12-27-2004, 05:47 AM
அரசியல் அதிர்வுகள்
காலத்திற்குக்க காலம் ஏற்படும் வேறுபட்ட நிகழ்வுகளின் மீது, அரசியல்வாதிகளின் பார்வைகள் வேறாக இருக்கின்றன. அந்தந்த நிகழ்வுகளை வைத்து அரசியல் ஆதாயம் தேட முனைவதில் இவர்கள் படு கில்லாடிகள். மக்களின் அனுதாப அலைகளை அல்லது பாராட்டுக்களைப் பெற, முக்கியமான நிகழ்வுகள் இந்த அரசியல்வாதிகளுக்கு அவசியம் தேவைப்படுகின்றன. எந்த வழியிலாவது, இந்த நிகழ்வுகளைத் தமக்குச் சாதகமாக்கிக் கொள்வதே இவர்கள் குறியாக இருக்கின்றது.
பூகம்பம் என்பது, நிலப்பரப்பில் உள்ள பல உயிர்களையும், கட்டடங்களையும் அழிப்பதாக இருக்கலாம். ஆனால் அதே சமயம் இதே பூகம்பம், சில வேளைகளில், அரசியல் "நிலப் பரப்பையும்" மாற்றி அமைத்து விடுவதுண்டு. அண்மையில், ஈரானில் பேரழிவை ஏற்படுத்திய ஈரானின் பூகம்ப நிகழ்வு இதற்கு விதிவிலக்கு இல்லைப் போலும். பாதிப்புற்றவர்களுக்கு, அமெரிக்கா அளிக்க வந்த உதவிகளை, ஈரான் ஏற்றிருக்கின்றது. வழமையாக ஆளை ஆள் சாடிய வண்ணம் இருக்கும் இரு நாடுகள், இப்படி மன ஒப்புதலோடு, நடந்து கொண்டிருப்பது, அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வைக் கிளப்பி இருக்கின்றது.
ஈரான் தனது அணுஉற்பத்தி நிகழ்ச்சி நிரல்களை அகில உலகரீதியாக இயங்கம் அணுசக்தி ஏஜன்சி பரிசோதிக்க சம்மதம் அளித்து, ஒப்பந்தம் செய்த நிகழ்வை அடுத்தே, அமெரிக்கா தனக்களித்த உதவியை ஈரான் மறுக்காது ஏற்றிருக்கின்றது. அண்மையில் சம்பவித்த இன்னொரு உதாரணத்தையும் இங்கு குறிப்பிட்டுச் சொல்ல முடியும். 1999ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், துருக்கியைப் பெரும் பூமி அதிர்ச்சி தாக்கியதை அடுத்து, கிரீஸ், தன் பங்கிற்கு உடனடியாகச் செய்த உதவி, எலியும் பூனையுமாக எட்ட நின்று முறைக்கும் துருக்கி-கிரீஸ் உறவில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்தப் பூகம்பம் மூலம் 15,000 உயிர்களை வரை இழந்த துருக்கிக்கு, இப்படியொரு சகாயம் கிடைத்தது, கிரீஸ் நாட்டின் வெளிவிவகார அமைச்சரை "உச்சத்தில்" இவரைத் துருக்கி மக்கள் தூக்கி வைக்க உதவிற்று. உடனடியாக உதவியை வழங்காத துருக்கி இராணுவத்தின் அசட்டை பலராலும் விமர்சிக்கப்பட்டது.
இதேபோல 1972இல், நிக்ககராவாவில் சம்பவித்த அரசியல் பூமி அதிர்வை எடுத்துக் கொள்ளலாம். தலைநகரம் அழிக்கப்படும்வரை. வெளி உலகின் பார்வை, சர்வதிகார ஆட்சியிலிருந்த நாட்டில் விழவில்லை.அப்பொழுதிருந்த ஜனாதிபதி, மீட்புப் பணிகளை ஒழுங்காகத் திட்டமிடவில்லை. அழிந்த கட்டடங்களை திரும்ப எழுப்பும் பணியிலும் ஆர்வமில்லை.இதனால் ஆட்சியாளர் தூக்கியெறியப்பட்டு, 1979இல், புதியவர் ஒருவர் ஆட்சிக்கு வந்தார். அழிவு பெரிதாக இடம்பெற்ற Bam நகரிலும் இதே நிலை வரலாம், அரசியல் மாற்றம் வரலாம் என்று அவதானிகள் கருதுகின்றார்கள்.
பத்திரிகையாளர்கள், இடிபாடுகள் நிறைந்த பகுதிகளைப் பார்வையிட்டபோது, மக்களிடையே அதிருப்தி காணப்பட்டதைக் கவனித்து இருக்கின்றார்கள். உணவு, உடைகளுடன் வரும் வாகனங்களுக்கு பின்னால் மூச்சிரைக்க ஓடியதுதான் மிச்சம், எமக்கு எதுவுமே கிடைக்கவில்லை என்று அதிருப்தி மேலீட்டுடன் மக்கள் இவர்களிடம் முறையிட்டு இருக்கின்றார்கள். தனது 18 குடும்ப அங்கத்தவர்களை இழந்து விட்ட எஸ்மெட் என்ற பெண்மணி, வானத்தைக் கூரையாக வைத்துக் கொண்டு தன் நெருங்கிய உறவினர்கள் சிலருடன், தனது தரைமட்டமாகி விட்ட வீட்டுக்கு முன்னால் இரவைக் கழிக்க வேண்டி இருப்பதாகக் கவலையுடன் குறிப்பிட்டு இருக்கின்றார்.
"இரண்டு கூடாரமடிக்க இவர்கள் உதவினால், அது பெரிய உதவியாக இருக்கும். ஆனால் அவர்கள் எம்மை மறந்து விட்டார்கள்" என்று இந்தப் பெண்மணி கூறும்போது, எந்த அளவுக்கு இந்தப் பெண் பாதிக்கப்பட்டு இருக்கின்றாள் என்பதை உணர முடிகின்றது. "வெளியே குளிர்கின்றது. பசி வயிற்றைக் கிள்ளுகின்றது. சாப்பிடப் போதுமான அளவு பாண் இல்லை" என்று மேலும் அங்கலாய்க்கின்றார் இவர்.
90ம் ஆண்டு வரையிலான காலகட்ட பூகம்ப நிகழ்வுகளை நோக்கினால், 90ம் ஆண்டு ஜூன் மாதம் 21ந்திகதி ஈரானின் Glan என்னுமிடத்தில் இடம்பெற்ற மோசமான பூகம்பத்தில் 40,000 மக்கள் மரணித்தது தெரிய வரும்.
இன்னொரு பாரிய பூகம்பம் 88ம் ஆண்டு டிசம்பர் மாதம் 7ந் திகதி வட மேற்கு ஆர்மேனியாவில் இடம்பெற்றது. 76ம் ஆண்டு சீனாவின் Tangshan என்னுமிடத்தில் ஏற்பட்ட இராட்சத பூகம்பம் 500,000 அப்பாவி உயிர்களைப் பலிகொண்டது. இவை மூன்றும் குறிப்பிடத்தக்க பெரிய பூகம்பங்களாகும்.
எந்த இழப்பிலும் தமக்கு ஆதாயந்தேட முயலும் அரசியல்வாதிகள் வித்தியாசமானவர்கள்தான்.
நன்றி - go2tamil

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>