12-30-2004, 10:33 AM
பயங்கர கடல் கொந்தளிப்பு: மீண்டும் சுனாமி தாக்குதல் அபாயம்: மக்கள் அவசரமாக வெளியேற்றம்
சென்னை:
தமிழகத்தில் மீண்டும் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை, நாகப்பட்டிணம், கன்னியாகுமரி பகுதிகளில் கடலின் சீற்றமும் அலைகளின் உயரமும் அதிகரித்துள்ளது.
இதற்கிடையே தமிழக கடலோரப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் மீண்டும் சுனாமி அலைகள் தாக்கக் கூடும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. இதையடுத்து தமிழக கடலோரப் பகுதிகளில் இருந்து மக்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
சென்னை, நாகப்பட்டிணம், கன்னியாகுமரி, கடலூர், கல்பாக்கம் கடலோரப் பகுதிகளில் கடல் கொந்தளிப்பு அதிகமாகியுள்ளது. சென்னையில் கடல் நீர் மட்டம் அதிகரித்து கூவம் ஆற்றின் வழியாக புதுப்பேட்டை பகுதிக்குள் நுழைந்து வருகிறது. இதனால் பெரும் பீதி பரவியுள்ளது.
இதையடுத்து சென்னை, நாகப்பட்டிணம், கடலூர் பகுதிகளில் கடலோரப் பகுதிகளில் இருந்து மக்களை அதிகாரிகள் மிக அவசரமாக வெளியேற்றி வருகின்றனர். சென்னை கடற்கரைச் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுவிட்டது.
கடலோரப் பகுதிகளில் போலீசார் வாகனங்களில் மைக்குகளைக் கட்டிக் கொண்டு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
கல்பாக்கம் அணு உலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறும்படி எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
இன்று நாகப்பட்டிணம் மாவட்டத்தில் உள்ள அக்கரைப்பேட்டையில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க இருந்த முதல்வர் ஜெயலலிதாவின் பயணம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுவிட்டது. தரையிறங்க இருந்த அவரது ஹெலிகாப்டர் உடனடியாகத் திரும்பிச் சென்றது.
நிலநடுக்கத்தையும் கடலின் அலைகளைக் கண்காணித்து வரும் வானிலை ஆய்வு மையமும் பாதுகாப்பு அமைச்சகமும் கடல் கொந்தளிப்பு அதிகமாக உள்ளதால் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளன. இதனை மத்திய உள்துறை அமைச்சகமும் உறுதி செய்துள்ளது.
தமிழகம் தவிர கேரள கடலோரப் பகுதிகளை மீண்டும் இன்று சுனாமி தாக்கலாம் என மத்திய அரசு எச்சரித்திருப்பதாக கேரள முதல்வர் உம்மன் சாண்டி கூறியுள்ளார்.
பிற்பகலுக்கு மேல் கடல் கொந்தளிப்பு மிக அதிகமாக இருக்கும் என்றும், பேரலைகள் எழக் கூடும் என்றும் மத்திய அரசிடம் இருந்து எச்சரிக்கை வந்துள்ளதாகக் கூறியுள்ளார். இதையடுத்து கடற்கரைகளில் இருந்து 2 கிமீ துரத்திற்கு யாரும் செல்ல வேண்டாம் என்று எச்சரித்துள்ளார்.
இதையடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் கடலோரங்களை விட்டு இடம் பெயர்ந்து வருகின்றனர்.
அக்கரைப்பேட்டை பகுதியில் மீட்புப் பணிகளை பார்வையிட்டு வரும் தஞ்சை மாவட்ட கலெக்டர் ராதாகிருஷ்ணன் இப் பகுதியில் இருந்து மக்கள் உடனடியாக வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளார்.
இதே போல அந்தமானிலும் கடலின் அலைகளின் உயரம் பல மடங்கு அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தோனேஷியாவின் சுமத்ரா, அந்தமான் பகுதியில் தொடர்ந்து கடலுக்கடியில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவதால், கடல் கொந்தளித்து வருகிறது. சுமத்ராவில் ஏற்பட்ட மாபெரும் நிலநடுக்கத்தால் தான் கடந்த ஞாயிறன்று சுனாமி அலைகள் உருவாயின.
இந் நிலையில் மீண்டும் தொடர்ந்து ஏற்பட்டு வரும் நிலநடுக்கங்களால் கடல் அலைகளின் உயரம் அதிகரித்துள்ளது. மேலும் நேற்று நியூசிலாந்து நாட்டின் தெற்கு தீவுப் பகுதியிலும் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.