12-26-2004, 09:52 AM
ஊமை Wrote:வானம்பாடி தமிழ்.
டிசம்பர் 26, 2004
இலங்கையில் 160 பேர் பலி: இந்தியாவிடம் உதவி
கொழும்பு:
நிலநடுக்கம் காரணமாக உருவான கடல் கொந்தளிப்பில் இலங்கையில் குறைந்தது 160 பேர் பலியானார்கள். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ உதவி தருமாறு இந்தியாவிடம் இலங்கை பிரதமர் மகிந்தா ராஜபக்சே கோரியுள்ளார்.
தென்னிந்தியாவில் சென்னை, ஆந்திராவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வங்காள விரிகுடாவில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
இதேபோல் இந்தோனிஷியாவில் ஏற்பட்ட கடும் நில நடுக்கத்தால் இலங்கையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் கிழக்கு மற்றும் தெற்கு கடலோரப் பகுதிகளில் கடல்நீர் உள்ளே புகுந்ததில் குறைந்தது 160 பேர் இறந்தனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் பலத்த காயமடைந்தனர். ஏராளமானோர் வீடிழந்தனர்.
இவர்களுக்கு சிகிச்சையளிக்கவும், கடலலையில் சிக்கியவர்களை மீட்கவும் உதவுமாறு இந்தியாவிற்கு ராஜபக்சே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

