12-26-2004, 08:46 PM
aathipan Wrote:எம்மைக்கொல்ல எத்தனை ஹெலிகாப்டர் பயன்படுத்தினார்கள். மீட்புப்பணிக்கு அந்தக் ஹெலிகாப்டர் பயன்படுத்த முடியாதோ? இந்தியாவை இதை சாக்காக வைத்து உள்ளே அழைக்கும் திட்டமா?
இதையடுத்து 5 இந்திய போர்க் கப்பல்கள் உணவுப் பொருட்கள் மற்றும் மருத்துவ, நிவாரண உதவிகளை ஏற்றிக் கொண்டு கொழும்பு விரைந்தன. விசாகபட்டிணம், கொச்சின், மும்பையில் இருந்து கிளம்பிய இந்தக் கப்பல்கள் இலங்கையின் திரிகோணமலை மற்றும் கலீ துறைமுகங்களுக்குச் செல்லும்.
இந்தக் கப்பல்களில் மீட்புப் பணிக்கு உதவும் ஹெலிகாப்டர்களும் உள்ளன.
ஆதீபன்
கருத்தெழுதுவதற்கு முன் முதலில் எழுதியதை முற்றாக வாசித்து விட்டு பின் கருத்தெழுதுங்கள். இந்தியா இலங்கைக்கு மட்டுமல்ல மாலைதீவு அந்தமான்தீவு போன்றவற்றுக்கும் உடனடியாக உதவிகளை அனுப்பியுள்ளது. உங்களைப் போன்றவர்கள் செய்தாலும் குறை சொல்வீர்கள் செய்யாவிட்டாலும் குறை சொல்வீர்கள். மொத்தத்தில் உங்களுக்குத் தெரிந்ததெல்லாம் குறை சொல்வதுதான்

