிலும் அவுஸ்ரேலியாவிலும் ஒருங்கினைக்கப்பட்ட நிறுவனங்கள், புனர்வாழ்வு புனருத்தாரண நிறுவனமான தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினூடு சிறப்பாக செய்து வருகிறார்கள். இதில் குறிப்பிடக்கூடிய செய்தி என்னவென்றால் இவர்கள் மூலம் சேகரிக்கப்படும் நிதியானது நிர்வாக செலவுகள் அற்ற நிலையில் முழு நிதியுமே எம்மக்களின் அவலங்களைப் போக்க சென்றடையுமென்பதில் எவ்வித ஐயப்பாடுமில்லை.

ஆனால் கனடாவைப் பொறுத்தமட்டில் பலர் இந்நிதி சேகரிப்புகளில் ஈடுபட்டுள்ளனர். தனித்தனிக் குழுக்களாகவும், சில வானொலிகள் மூலமும், நிறுவனங்கள் மூலமும் திரட்டப்படும் நிதிக்கு ஈழக் கனேடிய மக்களும் இந்நிதிகள் "தாயகத்தில் எம்மக்களின் அவலங்களைப் போக்குவதற்காக" என்பதற்காக வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஒரு சில அமைப்புகளே இந்த திரட்டப்படும் நிதியானது தமிழர் புனர்வாழ்வு நிறுவனத்தினூடே தமிழர் தாயகத்தில் எமது மக்களின் அவலங்களை போக்க பயன்படுத்தப்படுமென்பதை உறுதியாக மக்களுக்குக் கூறி, அவற்றை செயலிலும் காட்டி, இப்பாரிய பணியை செயற்படுத்தி வருகிறார்கள். ஆனால் இந்நிதி சேகரிப்பில் ஈடுபட்டிருக்கும் சில நிறுவனங்கள் எவ்வித தூரநோக்கமற்ற ரீதியில் அதாவது திரட்டப்படும் நிதியானது எங்கு அனுப்பப்படப் போகிறது? எப்படி அனுப்பப்படப் போகிறது? எவர்கள் மூலம் அனுப்பப்படப் போகிறது? .... போன்ற கேள்விகளுக்கு விடைபெற முடியாத நிலையிலும், மர்மமான ரீதியிலும் சேகரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சிலர் சேகரிக்கப்படும் நிதியானது சர்வதேச அமைப்புகளினூடு அனுப்படுமென கூறுகிறார்கள். ஆனால் இவ்வமைப்புகள் தமது நிர்வாக செலவுகளுக்காக பெருமளவை எடுத்து விடுகின்றன. மற்றும் இந்நிதிகள் எமது தாயகப் பகுதிகளுக்குத் தான் போய்ச்சேருமென்ற எவ்வித உத்தரவாதமுமில்லை.

இந்நிலையில் அன்புக்குரிய ஈழக் கனேடிய உறவுகளே! நாம் கொடுக்கும் ஒவ்வொரு டொலர்களும் எம்மக்களுக்கே சென்றடையக் கூடிய நிறுவனங்களினூடே உங்களது பங்களிப்பைச் செய்யுங்கள். ஏற்கனவே கொடுத்த நிதிகளும் எம்மக்களுக்கே செல்கின்றனவா என்பதை நீங்கள் கொடுத்த அமைப்புகளை தொடர்பு கொள்வதன் மூலம் உறுதி செய்யுங்கள்.

ஏனெனில் சில இடங்களில் சேகரிக்கப்படும் நிதிகளானது, எம்மக்களின் அவலங்களைப் போக்குவதற்குப் பயன்படாமல் எதிர்காலத்தில் அழிவுகளுக்குப் பயன்படக் கூடிய சாத்தியங்கள் பலவுள்ளன. கடந்த காலங்களில் எம்மவலங்களை, எம்முணர்வுகளைப் பயன்படுத்தி பல சக்திகள் எம்மத்தியிலும் ஈடுபட்டுக் கொண்டிருந்தது, இருப்பது நாம் யாவருமறிந்ததே.
"
"
Reply


Messages In This Thread
"ஈழக் கனேடியர்களின் கவனத்திற்கு" - அன்பான வேண்டுகோள் - by Nellaiyan - 12-31-2004, 02:31 PM
[No subject] - by cannon - 12-31-2004, 05:08 PM
[No subject] - by cannon - 01-03-2005, 03:43 AM
[No subject] - by cannon - 01-03-2005, 03:49 AM
[No subject] - by Sriramanan - 01-07-2005, 03:15 AM
[No subject] - by lakpora - 01-07-2005, 12:00 PM
[No subject] - by lakpora - 01-07-2005, 12:05 PM
[No subject] - by வியாசன் - 01-07-2005, 12:36 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)