12-27-2004, 06:26 PM
ஓம் நல்லையன் நீங்கள் கூறியதை தான் நேற்று தமிழர் புனர்வாழ்வு கழக பொறுப்பாளர் றெஜி அவர்களும் தெரிவித்திருந்தார்.. வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அழிவுகளையும் உயிர் இழப்புக்களையும்.. வெளியிடவில்லை.. இதை மறைக்க முயல்வதாக.. அவர்கள் தெற்குப்பகுதியில் நடந்த அனர்த்தங்களை மட்டும் தான் கதைக்கிறார்கள் காட்டுகிறார்கள் என்று.. வேறும் உறவுகள் வானொலி மற்றும் தொலைக்காட்சிகளிற்கு தொடர்பு கொண்டு தங்களது.. ஆதங்கங்களை வெளியிடுகிறார்கள்.. பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் உதவிகள் சென்றடைய வேண்டும் என்றால் இவை யாவருக்கும் தெரியப்பட வேண்டும்.. BBC உடன் தொடர்பு கொண்டு பலர் இதனை தெரிவித்த பொழுது அதற்குரிய ஆதாரங்கள் தமக்கு வேண்டும் என்று அவர்கள் கூறியிருக்கிறார்கள். தீபம் தொலைக்காட்சியில் காலை கூறினார்கள் ஆதாரங்களை தாங்கள் அனுப்பியுள்ளதாக..ஆனால் அவர்கள் ஒளிபரப்பு செய்வது தங்கள் கையில் அல்ல மக்கள் கையில் தான் உள்ளது என்று.. இதனை அனைத்து உறவுகளும் கருத்தில் எடுத்து..தங்கள் வேண்டுகோள்களை அவர்களிடம் தெரிவித்து. நமது மக்களிற்கு உதவிகள் சென்றடையும் வழி செய்ய வேண்டியது.. அனைவரதும் கடமையாகும்.. சகலதையும் இழந்து நிர்க்கதியாய் இருக்கும் அவர்களிற்கு இவர்கள் கொடுக்கப்போகும் நிவாரன உதவியால் முழுமையான இழப்புகளை நிறைவு செய்யாவிடினும்.. குறைந்தளவு அத்தியாவசிய தேவைகளை எனினும் கிடைக்க வழி செய்வோம்..!
இந்த மின்னஞ்சல் முகுவரிக்கு உங்களிடம் இருக்கும் படங்கள் மற்றும் வீடியோ தொகுப்பு மற்றும் கோரிக்கைகளை அனுப்ப முடியும்...
yourpics@bbc.co.uk
இந்த மின்னஞ்சல் முகுவரிக்கு உங்களிடம் இருக்கும் படங்கள் மற்றும் வீடியோ தொகுப்பு மற்றும் கோரிக்கைகளை அனுப்ப முடியும்...
yourpics@bbc.co.uk
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

