12-23-2004, 02:08 PM
தடைப்பட்டுள்ள சமாதானப் பேச்சுக்களை மீள ஆரம்பிப்பதற்கு சிறிலங்கா அரசு சமர்ப்பித்ததாகக் கூறப்படும் புதிய யோசனையை விடுதலைப்புலிகள் நிராகரித்து விட்டார்கள் என்று புலிகளுடன் நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி வெளிநாட்டு செய்திச் சேவைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த தடவை சிறிலங்காவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நோர்வேயின் விசேட தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் அரசிடமிருந்து விசேட செய்தி ஒன்றைப் பெற்றுச்சென்று புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கத்திடம் வழங்கினார் என்று முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன.
பேச்சுக்களை மீள ஆரம்பிப்பதற்கு அரசு புதிய நிகழ்ச்சி நிரலை சமர்ப்பித்துள்ளதாகவும் புலிகளின் இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை வடக்கு கிழக்கை எவ்வளவு காலத்துக்கு நிர்வகிக்கப்போகிறது? அவ்வாறான ஒரு நிர்வாக அலகை அரசு முடிவில்லாமல் அனுமதிக்காது போன்ற தகவல்கள் விளக்கம் கோரல்களும் அந்த செய்தியில் அடங்கியிருந்ததாகவும் கொழும்பில் தகவல்கள் வெளியாகியிருந்தன.
அரசிடமிருந்து புதிய நிகழ்ச்சி நிரல் ஒன்று தமக்குக் கிடைக்கப்பெற்றதை உறுதிசெய்த புலிகளின் அரசியல் அலோசகர் அன்டன் பாலசிங்கம் அந்த வரைவை உடனடியாக புலிகளின் தலைமையின் பார்வைக்கு தான் அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவித்தார்.
தற்போது அந்த வரைவு புலிகளால் நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கும் மேற்படி வட்டாரங்கள் மேலும் தகவல் வெளியிடுகையில்
அரசு சமர்ப்பித்த யோhசனையில் எந்தத்தெளிவும் இல்லை என்றும் விடுதலைப் புலிகளின் கோரிக்கைகள் குறித்து அதில் திட்டவட்டமாக எந்தப்பதிலும் இல்லை என்றும் புலிகளால் முன்வைக்கப்பட்ட இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபை வரைவு குறித்து எதுவும் தெரிவிக்காமல் வடக்கு கிழக்கை நிர்வகிப்பது தொடர்பான இடைக்கால ஏற்பாடு குறித்து பரிசீலிக்க அரசு விருப்பம் தெரிவித்துள்ளது என்றும் புலிகள் கருதுவதாகத் தெரிவித்துள்ளன.
puthinam.com