Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உலக வரை படத்தையே பூமி அதிர்ச்சி மாற்றியது !
#1
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட பூமி அதிர்ச்சி உலக வரை படத்தையே மாற்றியது. பல தீவுகள் 20 மீட்டர் தூரம் இடம் பெயர்ந்தன. பூமி அதிர்ச்சி ஏற்பட்டபோது பூமி உருண்டை தனது சுற்றுப்பாதையில் தள்ளாடியது என்று அமெரிக்க விஞ்ஞானி திடுக்கிடும் தகவலை வெளியிட்டு உள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவு அருகே கடலுக்கு அடியில் கடுமையான பூமி அதிர்ச்சி ஏற்பட்டது அல்லவா? அது மீட்டர் அளவுக்கு கோலில் ஏறதாழ 9 இருந்தது. இது 1964-க்கு பிறகு உலகில் ஏற்பட்ட மிகப்பெரிய பூமி அதிர்ச்சி ஆகும்.

இந்த பூமி அதிர்ச்சியால் ஏற்பட்ட சுனாமி கடல் அலைகளால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியானார்கள்.

இந்த பூகம்பத்தால் ஏற்பட்ட விளைவுகள் பற்றி அமெரிக்க புவியல்துறையை சேர்ந்த விஞ்ஞானி கென் ஹட்நட் கூறியதாவது

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சுமத்ரா தீவு அருகே ஏற்பட்ட பூமி அதிர்ச்சி சக்தி வாய்ந்தது. அது தனது அச்சில் சுற்றும் பூமி உருண்டையையே தள்ளாட வைத்தது. பிராந்திய வரை படங்களையே மாற்றி விட்டது.

அந்த பூமி அதிர்ச்சி பல தீவுகளை 20 மீட்டர் அளவுக்கு இடம் மாற்றி இருக்கலாம். அதன் மூலம் உலக வரை படத்தையே மாற்றி இருக்கிறது. சுமத்ராவின் தென்மேற்கு கரையில் இருந்த பல சிறுதீவுகள் தென்மேற்காக 20 மீட்டர் தூரம் நகர்ந்து இருக்கலாம். இது பெரிய விலகல் ஆகும்.

இந்தோனேசியாவின் வட மேற்கு விளிம்பு தென்மேற்காக 36 மீட்டர் வரை நகர்ந்து இருக்கும். கடலுக்கு அடியில் இருந்த 2 பகுதிகளும் உரசிக்கொண்ட தால் ஏற்பட்ட சக்தி தனது அச்சில் சுற்றிக்கொண்டு இருந்த பூமியை தள்ளாட செய்து இருக்கிறது. அப்போது பூமியின் அசைவை நாம் கவனித்து இருக்கலாம்.

பூமி அதிர்ச்சி ஏற்பட்டபோது வெளியான பெரும் சக்தியும் திடீரென்று ஏற்பட்ட எடை வித்தியாசமும் பூமியை அதன் சுற்றுவட்டபாதையி;ல் தள்ளாடச் செய்து இருக்கும்.

இவ்வாறு கூறினார்.

ரஷிய பூமி அதிர்ச்சி ஆராய்ச்சி மைய நிபுணர் கோல் டன் கொல்ரோடா கூறுகையில் பூமி அதிர்ச்சியின் போது சுமத்ரா தீவு கடல் மட்டத்தில் இருந்து உயர்ந்து இருக்கலாம். பர்மா பீடபூமியைவிட இந்திய பீடபூமி கீழே இறங்கி இருக்கலாம். பூமி அதிர்ச்சியின் போது தீவுகளின் அசைவு பக்கவாட்டில் இல்லாமல் செங்குத்தாகத்தான் இருக்கும் என்று கூறினார்.
Reply


Messages In This Thread
உலக வரை படத்தையே பூமி அதிர்ச்சி மாற்றியது ! - by ஊமை - 12-29-2004, 01:58 AM
[No subject] - by thamizh.nila - 12-29-2004, 02:40 AM
[No subject] - by kuruvikal - 12-29-2004, 12:09 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)