Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நிலநடுக்கம்,கடல்கொந்தளிப்பு - தமிழகத்திலும் பலத்த சேதம்...!
#1
<span style='color:red'><b>தமிழகத்தில் நிலநடுக்கம் கடல் கொந்தளிப்பால் பேரழிவு: 3,000 பேர் பலி!!</b>

தமிழகத்தில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தாலும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட மாபெரும் கடல் கொந்தளிப்பால் ஏற்பட்ட ராட்சத அலைகளிலும் 3,000க்கும் அதிகமானோர் அடித்துச் செல்லப்பட்டு பலியாகிவிட்டனர். மேலும் ஆயிரக்கணக்கானவர்களைக் காணவில்லை.

இன்று காலை 6 மணியளவில் இந்தோனேசியாவில் பயங்கர பூகம்கம் ஏற்பட்டது. இந்த பூகம்பத்தைத் தொடர்ந்து இந்தியாவின் கிழக்குப் பகுதியிலும் மிகப் பெரிய நிலநடுக்கமும் அதைத் தொடர்ந்து பெரும் அளவில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது.

தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் தெற்கு, கிழக்கு கடலோரப் பகுதிகளில் ராட்சத அலைகள் எழுந்து தரைப் பகுதிகளுக்குள் நுழைந்தன. தமிழகம், ஆந்திரா, கேரளா, அந்தமான் தீவுகள், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் கடலோரப் பகுதிகளில் கடல் நீர் புகுந்தது. இதில் ஆயிரக்கணக்கானவர்கள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு பலியாகிவிட்டனர்.

இதில் தமிழகத்தில் 3,000க்கும் அதிகமானவர்களும் பிற மாநிலங்களில் சுமார் 700 பேரும் பலியாகியுள்ளனர்.

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுகளுக்கு அருகே ரிக்டர் அளவுகோலில் 8.5 என்ற அளவுக்கு மாபெரும் பூகம்பம் ஏற்பட்டது. இதையடுத்து இந்தியா, இலங்கை, சிங்கப்பூர் உள்பட தெற்கு ஆசியா முழுவதும் நிலநடுக்கமும் அதைத் தொடர்ந்து 50 முதல் 100 மீட்டர் வரை உயர்ந்த அலைகளால் கடல் நீர் ஊர்களுக்குள் புகுந்தது.

இந்தோனேஷியாவின் அருகே கடலில் காலை 6 மணியளவில் ஏற்பட்ட பூகம்பத்தின் தாக்கம் காரணமாக காலை 8.45 மணியளவில் தமிழக கடல் பகுதியில் அலைகளின் சீற்றம் திடீரென அதிகரித்தது. திடீரென 50 முதல் 100 மீட்டர் உயரத்துக்கு எழுந்த அலைகள் பயங்கர ஓசையுடன் கரைப் பகுதிகளுக்குள் புகுந்தன.

தமிழகத்தில் வரலாறு காணாத சேதம்: 3,000 பேர் பலி

இதில் கன்னியாகுமரியில் இருந்து மேற்கு வங்கம் வரையும் கடும் பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றன. இதில் தமிழகம் தான் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் சென்னை நகரமும் கடலூரும் தான் இதனால் மிக அதிக பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன.

100 மீட்டர் எழுந்த ராட்சச அலைகளால் தமிழகம் முழுவதும் சுமார் 3,000க்கும் மேற்பட்டவர்கள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு பலியாகிவிட்டனர்.

நாகப்பட்டிணத்தில் மட்டும் 2,000 பேர் பலி:

உடல்கள் மீட்கப்பட்டதை வைத்து எண்ணிக்கை பார்த்தால் நாகப்பட்டினத்தில் 2,000 பேரும், கடலூர் மாவட்டத்தில் 200 பேர் பலியாகிவிட்டனர். சென்னையில் 150 பேரும், கல்பாக்கத்தில் 15 பேரும், கன்னியாகுமரியில் 150 பேரும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 48 பேரும் திருவள்ளூர், தூத்துக்குடியில் தலா பலரும் பலியாகியுள்ளனர்.

ஆனால், இறந்தவர்களின் எண்ணிக்கை இதைவிட பல மடங்கு இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.

சென்னையில் நிலநடுக்கம்:

தமிழகத்தில் கடலுக்குள் மையம் கொண்டிருந்த நில நடுக்கத்தை தமிழகத்தின் கடலோரப் பகுதிகள் முழவதும் உணர முடிந்தது. இன்று அதிகாலை சென்னை நகரின் மையப் பகுதிகளில் நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரும் பீதியடைந்தனர்.

சென்னை நகரின் மையப் பகுதிகளான நுங்கம்பாக்கம், தி.நகர், வள்ளுவர் கோட்டம், மாம்பலம், அண்ணா நகர், முகப்பேரி, அம்பத்தூர், வில்லிவாக்கம், விரும்பாக்கம், மயிலாப்பூர், நந்தனம், பாண்டிபஜார், எழும்பூர், மந்தைவெளி, திருவான்மியூர், திருமங்கலம், பிராட்வே, தண்டையார்பேட்டை, துரைப்பாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, கொட்டிவாக்கம், ஈஞ்சம்பாக்கம், ஆதம்பாக்கம், ஆலந்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலை 6.30 மணியளவில் மூன்று முறை அடுத்தடுத்து நில அதிர்வு ஏற்பட்டது.

சுமார் 15 விநாடிகளே நீடித்த இந்த நில நடுக்கத்தால், வீடுகளில் இருந்த கட்டில்கள் ஆடின, கதவுகளும் ஆடியுள்ளன. இதனால் பீதியடைந்த மக்கள், குழந்தைகளுடன் வீடுகளை விட்டு வெளியேறினர்.

