Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இதயம் தாங்குதில்லையே...
#1
[b]<span style='color:red'>இதயம் தாங்குதில்லையே..
<i>[size=14]அழிவு இப்படியும் வருமா?
இந்தக் கடல் நீர் கூட
இத்தனை ஆயிரம் பேரை திண்னுமா?
உன்னையே அன்னையாய்
உன்னையே தெய்வமாய்
உலவிய உறவுகளை
உன் கோரப் பசிக்கு இரையாக்கியவளே
இதயங்கள் எங்கும் சோகம்
திசை எல்லாம் அழுகையின் குரல்
பொத்துவில் முதல் பொலி கண்டி வரை
போன உயிர்கள் எத்தனை எத்தனை
யுத்தம் தந்த அழிவு
சத்தம் இன்றி நின்று விட
சத்தம் இன்றி நீ சந்ததி அழித்து விட்டாய்
உறவை இழந்த உறவின் குரல்
உலகை விட்டு பிரிந்த
ஆன்மாவின் ஏக்கக் குரல்
கேட்க வில்லையா? உனக்கு
முற்றத்தில் விளையாடிய குழந்தை
எண்ணவில்லை தான் மரணிப்பேன் என்று
அதன் எதிர் கால கனவுகள் எங்கே?
அதன் நினைவகள் எங்கே?
சாவு வரும் எனறு கனவு கண்டிருக்குமா?
அந்தப் பிஞ்சு
அழுவதற்க்கு கூட அவ காசமில்லை
அடித்து சென்று விட்டாய்-இன்று
அழுவதற்க்கு யாருமில்லை
குப்பைக்குள் குப்பையானார்
மண்ணுக்குள் மண்ணானார்
கடலுக்குள் மீனுக்கு இரையானார்
அறிக்கை விடுவோருக்கு தெரியாது
இதன் வேதணை...
ஆறுதல் சொல்வோருக்கு புரியாது
இதன் சோகம்
அழிந்தது அழிந்தது தான்
ஆறுதல் அதற்க்கு பரிகாரமாகாது
உயிருக்கு நிகர் ஏதுமுண்டோ
இறுதி வரை உங்களுடன் நாமில்லை
இழப்புக்களும் கணக்கில்லை
உயிருடன் மீண்ட உறவுகளுக்காய்
உலகத்தமிழ் உறவுகள் நாம்
அணி திரள்வோம்..
இது காலத்தின் கட்டாயம்
இயற்கையின் நிர்ப்பந்தம்
உங்களை எண்ணி
கண்கலங்கி நிற்க்கிறோம்
உலக தமிழர் நாம்
உரிமை பறிப்பை உறுதியாய்
எதிர் கொண்டோம்
இயற்கையின் அழிப்பு தனை
இதயம் தாங்கு தில்லை
இனி யொரு பொழுதில் இப்படியோர்
அழிவு வேண்டாம் எமக்கு இப் பூமியிலே...</span></i>
<img src='http://host155.ipowerweb.com/~tamilnaa/photos/mullai20041227/K%20(31).jpg' border='0' alt='user posted image'>
[size=18]நேசமுடன் நிதர்சன்

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
இதயம் தாங்குதில்லையே... - by Nitharsan - 12-28-2004, 08:00 AM
[No subject] - by Nitharsan - 12-28-2004, 08:11 AM
[No subject] - by thamizh.nila - 12-29-2004, 06:23 AM
[No subject] - by thamizh.nila - 12-29-2004, 06:26 AM
[No subject] - by Mathan - 12-29-2004, 02:20 PM
[No subject] - by kavithan - 12-30-2004, 02:52 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)