12-30-2004, 04:26 AM
அந்தமானில் இன்று மீண்டும் 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே தீவை காலி செய்து விட்டு தமிழர்கள் சென்னை வந்தனர்.
நில நடுக்கம்-கடல் பேரலை என்பது எல்லாம் கடந்த 26ந் தேதியுடன் முடிந்து விட்டதாக கருத வேண்டாம். அதன் விளைவாக தொடர் அதிர்வுகள் தொடர்ந்து சில நாள் இருக்கத்தான் செய்யும் என்று புவியியல் வல்லுநர்கள் கூறி வருகின்றனர். அதைஉண்மையாக்கும் வகையில் சென்னையில் நேற்று சில பகுதிகளில் அதிர்வுகள் இருந்ததாக அதிகார வட்டாரங்கள் கூறின. இந்த நிலையில் நேற்று நள்ளிரவிலும் இன்று அதிகாலையிலும் அந்த மானில் நில அதிர்வுகள் ஏற்பட்டன. இதே போல இந்தோனேசியாவிலும் இந்த அதிர்வுகள் தென்பட்டன. ஆனால் இந்த அதிர்வுகளால் எந்த பின்விளைவோ , உயிர் இழப்போ, பாதிப்போ ஏற்பட வில்லை.
அந்தமானில் ரிக்டர் அளவு கோலில் 5.1 சதவீதம் அது பதிவானது. குட்டி அந்த மானுக்கு தெற்கே இந்த நில நடுக்கம் காணப்பட்டது. இதே போல கார்னிகார் தீவு, மலாக்கா தீவு ஆகிய இடங் களிலும் நேற்று இரவில் நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.2 என பதிவானது. இங்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை. இதற் கிடையில் இன்று காலை தொடங்கி 3 முறை அந்த மான் தீவுக்கூட்டத்தில் நில அதிர்வுகள் ஏற்பட்டன. 7 மணி முதல் அடுத்தடுத்து 3 முறை பூமி அதிர்ந்தது. இது hpக்டர் அளவுகோலில் 5.7, 6.1 என பதிவானது. முதல் நில நடுக்கம் குட்டி நிகோபர் தீவில் கமோத்ரா அருகில் ஏற் பட்டது. இதன் பிறகு கார் நிகோபர் தீவு அருகே பூமி அதிர்ச்சி காணப்பட்டது. இறுதியாக 7.44 மணிக்கு அந்தமான் மேற்கு கடலோர பகுதியில் நில நடுக்கம் காணப்பட்டது. ஆனால் இந்த அதிர்வுகளில் எந்த உயிர்ச்சேதம் ஏற்பட்டதாக தொpயவில்லை.
கடந்த ஞாயிற்றுக் கிழமை முதல் இன்று வரை 54 முறை அந்தமானில் மட்டும் நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் பீதி அடைந்துள்ளனர். எனவே அந்தமான் தீவில் இருந்தால் மீண்டும் கறுப்பு ஞாயிறு வந்து விடுமோ என்று உயிருக்கு பயந்து தீவை காலி செய்து வருகின்றனர். அந்தமானில் சுனாமி பேரலையில் சிக்கி இது வரை 3000 பேர் இறந்ததாக அதி காரப்பூர்வ தகவல்கள் தொpவிக் கின்றன. அங்கு ஏராளமான தமிழர்கள் வசிப்பது குறிப்பிடத்தக்கது. அவர்களும் அந்த மானை காலி செய்து விட்டு தமிழ்நாட்டுக்கு வந்த வண்ணம் உள்ளனர். இந்தோனேசியாவில் ஏற்பட்ட பூமி அதிர்வு 5.3 என்ற அள வில் பதிவானது. அங்கு நள் ளிரவில் இந்த நில அதிர்வு காணப்பட்டது. அதே சமயத் தில் 2 முறை இந்த நில அதிர்ச்சியை உணர முடிந்தது என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தொpவிக்கின்றன.
கடந்த 26ந்தேதி ஏற்பட்ட கடல் கொந்தளிப்பால் அந்தமான் நிகோபர் தீவுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர். அப்பகுதியை தண்ணீர் Nழ்ந்து உள்ளது. இதனால் இதில் உயிர் தப்பியவர்களை இந்தியா கொண்டு வருகின்றனர். தமிழ் அகதிகளான 139பேர் சென்னை நந்தனத்தில் உள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தில் நேற்று பிற்பகல் கொண்டு தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
Dinamani,com