Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பிந்திய விபரங்கள்
#1
பிந்திய விபரங்கள்

மட்டக்களப்பு வைத்தியசாலையில் 300 சடலங்கள்

வாழைச்சேனை வைத்தியசாலையில் 80 சடலங்கள்

திருமலையில் 150 சடலங்கள்

மூதூரில் 200 இற்கு மேற்பட்ட சடலங்கள

அம்பாறையில் 600 சடலங்கள்

அம்பாந்தோட்டையில் 600 சடலங்கள் வைத்தியசாலைகளில் வைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 3000 பேர்வரை உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. நிந்தவூரில் அரபுக்கல்லூரி மாணவர்கள் 45 பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள். அம்பாந்தோட்டையில் பஸ் வண்டியில் சென்றவர்கள் அடித்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள். சந்தையில் கூடியிருந்தவர்கள் 2000 பேர் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. பொத்துவிலுடனான தொடர்பு அருகம்பை பாலம் உடைந்ததால் துண்டிக்கப்பட்டிருக்கிறது. மக்கள் காடுகளினூடாக பாதுகாப்பான இடங்களை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள். உல்லாச பயணிகள் பலரும் உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாரிய குடிநீர் பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது.

முல்லைத்தீவிலும் பலத்த சேதங்களும் உயிரழிவும் ஏற்பட்டிருக்கிறது. விபரங்கள் தெரியவில்லை. யாழில் செம்பியன்பற்றுää தாளையடி ஆகிய பகுதிகளில் உயிரழிவுகள் ஏற்பட்டுள்ளன. மக்களின் உடைமைகள் வீடுகள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டிருக்கின்றன. எங்கும் சோகமும்ää அவலமும் காணப்படுகிறது. ஜனாதிபதி தனது விஜயத்தை ரத்துச் செய்துவிட்டு நாடு திரும்புகிறார். தேசிய அனர்த்த செயற்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த அனர்த்தத்தில் பெருமளவு பெண்களும்ää குழந்தைகளும்ää வயோதிபர்களும் உயிரிழந்துள்ளார்கள்.

முப்படையினரும் பொலிசாரும் மீட்புப்பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

கீரிமலை பகுதியில் இறந்தவர்களுக்கு கிரியை செய்ய சென்றவர்களும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

26.12.2004

கல்முனையில் மையவாடியையும் வெள்ளம் மூடியுள்ளது

கல்முனையில் மையவாடியையும் வெள்ளம் மூடியுள்ளதால் சடலங்களை அடக்கம் செய்ய முடியாத நிலை காணப்படுகிறது.

மட்டக்களப்பு நாவலடி

மட்டக்களப்பு நாவலடி கிராமத்தில் சுமார் 300 மீனவர் குடும்பங்கள் வாழ்ந்தன. அதில் பெரும்பாலான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள். மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு தொடர்ந்து சடலங்கள் வந்தவண்ணமுள்ளன.

மாத்தறை

மாத்தறையில் 200 சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

26.12.2004

தொடரும் அனர்த்தங்கள்

சடலங்கள் ஆங்காங்கே வீதிகளில் சிதறிக்கிடப்பதாகவும்ää பல பிரதேசங்களில் இன்னும் மீட்புப்பணி ஆரம்பிக்க முடியாது இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாகரை போன்ற பகுதிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. மக்கள் சில இடங்களில் சடலங்களை தமது தோள்களில் காவிச்செல்கிறார்கள்.

யாழ்ப்பாணத்தில்

பருத்தித்துறையில் 42 சடலங்கள் வலவெட்டித்துறையில் 06 சடலங்கள் சாவக்கச்சேரியில் 26 சடலங்கள; யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டவர்களில் 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரியவருகிறது.

கிண்ணியா

கிண்ணியா வைத்தியசாலையில் முற்றாக சேதமடைந்துள்ளது. ஊழியர்களும்ää நோயாளிகளும் இறந்துள்ளனர். 300 சடலங்கள் கிண்ணியா பாடசாலை ஒன்றில் வைக்கப்பட்டுள்ளன.

