12-30-2004, 04:34 PM
கிழக்கில் பாதிக்கப்பட்ட தமிழ் முஸ்லிம் மக்களுக்கு உதவுங்கள்.
கடந்த ஞாயிறு ஏற்பட்ட பாதிப்பிலிருந்து கிழக்கு இன்னமும் மீளவில்லை தொடர்ந்தும் உயிரிழந்த உடல்களையும் காயமடைந்தவர்களையும் மீட்கும் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.அம்பாறை மாவட்டத்தில் மட்டும் 13000 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளார்கள்.6000 பேர் காணாமற் போயிருக்கிறார்கள்.அதேபோன்று மட்டக்களப்பில் 1800 இற்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்தும் 1000 இற்கும் மேற்பட்டவர்கள் காணமற் போயுமிருக்கிறார்கள்.
பாதிக்கப்பட்டு வீடுகளையும் உடமைகளையும் இழந்து இருமாவட்டங்களையும் சேர்ந்த 400,000
பொதுமக்கள் பாடசாலைகள்,கோவில்கள்,தேவாலயங்கள்,பள்ளிவாசல்களில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள்.முஸ்லிம் மக்கள் அதிகமாக வாழும் காத்தான் குடி கல்முனை ஆகிய பிரதேசங்களில் பாரிய உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
கிழக்கில் மீட்புப்பணிகளில் பள்ளிவாசல் சம்மேளத்தினர்,புலிகள்,புனர்வாழ்வுக்கழகத்தினர் ஈடுபட்டு வருகிறார்கள்.
நேற்று அரச சார்பற்ற நிறுவனங்கள் உதவிகளும் அரசாங்க நிறுவனங்களும் உதவிகளை எடுத்துச் செல்லும் வரையில் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் மாத்திரமே தமிழ்,முஸ்லிம் ஆகிய இருபகுதியினருக்கும் உதவிகளை வழங்கிவந்தது.
அரசாங்கத்தினது பாராபட்சத்தால் தமிழ் மக்களைப் போலவே முஸ்லிம் மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.அவர்களுக்கு உதவுவதில் பள்ளிவாசல்களின் சம்மேளனம் புனர்வாழ்வுக்கழகத்துடன் கூட்டாக இணைந்து செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது.
92 நலன்புரி நிலையங்கள் அமைக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்கள் பராமரிக்கப்பட்டு வருகிறார்கள்.அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவிகள் கிடைத்தபோதும் 400,000 இற்கும் மேற்பட்ட மக்களைப் பராமரிப்பதற்கு அவர்களின் உதவி போதவில்லை.
கிழக்கில் பாதிக்கப்பட்ட தமிழ்,முஸ்லிம் மக்களுக்கு உதவி வேண்டி தமிழர் புனர்வாழ்வுக்கழகமும்,பள்ளிவாசல்களின் சம்மேளனமும் தனியாகவும் கூட்டாகவும் வேண்டுகோள் விடுத்துள்ளன.வெளிநாடுகளில் வாழ்பவர்களிடமிருந்து மாவட்டத்தைப் புனரமைப்பதற்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கும் நிதியுதவி பொருளுதவிகளை எதிர்பார்க்கின்றன.
வெள்ளம் இன்னும் முற்றாக வடியாத நிலையில் தொற்றுநொய்களின் அபாயம் தலைதூக்கியுள்ளது.மருத்துவ உதவிகள் அவசரமாகத் தேவைப்படுகின்றன.முல்லைத்தீவு கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையிலும் இரு லொறிகளில் மருத்துவ உதவியும் 50 வைத்தியர்கள் அடங்கிய குழுவொன்றும் கிழக்குக்கு கிளிநொச்சியிலிருந்து அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.வவுனியா மாவட்டத்திலிருந்தும் தொடர்ச்சியாக கிழக்குக்கு உதவிகள் அனுப்பபப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
பேரிழப்பின் மத்தியிலும் சிங்கள காடையர்கள் இராணுவத்தினரின் உதவியுடன் திருகோணமலை,மட்டக்களப்பு,அம்பாறை ஆகிய பகுதிகளிலுள்ள தமிழ் முஸ்லிம் மக்கள் வாழும் பிரதேசங்களுக்கு அனுப்பப்படும் உதவிகளை தடுத்து நிறுத்த முயன்று வருகிறார்கள்.நேற்றும் பல வாகனங்கள் தடுத்து நிறுத்தப்படு பொருட்களைத் தென்னிலங்கைக்கு கொண்டு செல்லுமாறு மிரட்டப்பட்டுள்ளன.
இவ்வாறான நிலையில் புலம்பெயர்ந்து வாழ்பவர்கள்,வெளிநாட்டு நிருவனங்களின் உதவியை கிழக்கு எதிர்பார்த்திருக்கிறது.
உதவ விரும்புபவர்கள் தமிழர் புனர்வாழ்வுக்கழத்தின் மூலமாக உதவலாம்.
TRO Bank account in Colombo, Sri Lanka:
Bank A/C: 01607837001
Standard Chartered Bank
Wellewatte Branch
Colombo 06
Sri Lanka
TRO
410/112, Buller Street
Buddhaloga Mawatha
Colombo 7
Phone: +94 11 2 69 32 54
Fax: +94 11 4 71 65 76
நலன்புரி நிலையங்களின் மையச்செலகத்தை இந்த தொலைபேசி இலக்கத்தில் தொடர்புகொள்ளலாம்.
94- 65- 2226592
நன்றி - ஈழநாதன்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>