Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
North and East 4000 Tamils Killed including 1200 Child
#3
இலங்கைத் தீவகத்தில் 13390 பேர் பலி தமிழீழத்தில் மட்டும் 7000 பேரை பறிகொடுத்து விட்டோம்!!
கிளிநொச்சி நிருபர் திங்கட்கிழமை 27 டிசம்பர் 2004 15:46 ஈழம்

இலங்கைத்தீவு முழுமையிலும் 13 ஆயிரத்து 390 பேர் கடற் புவி நடுக்கத்தால் இறந்துள்ளதாக சிறிலங்கா அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் மிக அதிக இழப்பு தமிழர் தாயகத்தில் ஏற்பட்டுள்ளது.

தமிழர் தாயகத்தில் இறந்தோர் எண்ணிக்ககை 7000 எனத் தெரிவிக்கப்படுகின்றது.

அம்பாறை முதல் யாழ்ப்பாணம் வரை உயிரிழப்புகக்ளுடன் பத்தாயிரம் மக்கள் காயமடைந்துமுள்ளனர்.

சிறிலங்கா அரசிற்கு பெருமளவில் சர்வதேச உதவிகள் வந்து கொண்டிருக்கின்ற நிலையிலும் தமிழர் தாயகப் பகுதிகளுக்கு அரச நிவாரணப் பணிகள் எதுவும் இதுவரை வந்து சேரவில்லை.

நிவாரணப் பணிகள் தமிழர் தாயகத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளாலும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தாலும் உள்ளுர் அரச சார்பற்ற நிறுவனங்களாலும தமிழ் மக்களாலும் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அரச அதிகாரிகள் போதிய நிதியை சிறிலங்கா அரசாங்கம் வழங்காத காரணத்தால் அவர்களால் மக்களுக்குரிய நிவாரணப் பணிகளை மேற்கொள்ள முடியாது உள்ளதாக அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

முல்லைத்தீவு அரச அதிபர் செயலகம் கரைதுறைப் பற்று உதவி அரச அதிபர் செயலகம் முல்லைத்தீவு நகரில் கடல் பூகம்பத்தால் அழிவுகளைச்; சந்தித்துள்ளன.

புதினம்
<b> .</b>

<b>
.......!</b>
Reply


Messages In This Thread
[No subject] - by vasisutha - 12-27-2004, 05:23 AM
[No subject] - by tamilini - 12-27-2004, 07:03 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)