சர்வதேச சமூகத்திடம் வேண்டுகோள்

இலங்கைக்கு அவசர உதவிகளை செய்யுமாறு இலங்கை அரசு சர்வதேச சமூகத்திடம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது

26.12.2004

மட்டக்களப்பு வைத்தியசாலையில் சடலங்கள்

மட்டக்களப்பு வைத்தியசாலையில் 300க்கு மேற்பட்ட சடலங்கள் வைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து சடலங்கள் வந்த வண்ணமிருக்கின்றன. காயமடைந்தவர்கள் தொகை கணக்கற்றது. மட்டக்களப்பு அம்பாறை பகுதிகளில் சுமார் 3 இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். 600க்கு மேற்பட்டோர் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில். நூற்றுக்கு மேற்பட்டோர் ஆபத்தான நிலையில் உள்ளனர். காத்தான்குடியில் 45க்கு மேற்பட்ட சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சடலங்களை அடக்கம் செய்வதற்காக மக்கள் பள்ளிவாசல்களில் கூடி நிற்கின்றனர்.

வவுனியா வைத்தியசாலையில் 10க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருமலையில் 150க்கு மேற்பட்டவர்களின் சடலங்களும் மூதூரில் 150 சடலங்களும் காலி ஆஸ்பத்திரியில் 100 சடலங்களும் இதுவரை வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அம்பாறை மாவட்ட சேதவிபரங்கள் தெரியவில்லை. கணக்கெடுப்பு நடத்த முடியாத நிலை மீண்டும் கடல் கொந்தளிப்பு ஏற்படுமென மக்கள் எச்சரிக்கைபடுத்தப்பட்டுள்ளனர். மக்களை உயரமான இடங்களுக்கு செல்லுமாறு தெரிவித்துள்ளனர்.

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் ஏற்பட்ட பூமி அதிர்ச்சியே இந்தியாவிலும்ää இலங்கையிலும் தென்னாசிய பிராந்தியத்தில் கடல் கொந்தளிப்பை ஏற்படுத்தியதென கூறப்படுகிறது. 8.5 ரிஜ்டர் அளவில் பூமி அதிர்ச்சி ஏற்பட்டதாக புவி ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒரிசாää கேரளம் தமிழகத்திலும் பல நூற்றுக்கணக்கானோர் இறந்துள்ளனர்.

இலங்கை அரசு அனர்த்தங்கள் தொடர்பான பணிக்கென விஷேட குழு ஒன்றை அமர்ததியுள்ளது. முப்படையினரும்ää பொலிசாரும் அவசர பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி பிரதமருக்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரமாண்டமான அளவில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

மக்கள் சமைத்த உணவை பெறுவதும் கடினமாகியுள்ளது.

கிளிநொச்சி ஆஸ்பத்திரியில் 150 சடலங்கள் வைக்கப்பட்டுள்ளன.

கிழக்கில் மின்சாரம் தொலை தொடர்புகள் முற்றாக சீர்குலைந்துள்ளன.

26.12.2004

தாங்கமுடியாத துயரம்

பெரும் கடல் பெருக்கினால் குறிப்பாக கிழக்கிலும் நாடுபூராவும் பதட்டம் நிலவுகிறது. பலர் தமது உற்றார் உறவினர்களை இழந்து தவித்துக் கொண்டிருக்கிறார்கள். மூதூரில் ஆறு கிராமங்கள் அடித்து செல்லப்பட்டிருக்கின்றன.

மட்டு அம்பாறை கரையோரக் கிராமங்கள் எல்லாமே ஏதோவொரு அளவில் ;பாதிக்கப்பட்டுள்ளன

பொத்துவிலிருந்து திருமலை வரை இப்பாதிப்புக்கள் அதிகமாக காணப்படுகின்றன.

பலநூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர். பல கிராமங்கள் இன்னும் நீரில் மூழ்கியுள்ளன.

