12-26-2004, 01:53 PM
கல்கிசை பகுதியில் கடல் மட்டம் உயர்ந்து 200M வரை கடல் நீர் நிலத்தை நோக்கி வந்ததால் நானும் ஓடவேண்டி வந்ததால் செய்திகளை தொடர்ந்து கொடுக்கமுடியவில்லை மன்னிக்கவும், பிந்திய செய்தியில் இதுவரை 1500 க்கு மேலான சடலங்கள் மீட்கப்ப்ட்டுள்ளதாக அறியமுடிகிறது, மேலும் பல சடலங்கள் வைத்தியசாலைகளுக்கு வந்த வண்ணம் உள்ளது, யாழ்ப்பாணத்தில் வடமராச்சி பகுதி அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது, முல்லைத்தீவிலும் பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளது பலர் காணமல் போய்யுள்ளனர்! மீட்பு பணிகளில் தமிழர் புனர்வாழ்வு கழகமும், போராளிகளும் மும்முறமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள், வடமராச்சி பகுதியில் அமைந்திருந்த இரண்டு இராணுவ முகாங்கள் முற்றாக அழிந்துபோய்யுள்ளது. தொடர்ந்து மக்கள் பீதியில் உள்ளனர்,

