Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உதவுங்கள்
#3
தாயகத்தில் ஏற்ப்பட்டுள்ள இயற்கை அனர்த்தத்திற்க்க பலியாகிய எம்மினிய உடன் பிறப்புக்களுக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்.....

எதிரியில் படையெடுப்பால் அழிக்கப்பட்ட எம்தேசம் மீண்டும் ஓர் பாரிய அழிவினை இயற்கையினால் சந்தித்திருப்பது. உலகெங்கும் இருக்கும் மக்களை கண்ணீர் மழையில் தவிக்க விட்டுள்ளது. முன்பொரு போதும் இல்லாத இவ்வாற அழிவினை தாயகம் சந்தித்த போது நாம் என்ன செய்யலாம்? கிட்டத்தட்ட 11000 மக்களை பலி கொண்ட இந்த கடலலையின் கொந்தளிப்பை யாராலும் தடுக்க முடியாது அனால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடும் எமது உறவுகளுக்கு எம்மால் உதவ முடியுமல்லவா? இந்த வேளையிலும் அரசியல் நடத்தும் பஞ்சோந்திகளை அடியோடு விரட்டி விட்டு எம்மால் செய்ய கூடிய இதையாவது எமது மக்களுக்கு செய்ய வேண்டாமா? தனது நாடு ஒருமைப்பாடு என்று பேசும் பேரின வாதிகள் எமக்கு உதவ பின்னிற்க்கிறார்கள்.... எங்கள் கிராமங்களை சல்லடை போட வந்த உலங்கு வானூர்திகள் எம்மை காக்க வரவில்லை... எமது மீன் பிடி படகுகளை அழிக்க வந்த டொராக்களும் எமக்கு உதவ வில்லை.... ஏன்?????? இது எமது நாடு அதனால் தான் இந்த பார பட்சம்.... ஆம் இத தமிழீழ தாய் திர நாட்டில் நடைபெற்ற அழிவு எம்மை நாம் தான் காக்க வேண்டும்... பாதிக்கப்பட்ட பகுதியில் வன்னிப்பிரதேசம் தவிர ஏனைய பகுதிகளில் மீட்பப் பணி மந்த கதியில் நடைபெறுவதாய் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன...மற்றப்பகுதிகள் இலங்கை இராணுவத்தின் கட்டப்பாட்டு பகுதி என்பதால் தமிழர் தரப்பால் உடனடி மீட்பப் பணிகளை செய்ய முடியவில்லை..... தமிழர் புனர்வாழ்வுக்கழகம் தனது பணியை செய்ய நிதியொர் பிரச்சினையாய் இருக்கிறது எனவே... உங்கள் உறவுகளுக்காய் நீங்கள் கொடையளிக்க வாருங்கள்.....

நீங்கள் உங்கள் நிதிகளை ஐ.பி.சி தமிழ் ஆகிய ஊடகங்களுடாக வட அமெரிக்காவிலும் வழங்கலாம் மற்ற நாடுகளில் உள்ளவர்கள் உங்கள் பணத்தை சீ.ரீ.ஆர் வானொலிக்கு விசா காட் மூலம் அனுப்பலாம் அவற்றிற்கான இணைப்புக்கள் கீழே தரப்படும்.....

அழிவுகளின் அவலத்தை நிழற்ப்படங்களுடாக காண
http://www.eelavision.com

வட அமெரிக்க மற்றும் சர்வதேச தமிழர்கள் கனடிய தமிழ் வானொலியூடாகவும் நிதி வழங்கலாம்
www.ctr24.com

ஐ.பி.சி தமிழ் ஊடாக நிதி வழங்க விரும்புவோர் அழையுங்கள் 0044 2081 0000 00



உடனடிச் செய்திகளை

தமிழ்நெற்
www.tamilnet.com
புலிகளின் குரல்
www.pulikalinkural.com

நிதர்சனம்
www.nitharsanam.com

புதினம்
www.eelampage.com

ஐ.பி.சி
www.ibctamil.co.uk

சீ.ரி.ஆர்
www.ctr24.com

ஜேர்மன் தமிழ் வானொலி
www.germantamilradio.com

சூரியன் எப்.எம்
www.uthayamfm.com

ஈழத்தமிழ்.கொம்
www.eelatamil.com

ஆகிய ஊடகங்களின் இணையத்தளங்களுடாகவும். நேரடியாகவும் அறிந்து கொள்ளலாம்.......

சோகமுடன் நிதர்சன்

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
உதவுங்கள் - by vasisutha - 12-27-2004, 05:32 AM
[No subject] - by kavithan - 12-27-2004, 06:11 AM
[No subject] - by Nitharsan - 12-27-2004, 07:10 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)