இதையடுத்து 2 மணி நேத்தில் சென்னை உள்பட தமிழக கடலோரங்கள் முழுவதுமே கடல் கொந்தக்க ஆரம்பித்தது. சென்னை கடற்கரைச் சாலையில் காரில் சென்று கொண்டிருந்தவர்கள் ஆங்காங்கே காரை விட்டு, விட்டு ஓட்டம் பிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ராட்சச அலைகளில் பல கார்கள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டன.

கடலில் நிறுத்தப்பட்டிருந்த படகுகளை அலைகள் அள்ளி 500 மீட்டருக்கு அப்பால் வீசின. கடலோரங்களில் இருந்த மீனவர் குப்பங்கள் அலைகளால் கபளீகரம் செய்யப்பட்டன.

நில நடுக்கத்தை தொடர்ந்து கடல் கொந்தளிப்பு:

கடலோரப் பகுதிகளான பட்டினப்பாக்கம், திருவான்மியூர், திருவல்லிக்கேணி, பெசன்ட் நகர், எண்ணூர், ராயபுரம், திருவொற்றியூர் மற்றும் கல்பாக்கம் பகுதிகளில் கடல் நீர் மணல் பரப்பையும் தாண்டி வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் மக்கள் பெரும் பீதியடைந்தனர்.

திருவல்லிக்கேணி பகுதியில் மெரீனா கடற்கரையில் கடல் நீர் புகுந்து காமராஜர் சாலை வரை வந்ததால் அப்பகுதியில் மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர்.

நில அதிர்ச்சியின் அளவு குறித்து எதுவும் உடனடியாக தெரியவரவில்லை.

சென்னையில்...

சென்னையில் அயோத்தியா குப்பம், எண்ணூர், சீனிவாஸ் குப்பம் ஆகிய பகுதிகள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன. கடற்கரைச் சாலையில் இருந்த பஸ் நிறுத்தங்கள் எல்லாமே அலைகளால் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுவிட்டன.

எண்ணூர் துறைமுகத்தில் இருந்த மீன்பிடி கப்பல்கள் அலைகளால் தரையில் தூக்கி வீசப்பட்டன.

திருவாரூர், நாகை, வேளாங்கண்ணியிலும்..

சென்னையில் ஏற்பட்டதைப் போலவே திருவாரூர், நாகை மாவட்டங்களிலும் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை உள்ளிட்ட சில ஊர்களில் இன்று அதிகாலை லேசான நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள், கட்டில், கதவு ஆகியவை ஆடியதைக் கண்டு அதிர்ச்சியடைந்து அலறி அடித்து வீடுகளை விட்டு வெளியேறினர்.

இதேபோல நாகை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் நில நடுக்கம் காணப்பட்டது. வேளாங்காண்ணி பகுதியில் கடல் கொந்தளிப்பு காரணமாக கடல் நீர் வீடுகளுக்குள் புகுந்தது.

குமரி முதல் சென்னை வரை...

தமிழகத்தில் குமரி முதல் சென்னை வரையிலான கடலோரப் பகுதிகள் அனைத்தும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளன.

நெல்லை மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளான இடிந்தகரை, உவரி, கூத்தங்குளம், தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரம் உள்ளிட்ட பகுதிகளில் கடல் நீர் கொந்தளிப்பு அதிகமாக காணப்பட்டது.

இதேபோல, திருவாரூர், நாகப்பட்டனம், கடலூர், காரைக்கால், புதுவை மற்றும் சென்னை நகரின் கடலோரப் பகுதிகளிலும் கடல் கொந்தளிப்பு அதிகம் இருந்தது.

ராட்சத அலைகள் அவ்வப்போது எழுந்து ஊருக்குள் புகுவதால் கடல் நீர் அதிக அளவில் ஊர்களுக்குள் புகுந்து வருகிறது. கடல் சீற்றம் அதிகம் இருப்பதால் அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகிறார்கள்.

கடலோர மாவட்டங்களின் ஆட்சித் தலைவர்கள் மீட்புப் பணிகளை நேரில் பார்வையிட்டு மீட்பு நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளனர்.

கடல் கொந்தளிப்பில் நாகப்பட்டினம் காரைக்கால் இடையிலான மதகடி பாலம் தகர்ந்து போனது. இதனால் போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல வீடுகள் தரைமட்டமானது.

கடற்படையினர், போலீசார், கடலோர காவல் படையினரும் ஆயிரக்கணக்கான பொது மக்களும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 10 நிமிடங்களில் ராட்சச அலைகள் வந்துவிட்டுப் போனதில் இவ்வளவு பயங்கரமான சேதம் ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்கள் பள்ளிகள், கல்லூரிகள், கல்யாண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு, மருத்துவ உதவிகளை மாவட்ட நிர்வாகங்கள் வழங்கி வருகின்றன. </span>

that'stamil.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
நிலநடுக்கம்,கடல்கொந்தளிப்பு - தமிழகத்திலும் பலத்த சேதம்...! - by kuruvikal - 12-26-2004, 04:19 PM
[No subject] - by hari - 12-26-2004, 04:36 PM
[No subject] - by tamilini - 12-26-2004, 04:41 PM
[No subject] - by kuruvikal - 12-26-2004, 04:42 PM
[No subject] - by kuruvikal - 12-26-2004, 05:33 PM
[No subject] - by Vaanampaadi - 12-26-2004, 09:10 PM
[No subject] - by KULAKADDAN - 12-26-2004, 09:30 PM
[No subject] - by kuruvikal - 12-27-2004, 04:51 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)