12-26-2004, 11:11 AM
நேற்றைய இரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பாரிய கடல் கொந்தளிப்பால் ஈழத்தின் கரையோரக் கிராமங்கள் பலவும் அழிக்கப்பட்டிருக்கின்றன. அம்பாறை பொத்துவில் தொடக்கம் யாழ் தீவகங்கள் உட்பட அனைத்துக் கரையோரக் கிராமங்களும் மாரிய அழிவுக்குப் உட்பட்டிருக்கின்றன. இவற்றால் ஏற்பட்ட உயிராபத்துக்கள் ஆயிரத்தைத் தாண்டிவிட்டதாக கூறப்படுகிறது. இவ்வழிவுகளில் தென் தமிழீழமே மோசமாக பாதிக்கப் பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இயற்கையில் வாவிகளால் சூழப்பட்ட மட்டு அம்பாறையில், வாவிகளினூடு பெருகிய வெள்ளமானது பல கிராமங்களை கடலுக்குள் இழுத்துச் சென்று விட்டதாகவும், இவ்வனர்த்தத்தில் பல முஸ்லீம் கிராமங்களும் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப் படுகிறது.
"பட்ட காலிலேயே படும்" என்பதுபோல இயற்கையின் மழை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட எம்மக்கள் மீண்டுமொரு அழிவுக்கு முகம் கொடுத்து இருக்கிறார்கள்.
புலம் பெயர்ந்தவர்களாகிய எமக்கு, எம்மக்களின் இவ்வனர்த்தங்களிலிருந்து மீளுவதற்கு சகல உதவிகளையும் உடனடியாக தமிழர் புனர்வாழ்வு கழகத்தினூடாக வழங்கி, இரத்த உறவுகளின் துயர் துடைப்பில் பங்களிப்போம்.

"
"
"