Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அவசர வேண்டுகோள்
#1
துரித மீட்புப் பணிகளை மேற்கொள்ள மேலதிக தொண்டர்களை இணையுமாறு தமிழர் புனர்வாழ்வுக் கழகம் அவசர வேண்டுகோள்
ஜ கிளிநொச்சி நிருபர் ஸ ஜ புதன்கிழமைää 29 டிசம்பர் 2004ää 4:28 ஈழம் ஸ
கிழக்கு மாகாணத்தில் துரித மீட்பு பணிகளை மேற்கொள்ள மேலதிக தொண்டர்களை இணையுமாறு அவசர வேண்டுகோள் ஒன்றை தமிழர் புனர்வாழ்வுக் கழகம் விடுத்துள்ளது.

மட்டக்களப்புää அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் கடற்கொந்தளிப்பு அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்;ட நூற்றிற்கு மேற்பட்ட கரையோரக் கிரமாங்களில் துரித மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்;டு வருகின்றன.

மிக மோசமான பாதிப்புக்குள்ளாகியுள்ள இப்பகுதிகளில் சுமார் 7ää000 பொதுமக்கள் இன்னமும் கண்டுபிடிக்கப்படாததால் அவர்களை மீட்கும் பணிகள் அவசர பணிகளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதேவேளையில் இந்த பகுதிகளில் பல்லாயிரம் குடும்பங்கள் இடம்பெயர்ந்து இன்னமும் அவசர மனிதாபிமான உதவிகள் கிடைக்காமல் அவதியுற்று வருகின்றனர் என அப்பகுதி புனர்வாழ்வுகழக பணியகங்கள் அறிவித்துள்ளன.

தற்போது அம்பாறை மாவட்டத்தில் வாகனப் போக்குவரத்துக்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் படகுகள் மூலமே உடனடி உதவிகள் வழங்கப்பட வேண்டியுள்ளது. இது இப்பணிகளை மேலும் தாமதப்படுத்தி வருகின்றது.

இப்பணிகளினை ஒருங்கிணைத்து மேற்கொண்டு வரும் அம் மாவட்ட புனர்வாழ்வுக் கழகத்தினர்ää உடனடி தேவைகளுக்காக உணவு மற்றும் மருத்துவ பொருட்களை கொழும்பு மற்றும் பிற பகுதிகளிலிருந்து அப்பகுதிகளிற்கு அனுப்பி வருகின்றனர்.

அத்துடன் வன்னி மற்றும் மன்னார் பகுதிகளிலிருந்து சுமார் 300 தொண்டர்கள் 10 லொறிகளில் உணவு பொருட்களுடன் மட்டக்களப்புää அம்பாறை மாவட்டங்களின் அவசர மனிதாபிமான பணிகளுக்காக சென்றுகொண்டிருக்கின்றனர்.

மேலும்ää இப் பணிகளில் ஈடுபட முன்வரும் தொண்டர்களை உடனடியாக அங்கு சென்று இணையுமாறு புனர்வாழ்வுக் கழகம் கோரியுள்ளது.

தமது மட்டக்களப்பு பணிமனையினை 00 94 65 222 53 99 எனும் தொலைபேசி இலக்கங்கள் ஊடாகவும்ää அம்பாறை மாவட்டத்தினை 00 94 67 22 79 050 எனும் தொலைபேசி ஊடகவும் தொடர்பு கொள்ளுமாறு புனர்வாழ்வுக் கழக நிறைவேற்றுப் பணிப்பாளர் கே.பி.றெஐP இன்று விடுத்த அவசர வேண்டுதலில் கோரியுள்ளார்.

இதேவேளையில் பயிற்றப்பட்ட வைத்தியர்கள்ää தாதிகள் மற்றும் மருத்துவ தொண்டர்களை தமிழர் புனர்வாழ்வுக்கழகம் கோரியுள்ளது.

இந்த அழைப்பை ஏற்று பணியாற்ற வரும் முன்வரும் தொண்டர்களை உடனடியாக தமது அனைத்துலக கிளைகளுடன் தொடர்பு கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இம்மீட்பு மற்றும் மனிதாபிமானப் பணிகளிற்கு அனைத்து தரப்பினரையும் ஒத்துழைப்புத் தருமாறு புனர்வாழ்வுக்கழகம் கேட்டுள்ளது.

குறிப்பாகää நிவாரணப் பொருட்கள் பாதிக்கப்பட்ட இடங்களிற்கு உரிய காலத்தில் துரிதமாக சென்றடைவதற்கு சிறீலங்கா அரசு மற்றும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் தனியார் பொதுநிறுவனங்கள் உதவிடல் வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் திருமலைக்கு சென்று கொண்டிருந்த நிவாரணப் பொருட்கள் அடங்கிய லொறிகள் ஹபரணைப் பகுதியில் சில இடையூறுகள் ஏற்பட்டமை தமக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது வடக்குக்கிழக்குப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள பேரழிவின் தாக்கங்களை பார்வையிடவும்ää இடம்பெறும் புனர்வாழ்வுப் பணிகளை கண்காணிப்பதற்காகவும் அனைத்துலக ஊடகவியலாளர்களை பாதிக்கப்பட்ட பகுதிகளிற்கு அழைத்துச் செல்ல புனர்வாழ்வுக் கழகம் ஏற்பாடுகளை செய்து வருகின்றது.

இன்று 29.12.04 புனர்வாழ்வுக்கழக கொழும்பு பணிமனை இதற்கான ஏற்பாட்டினை ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்தப் பயணங்களில் பங்கேற்க விரும்பும் ஊடகவியலாளர்களை தமது கொழும்பு பணிமனையுடன் தொடர்பு கொள்ளுமாறும் புனர்வாழ்வுக் கழகம் கோரியுள்ளது.
www.puthinam.com
........................................................................................................
நேற்று தமிழர் புனர்வாழ்வுக் கழக கொழும்பு காரியாலயத்துடன் நான் தொடர்புகொண்டபோது. கொழும்பு பிரதேசத்தில் சேர்க்கப்பட்ட நிவாரணப்பொருட்களை கொண்டு செல்வதற்கு லொறிகளும் தொண்டர்களின் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தனர், இதன்படி கொழும்பு பழைய மாணவர்கள் நேற்று 50க்கும் மேற்பட்டவர்கள் இதில் தொண்டர்களாக சேர்ந்துகொண்டனர், மேலும் சேரவிரும்புவர்கள் தமிழர் புனர்வாழ்வுக் கழக கொழும்பு கிளையுடன் உடனடியாக இணைந்துகொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

TRO
410/112, Buller Street
Buddhaloga Mawatha
Colombo 7

Phone: +94 11 2 69 32 54
Fax: +94 11 4 71 65 76

அல்லது
பழைய மாணவர்கள்
0094777248644 / 0094776512000
Reply


Messages In This Thread
அவசர வேண்டுகோள் - by hari - 12-29-2004, 05:24 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)