Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
த.வி.புலிகளின் தொலைபேசி செய்தி தொகுப்பிலிருந்து......
#1
வரலாற்றுப் போரழிவு என்று சொல்லத்தக்கவகையில் தமிழர் தாயகத்தில் இயற்கை மேற்கொண்ட அனர்த்தத்தினால் ஏற்பட்ட உயிரிழிப்பு பத்தாயிரத்தை தாண்டிவிட்டிதாக தற்போது கிடைத்த செய்திகள் தெரிவித்துள்ளன.

மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ள உடலங்களை வைத்தே இந்த மதிப்பீடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இலங்கைத் தீவு முழுவதும் 13 ஆயிரத்து 500 பேர் உயிரிழந்திருக்கின்றனர் என்று அரசு தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முல்லைத்தீவில் பிரதேசத்தில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பின் காரணமாக 1600 பேர் உயிர் இழந்துள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது இதுவரை கண்டெடுக்கப்பட்ட 800 சடலங்கள் இன்று முள்ளியவளை மயானத்தில் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவில் 25 ஆய்pரம் மக்கள் இந்த அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதே நேரத்தில் கடல் கொத்தளிப்பு காரணமாக 15 போராளிகள் சாவடைந்துள்ளதாக தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்செல்வன் கூறியுள்ளார்.

இன்று மாலை ஆறு மணிவரை முல்லை நகரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 772 சடலங்களும் வடமராட்சி கிழக்கு பகுதயில் 281 சடலங்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 722 சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன

முல்லைத்தீவு மற்றும் வடமராட்சிப் பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களும் இன்று மாலையும் தொடர்ந்தும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

தமிழர் தாயகம் எங்கும் வரலாற்றில் என்றுமே இல்லாதவாறு இடம்பெற்றிருக்கும் பேரழிவுகளினால் மக்கள் தமது உடைமைகள் அனைத்தையும் இழந்து சொல்லொணாத் துயரங்களை அனுபவிக்கின்றனர் என்று தமிழ் ஈழ அரசியல் துறைப் பொறுப்பாளர் சுப தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.

அனைத்துலக நாடுகள் மற்றும் அமைப்புக்களிடம் இருந்து உதவிகள் எதுவும் இதுவரை கிட்டாத நிலையில்ää அவதியுறும் ஈழத் தமிழ் மக்களுக்கு விடுதலைப் புலிகளின் போராளிகள்ää தமிழர் புனர்வாழ்வுக் கழகம் மற்றும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றனர் என்றும் தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

தலைமன்னார் மற்றும் மன்னாரில் இன்று பெருமழையுடன் புயல் காற்று வீசியுள்ளது. எனினும் பாரிய சேதம் எதுவும் ஏற்படவில்லை. தமிழகத்தின் தென் பகுதியில் பெய்த பெருமழைää புயலின் எதிரொலியாகவே தலைமன்னார் கடலோரம் மற்றும் அதனை அடுத்துள்ள பகுதியிலும் இன்று முழுவதும் சீரற்ற கால நிலை நீடிக்கிறது

மட்டக்களப்பில் இன்று மாலை வரை 796 சடலங்கள் மருத்துவ மனையில் ஒப்படைக்கப்பட்ட பின்னர் பல சடலங்கள் அடையாளம் காணப்படாத நிலையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு வாவியில் மட்டும் இன்று 15ற்கும் மேற்பட்ட சடலங்கள் மிதந்து வந்து கரை ஒதுங்கியுள்ளன. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் 25க்கும் மேற்பட்ட சடலங்கள் அப்பகுதி மக்களினால் மீட்கப்பட்டு புதைக்கப்பட்டன.

இதேவேளை அம்பாறை மாவட்டம் பாண்டிருப்பில் ஞாயிறு அறநெறி பாடசாலை மாணவர்கள் 70 பேர் வரை ஆசிரியையுடன் கடலில் அடித்துச்; செல்லப்பட்டுள்ளனர்.

திருக்கோணமலை மாவட்டத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை ஏற்பட்ட கடல் கொந்தளிப்பு காரணமாக பல ஆயிரக்கணக்காண மக்கள் வீடுவாசல்களை இழந்ததோடு பல நூற்றுக்கணக்கானோர்இறந்துள்ளனர். மூதூரில் 6000 குடும்பங்களும். கிண்ணியாவில் 6800 குடும்பங்களும். பட்டணமும் சூழலும் பகுதியில் 12ää000க்கும் அதிகமான குடும்பங்களும்ää குச்சவெளி பிரதேசத்தில ;4500 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் 211பேரும்ää கிண்ணியாவில் 229 பேரும்ää திரு;கோணமலையில் 18 பேரும்ää நிலாவெளி பிரதேசத்தில் 35 பேரும்ää உயிரிழந்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பு காரணமாக பாதிப்புற்ற பகுதிகளை விடுதலைப் புலிகளின் மட்டு அம்பாறை கட்டளைத் தளபதி கேணல் பானு நேரடியாகச் சென்று பார்வையிட்டார்.

அத்துடன் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளையும் கேணல் பானு மேற்கொண்டார். இவருடன் மாவடி முன்மாரிக் கோட்ட இராணுவத் தளபதி ரமணன் உட்பட பலர் சென்றிருந்தனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் நாவலடிää கல்லடிää காத்தான்குடி ஆகிய பகுதிகளுக்கு இவர்கள் சென்றிருந்தனர்.

மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர் இ.கௌசல்யன் களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள அழிவுகளை சென்று பார்வையிட்டார்.
கரையோர கிராமங்களிலிருந்து வெளியேறியுள்ள மக்களில் 75 ஆயிரம் பேர் வரை தமது கட்டுப்பாட்டு பிரதேசத்திற்குள் வந்துள்ளதாக விடுதலைப் புலிகளின் மாவட்ட தளபதி ராம் தெரிவித்தார்.
50க்கும் மேற்பட்ட நலன்புரி நிலையங்களிலும்ää தனியார் வீடுகளிலும் தங்க வைக்கப்பட்டு இவர்கள் பராமரிக்கப்பட்டு வருவதாகவும் ராம் தெரிவித்தார்.
Reply


Messages In This Thread
த.வி.புலிகளின் தொலைபேசி செய்தி தொகுப்பிலிருந்து...... - by ஊமை - 12-28-2004, 09:37 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)