Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இய்ற்கையின் சீற்றத்தால் எம் தாயகப்பூமி அழிப்பு
#14
இயற்கையின் சீற்றத்தில் இலங்கை

<img src='http://kavithai.yarl.net/archives/top.srilankawavesap.jpg' border='0' alt='user posted image'>

தெற்கு,தென்கிழக்கு ஆசியப் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள நில நடுக்கம் மற்றும் கடல்கோள் காரண்மாகப் பெருமளவு உயிர் உடமை இழப்புகள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன.

இதில் இலங்கை மற்றைய நாடுகளைவிடப் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.கிழக்கு,தென்கிழக்கு வடகிழக்கு இலங்கை தென்னிலங்கையின் சில பகுதிகள் முற்றாகச் செயலிழந்து போயுள்ளன.


கொழும்பைத் தொடர்புகொண்டபோது அங்கிருந்து கேள்விப்படும் செய்திகள் பீதியை உண்டு பண்ணுகின்றன.கொழும்பு தெற்குப் பிரதேசங்களான வெள்ளவத்தை,தெகிவளை கல்கிசை பகுதிகளில் கடல்நீர் கரையை மேவி வருவதும் திடீரென வற்றிப் போவதுமாக இருக்கின்றதாம்.போதாக்குறைக்கு வானிலை எதிர்வு கூறல்கள்: இன்று மாலைக்குள் மீண்டுமொரு நிலநடுக்கமும் கடல்ப் பெருக்கும் கிழக்கிலங்கையையும் தென்னிலங்கையையும் தாக்கலாம் என எச்சரித்துள்ளன.

கரையோரப் பகுதி மக்களை பாதுகாபான பிரதேசங்களுக்கு இடம்பெயருமாறு கேட்கப்பட்டுள்ளது.நாட்டில் அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.பெரும்பாலான பகுதிகளுடன் தலைநகரின் சில பிரதேசங்களும் தாக்குதலுக்கு உள்ளானதால் மீட்புப் பணிகள் மிக மிக மெதுவாகவே நடைபெறுகின்றது.

ஏனைய நாடுகளிடம் அவசர உதவி வேண்டிக் கோரிக்கை விடப்பட்டுள்ளது.கிழக்கிலங்கையுடனான தொலைபேசித் தொடர்புகள் முற்றாகச் சீர்குலைந்துள்ள வேளையில் மேலதிக இழப்புகளைத் தவிர்க்கும் பொருட்டு மின்சாரம் வெட்டப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு அம்பாறை பிரதேசங்களில் கூடியழவு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள அதேவேளை புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமான முல்லைத் தீவும் பாரியளவில் கடல்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்கள் போக்குவரத்துகள் துண்டிக்கப்பட்டதால் முல்லைதீவில் ஏற்பட்ட சேதவிபரம் தெரியவில்லை ஆயினும் தகவல்களை வைத்துப் பார்க்கும் போது உயிரிழப்பு சில நூறுகளாக இருக்கலாம் என ஒருவர் சொன்னார்.

வடமராட்சி கிழக்குப் பிரதேசமும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது.சாவகச்சேரி,பருத்தித்துறை வைத்தியசாலைக்கு பிணங்கள் வந்தவண்ணம் இருக்கின்றனவாம்.கடரையோரப் பிரதேசங்களான மாதகல்,காரைநகர்,தீவுப்பகுதிகள்,பருத்தித் துறை ஆகியனவும் பாதிக்கப்பட்டுள்ளன.

கடல் நெடுகிலும் கடலை அண்டியே பாதுகாப்பு அரண்களை அமைத்திருந் இலங்கை இராணுவத்தினரும் பெருமளவில் பாதிப்படைந்துள்ளார்கள்.இருபதிற்கும் மேற்பட்ட இராணுவத்தினரின் உடல்கள் வைத்தியசாலைக்கு எடுத்துவரப்படாதாக செய்தியொன்று தெரிவித்தது.

இராணுவத்தினர் இறந்தார்கள் என்றாலும் அவர்களின் இழப்பும் ஒருவகை துக்கத்தையே தருகின்றது.போரில் இறப்பது வேறு இப்படியான இயற்கைச் சீற்றத்தில் உயிரிழக்கும்போது அவர்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கின்றது.

