12-27-2004, 04:57 AM
இரக்கமற்ற இயற்கை
இன்றைய பொழுது எல்லோருக்கும் ஒன்றாகத்தான் விடிந்தது. ஆனால் எல்லோருக்கும் தொடரவில்லை.
இரண்டு தினங்களுக்கு முன்பாகத்தான் சில வாண்டுகளுடன் சேர்ந்து 'The day after tomorrow' என்கிற ஹாலிவுட் படம் பார்த்திருந்தேன். அதில் வந்த ராட்சஸ அலைகள் பிரமிப்பை ஏற்படுத்துவதாக இருந்தது. கண் இமைக்காமல் பார்த்து ரசித்தோம். ஆனால் அதே அலைகள் அடுத்த இரண்டு தினங்களில் நிஜத்திலும் உண்டாகும், இவ்வளவு உயிர் சேதங்களை ஏற்படுத்தும் என்று கற்பனையில் கூட எண்ணியிருக்கவில்லை. நான் மட்டுமல்ல இன்று காலை சென்னையில் ஏற்பட்ட நில அதிர்வுகளின் விளைவாக கடலில் இவ்வளவு பெரிய ராட்சஸ அலைகள் உண்டாகும் என்று ஒருவருமே நினைக்கவில்லை. காலையில் உணர்ந்த நிலநடுக்கத்தை ஒருவித 'த்ரில்லிங்' அனுபவமாகவே எல்லோரும் எடுத்துக் கொண்டார்கள். நம்ம ஊருக்கெல்லாம் புயல், பூகம்பமெல்லாம் எதுவும் வராது என்கிற நம்பிக்கை பொதுவாக நம்மிடையே உண்டு. அப்படித்தானே நமக்கும் சொல்லி வரப்பட்டது. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று எதையும் எடுக்காமல் இருந்து விட்டோம். இந்த அசட்டையின் காரணமாக இப்போது பல்லாயிரக் கணக்கான உயிர்களை இழந்திருக்கிறோம்.
இன்று பனை மர உயரத்துக்கு விஸ்வரூபம் கொண்டு கோர தாண்டவமாடிய இந்த அலையின் பெயர் சுனாமி(Tsunami) என்கிறார்கள். பசுபிக் கடல் பிராந்தியத்தில் மட்டுமே தென்பட்டு வந்த சுனாமி இந்திய கடற்பகுதியில் தோன்றியுள்ளது இதுவே முதல் முறை. பூமிக்கடியில் அதிர்வுகள் ஏற்படும்போது அங்கே நிகழும் நில மாற்றங்களால் கடல் நீரானது பெரிய அளவில் வெளியேற்றப்படும். அப்போது அது பல மீட்டர்கள் உயரத்துக்கு எழுந்து பல மைல் வேகத்தில் கரையை கடக்கும். பிறகு அதுவே வடிந்து மீண்டும் கடலுக்குள் சென்று விடும் என்கிறார்கள். சுனாமி என்றால் ஜப்பான் மொழியில் மிகப்பெரிய கடல் அலை என்று பெயராம்.
இன்று நேர்ந்த சம்பவங்களைக் கொண்டு தனுஷ்கோடியை அழித்த, லெமூரியா கண்டத்தை விழுங்கிய வரலாற்று பேரழிவுகள் எப்படி இருந்திருக்கும் என்பதை உணர முடிகிறது.
இந்த பூகம்பம் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளை உற்று நோக்கும் போது எனக்கு ஒரு சந்தேகம் உண்டாகிறது. இது உண்மையில் மையம் கொண்டது இந்தோனேஷியா கடல் பகுதியில். அதன் பாதிப்பு தான் இந்தியா வரை நீண்டது. ஆனால் சேதங்களும், உயிரிழப்பும் இந்தியாவிலும், இலங்கையிலும் தான் அதிகம் இருக்கிறதே தவிர இந்தோனேஷியாவிலோ அல்லது அதன் அருகேயிருக்கும் தாய்லாந்திலோ அதிக பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் இல்லையே. உதாரணமாக இந்தோனேஷியாவின் மொத்த உயிரிழப்பு சுமாராக 2000, தாய்லாந்தில் 200. இது நமது நாகப்பட்டினத்தில் மட்டும் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளை விட குறைவு. பொதுவாக நிலநடுக்கம் மையம் கொண்டுள்ள இடத்தில் தானே பாதிப்பு அதிகமாக இருக்கும்? ஒருவேளை கடலோரம் குடிசை போட்டு வாழ்பவர்களின் எண்ணிக்கை இந்த இரண்டு நாடுகளில் தான் அதிகமோ?
இறந்தவர்கள் அனைவரும் கடலோர குப்பங்களில், குடிசைகளில் ஜீவித்து வந்த ஏழைகள். ஏழைகள் என்றால் இருப்போருக்குத்தான் இளக்காரம் என்றால் அந்த இயற்கைக்கும் கூட இரக்கமில்லாமல் போய் விட்டது.
துயரமான நினைவுகளைத் தாங்கிய கருப்பு ஞாயிறாக இன்றைய தினம் நம்மை கடந்து செல்கிறது. 26/12/2004 தமிழக வரலாற்றின் மறக்க முடியாத தேதியாக அமைந்து விட்டது. கனத்த மனதுடன் படுக்கைக்குச் செல்கிறேன்.
நன்றி - ராஜா

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>