மூதுர் வாகரை நாவலடி கல்லடி மருதமுனை அக்கரைபற்று கழுதாவளை கிண்ணியா பொத்துவில் புதூர் என பலபிரதேசங்கள் பேரனர்த்தத்தை சந்தித்துள்ளன. கிண்ணியாவில் ஆஸ்பத்திரி நீரில் மூழ்கியதால் அங்கிருந்த 50க்கும் மேற்பட்ட நோயாளிகள் மரணித்துள்ளனர்.

தமிழகம் மற்றும் பாண்டிச்சேரிää ஒரிசாவிலும் பலநூற்றுக் கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்h. கிழக்காசியாவில் இந்தோனேசியா ஆகிய இடங்களில் ஏற்பட்ட பூகம்பத்தினால் இலங்கை இந்தியா பாகிஸ்தான் வங்கதேசம் ஆகியவற்றில் இந்த கடல் பெருக்கு ஏறப்பட்டுள்ளது மாலை தீவு மூன்றில் இரண்டுபகுதி கடலில் மூழ்கி உள்ளது

யாழ்நாகர்கோயில் பகுதிகளிலும் பலர் இடம்பெயாந்;துள்ளனர். வல்வெட்டித்துறை நாகர்கோவில் பகுதிகளிலும் உயிரிழப்புக்கள் நிகழ்ந்துள்ளன. காயமடைந்தவர்கள் பலர் யாழ்போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய இலங்கை மீனவர்கள் பலநூற்றுக்கணக்கானோரை காணவில்லை. சென்னையிலும் அதன் சுற்றுபுறங்களிலும் நில நடுக்கமும் உணரப்பட்டது. பல உயிர்களும் உடைமைகளும் கடலினால் காவு கொள்ளப்பட்டுவிட்டன

பிரதமர் தலைமையில் அவசரமாக எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் கூட்டம் நடைபெறுகிறது. அவசர நிலைதோற்றுவிக்கப்படலாம்

தங்காலை காலி அம்பாந்தோட்டை மாத்தறை போன்ற பகுதிகளும் நீரில் மூழ்கி மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு சடலங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. எத்தனை பேர் காணாமல் போனார்கள் என்று தெரியவில்லை எங்கும் மரண ஓலம். எமது நகரங்களும் கிராமங்களும் பேய்க் காட்சி அளித்துக் கொண்டிருக்கின்றன.

முல்லைதீவு யாழ்வடமராட்சி கிழக்கு பகுதிகளிலும் பலத்த சேதமேற்பட்டுள்ளது. உயிரிழப்புகளும் நிகழந்துள்ளன. சடலங்கள் கிளிநொச்சி ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளன. தாளையடிப்பகுதியில் இன்னும் பல உடல்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது

உயிரிழப்புக்கள் பல்லாயிரக்கணக்கில் இருக்கலாம் என அஞ்சப்படுகிறது

மட்டக்களப்பு திருமலை கிண்ணியா காலி மாத்தறை அம்பாந்தோட்டை தங்காலை வைத்தியசாலைகளில் நூற்றுக்கணக்கான சடலங்கள் வைக்கப்பட்டுள்ளன. இன்னும் பல இடங்களிலும் இவ்வாறான நிலைமை காணப்படுகிறது.
Reply


Messages In This Thread
பிந்திய விபரங்கள் - by Vaanampaadi - 12-26-2004, 08:47 PM
[No subject] - by Vaanampaadi - 12-26-2004, 08:50 PM
[No subject] - by Vaanampaadi - 12-26-2004, 08:53 PM
[No subject] - by yarlmohan - 12-26-2004, 09:09 PM
[No subject] - by yarlmohan - 12-26-2004, 09:12 PM
[No subject] - by mrnbatti - 12-26-2004, 09:12 PM
[No subject] - by KULAKADDAN - 12-26-2004, 09:34 PM
[No subject] - by Vaanampaadi - 12-26-2004, 09:38 PM
[No subject] - by Vaanampaadi - 12-26-2004, 09:49 PM
[No subject] - by mrnbatti - 12-26-2004, 10:14 PM
[No subject] - by Vaanampaadi - 12-26-2004, 11:23 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)