இன்னும் சிலமணிநேரத்தில் மீண்டும் கடல்பெருக்கும்,பூமியதிர்ச்சியும் தாக்கக் கூடும் என்ற அறிவித்தல் பீதியைக் கிளப்பி விட்டிருக்கின்றது.
இதேவேளை தமிழர் புனர்வாழ்வுக்கழகம் உதவி வேண்டி புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களிடம் கோரிக்கை விட்டிருக்கின்றது.

உயிரிழப்பு ஆயிரத்தை எட்டியுள்ளதாக சொல்கின்றது இது பொய்யாகிப்போகாதோ என ஏங்கிக்கொண்டிருக்கிறேன்

நன்றி - ஈழநாதன்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Messages In This Thread
[No subject] - by தமிழரசன் - 12-26-2004, 12:25 PM
[No subject] - by sinnappu - 12-26-2004, 12:40 PM
[No subject] - by sinnappu - 12-26-2004, 12:42 PM
[No subject] - by Sriramanan - 12-26-2004, 01:34 PM
[No subject] - by Nellaiyan - 12-26-2004, 01:36 PM
[No subject] - by Mohan - 12-26-2004, 04:27 PM
[No subject] - by tamilini - 12-26-2004, 04:45 PM
[No subject] - by KULAKADDAN - 12-26-2004, 06:22 PM
[No subject] - by cannon - 12-26-2004, 06:56 PM
[No subject] - by cannon - 12-26-2004, 07:05 PM
[No subject] - by Shan - 12-26-2004, 07:57 PM
[No subject] - by Mathan - 12-27-2004, 04:16 AM
இயற்கையின் சீற்றத்தில் இலங்கை - by Mathan - 12-27-2004, 04:27 AM
[No subject] - by Mathan - 12-27-2004, 04:29 AM
[No subject] - by Mathan - 12-27-2004, 04:32 AM
[No subject] - by Mathan - 12-27-2004, 04:34 AM
[No subject] - by Mathan - 12-27-2004, 04:36 AM
[No subject] - by Mathan - 12-27-2004, 04:37 AM
[No subject] - by Mathan - 12-27-2004, 04:42 AM
[No subject] - by Mathan - 12-27-2004, 04:44 AM
[No subject] - by Mathan - 12-27-2004, 04:54 AM
[No subject] - by Mathan - 12-27-2004, 04:57 AM
[No subject] - by Mathan - 12-27-2004, 05:00 AM
[No subject] - by Mathan - 12-27-2004, 05:02 AM
[No subject] - by Mathan - 12-27-2004, 05:16 AM
[No subject] - by vasisutha - 12-27-2004, 05:34 AM
[No subject] - by Mathan - 12-27-2004, 05:54 AM
[No subject] - by Mathan - 12-27-2004, 05:57 AM
[No subject] - by Mathan - 12-27-2004, 06:15 AM
[No subject] - by Mathan - 12-27-2004, 06:24 AM
[No subject] - by Mathan - 12-27-2004, 06:26 AM
[No subject] - by Mathan - 12-27-2004, 08:28 PM
[No subject] - by Mathan - 12-27-2004, 08:39 PM
[No subject] - by sinnappu - 12-27-2004, 09:48 PM
[No subject] - by Aalavanthan - 12-28-2004, 01:08 AM
[No subject] - by KULAKADDAN - 12-28-2004, 01:22 AM
[No subject] - by Aalavanthan - 12-28-2004, 01:27 AM
[No subject] - by Mathan - 12-29-2004, 02:33 PM
[No subject] - by aswini2005 - 12-30-2004, 12:31 AM
[No subject] - by KULAKADDAN - 12-30-2004, 01:37 AM
[No subject] - by Mathan - 12-30-2004, 01:52 AM
[No subject] - by Mathan - 12-30-2004, 04:00 AM
[No subject] - by Mathan - 12-30-2004, 04:18 AM
[No subject] - by Shan - 12-30-2004, 12:48 PM
[No subject] - by Mathan - 12-30-2004, 04:30 PM
[No subject] - by Mathan - 12-30-2004, 04:34 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)