Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பிந்திய விபரங்கள்
#2
கொழும்பு முகத்துவாரத்தில் 5000 பேர் இடம்பெயர்வு

கொழும்பு முகத்துவாரம் பகுதியில் ஜேசு சீவிக்கிறார் ஆலயத்தில் சுமார் 5000 பேர் தஞ்சமடைந்துள்ளனர்.

காலிää மாத்தறை போன்ற பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

கிழக்கில் சடலங்களாலும் காயப்பட்டவர்களாலும் ஆஸ்பத்திரிகள் நிரம்பி வழிகின்றன. குழந்தைகளும் சிறுவர்களுமே பெருமளவுக்கு பாதிக்ப்பட்டுள்ளனர்.

முப்படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

கடற்கரையில் இருந்த மீனவர்கள் பலரை காணவில்லைää

கிண்ணியாவில் ஆஸ்பத்திரி நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நோயாளிகள் நீரில் மூழ்கியுள்ளனர். ஈச்சிலம்பற்றையிலும் இதுபோன்ற ஒரு அவலம் நிகழந்ததாக கூறப்படுகிறது.

கொழும்பு காலிமுகத்திடலிலும் நீர் மட்டம் உயந்து வருகிறது. வெள்ளவத்தை இராமகிருஷணன் மிசன் வரை தண்ணீர் உயர்வதும் வடிவதுமாக இருக்கிறது. வாவிகள் ஆறுகள் பெருக்கெடுக்கின்றன.

காத்தான்குடியில்

காத்தான்குடியில் 35000 பேர் இடம் பெயர்ந்துள்ளனர். பலரை காணவில்லை. மக்கள் பாடசாலைகளிலும்ää பள்ளிவாசல்களிலும் தஞ்சமடைந்துள்ளனர். 15 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஆரையம்பதிää தாளங்குடாää புதுக்குடியிருப்புää கிரான்குளம் போன்ற இடங்களிலும் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது. இப்பகுதிகளில் நீர் மட்டம் உயர்ந்து காணப்படுகிறது. இராமகிருஷ்ண மிஷனிலும் மக்கள் தஞ்சமடைந்துள்ளனர்.

இந்த வெள்ளம் வருவதும் போவதுமாக இருந்து படிப்படியாக தணிந்து விடும் என்று பேராதனை பல்கலைகழக புவிச்சரிதவியல் பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஆதர்சி கிளார்க் நிலையமும் இது பற்றிய அவதானிப்புக்களை செய்து வருகிறது.
Reply


Messages In This Thread
[No subject] - by Vaanampaadi - 12-26-2004, 08:50 PM
[No subject] - by Vaanampaadi - 12-26-2004, 08:53 PM
[No subject] - by yarlmohan - 12-26-2004, 09:09 PM
[No subject] - by yarlmohan - 12-26-2004, 09:12 PM
[No subject] - by mrnbatti - 12-26-2004, 09:12 PM
[No subject] - by KULAKADDAN - 12-26-2004, 09:34 PM
[No subject] - by Vaanampaadi - 12-26-2004, 09:38 PM
[No subject] - by Vaanampaadi - 12-26-2004, 09:49 PM
[No subject] - by mrnbatti - 12-26-2004, 10:14 PM
[No subject] - by Vaanampaadi - 12-26-2004, 11:23 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)