12-23-2004, 03:45 AM
selvan07 Wrote:<b>சுவிஸ் நாட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் தனிநபர் தகவல் திரட்டப்பட்டது </b>ஏனுங்க சுவிசிலே இருக்கிறதெல்லாம் சோணங்கியள் எண்டு நினைச்சிட்டியள் போல. உங்களுக்கு கற்பனை வளம் நிறைய இருந்தால் களத்திற்கு கதை எழுதி அனுப்புங்கோவன்.
சுவிஸ் நாட்டில் அண்மையில் நடடைபெற்ற வானொலி நிகழ்ச்சிக்கு தென்னாசிய நாடொன்றிலிருந்து வருகைதந்திருந்த ஒருவர் இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த மக்களைத் தனிப்பட்ட முறையில் அணுகி தனிநபர்களின் விபரங்கள் இ தகவல்களைச் சேகரித்துச் சென்றுள்ளார். இவ்விடயம் பற்றித் தெரியவருவதாவதுஇ அண்மையில் வானொலியொன்று சுவிஸ் நாட்டில் நிகழ்ச்சியொன்றினை நடாத்தியிருந்தது. இந்த நிகழ்சிக்கு ஊடகத்துறை சார்ந்தவராகத் தன்னை இனங்காட்டிக் கொண்டு தமிழ் மக்களை ஜரோப்பிய மட்டத்தில் கண்காணித்துவரும் சந்தேகத்திற்கிடமான ஒருவர் வானொலி நிர்வாகத்தினரால் மத்திய கிழக்கு நாடொன்றிலிருந்து கொண்டு வரப்பட்டிருந்தார்.
சுவிஸ் நாட்டிற்கு வானொலி நிகழ்விற்கு அழைக்கப்பட்டவர் நிகழ்ச்சிக்கு வந்த தமிழ் மக்களின் தனிப்பட்ட தகவல்கள் சொந்த முகவரிகள் தொலைபேசி இலக்கங்கள் தாயகத்தின் முகவரிகள் தாயகத்துடனான நெருங்கிய தொடர்புகள் போன்ற தனிநபர் தகவல்களைத் திரட்டிச் சென்றுள்ளதாகத் தெரியவருகிறது.
இந்தத் தகவல்கள் தற்போது இலங்கை அரசதரப்பிற்கும் பரிமாறப்பட்டுள்ளதாகவும் மத்தியகிழக்கின் நம்பத்தகுந்த வட்டாராங்கள் உறுதிப்படுத்தியுள்ளது. நிகழ்ச்சிக்கு அழைத்து வரப்பட்டவர் தென்னிலங்கை முஸ்லீம் மதத்தவர் என்றும் இ லேக்கவுஸ் பத்திரிகையில் பணியாற்றியவர் என்றும் ஊர்காவற்படை உறுப்பினராகவும் செயற்பட்டவர் என்றும் ஏரிக்கரைப் பத்திரிகை வட்டாரங்களிடமிருந்த தகவல்கள் தெரிவித்துள்ளன.
------------------------------------------------------
«Å¾¡Éõ... :roll: :roll: :!:

