Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பிந்திய விபரங்கள்
#5
கிழக்கில் 3400 பேர் பலி

மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பு காரணமாக உயிரிழந்தவர்களல் மீட்கப்பட்ட சடலங்களில் அடையாளம் காணப்பட்ட சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

எமது மட்டக்களப்பு செய்தியாளரின் தகவலின் படி இம் மாவட்டத்தில் 1500 ற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்ற போதிலும் மட்டக்களப்பு - 305 வாழைச்சேனை - 123 ஏறாவ10ர் - 03 ஆரையம்பதி - 05 காத்தான்குடி - 63 பொலன்னறுவை - 13 என 552 சடலங்கள் இது வரை வைத்தியசாலைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள சடலங்களில் 210 சடலங்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நாவலடியிலுள்ள காயத்திரி பீடத்திற்குச் சென்ற பக்தர்களும் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்கள். அப் பகுதியிலுள்ள ஸ்ரீ தேவி ஆச்சிரமத்திலுள்ள 25 சிறுவர்களும் கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்கள்

இதுவரை வெளியாகியுள்ள உறுதிப்படுத்தப்பட்டுள்ள தகவலின் படி அம்பாறை மாவட்டத்திலேயே உயிரிழப்புகள் அதிகமாகும்.

அக்கரைபற்று - 41 திருக்கோவில் -110 பொத்துவில் -20 நிந்தவ_ர்-147 கல்முனை - 500 எழுவட்டுவான் - 07 கல்முனை தெற்கு - 1000 என்ற எண்ணிக்கையில் மொத்தம் 1825 சடலங்கள் வைத்தியசாலைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

சாய்ந்தமருது வைத்தியசாலையின் வைத்தியர் உட்பட ஊழியர்களுடன் முழு வைத்தியசாலையுமே கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் சுமார் 97 ஆயிரம் பேர் வரை இடம்பெயர்ந்து 158 நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளார்கள்

திருகோணமலை பிரதேசத்தில் மூதூர் - 211 கின்னியா - 229 திருமலை - 45 என சடலங்கள் மீடு;கப்பட்டுள்ளன. ஊயிரிழந்தோர் எண்ணிக்கை 750 ற்கும் மேல் இருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. 18 ஆயிரம்பேர் வரை இடம்பெயர்ந்துள்ளார்கள்.

இதனைத் தவிர வெருகல் பிரதேசத்திலும் 50 பேர் வரை உயிரிழந்துள்ளார்கள்.

எமது கிழக்குமாகாண செய்தியாளர்களின் தகவல்களின் படி சம்பவத்தின் போது காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 1500 ற்கும்மேல் என அறியக் கூடியதாக இருக்கின்றது. இவர்களில் சுமார் 1000 பேர் வரை தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

நன்றி: புதினம்
Reply


Messages In This Thread
[No subject] - by Vaanampaadi - 12-26-2004, 08:50 PM
[No subject] - by Vaanampaadi - 12-26-2004, 08:53 PM
[No subject] - by yarlmohan - 12-26-2004, 09:09 PM
[No subject] - by yarlmohan - 12-26-2004, 09:12 PM
[No subject] - by mrnbatti - 12-26-2004, 09:12 PM
[No subject] - by KULAKADDAN - 12-26-2004, 09:34 PM
[No subject] - by Vaanampaadi - 12-26-2004, 09:38 PM
[No subject] - by Vaanampaadi - 12-26-2004, 09:49 PM
[No subject] - by mrnbatti - 12-26-2004, 10:14 PM
[No subject] - by Vaanampaadi - 12-26-2004, 11:23 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)