Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
†§Ä¡ ¿¡ý ÅÊ§Åø §ÀͧÈÛí§¸¡... -¿ýÈ¢ ¯¾Âý
#1
ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தொடர்ந்து பத்து ஆண்டுகளுக்கு இந்த நாட்டை ஆள்வார். அதை யாராலும் தடுத்து நிறுத்தமுடி யாது.
நாடாளுமன்றில் எமக்கு எதிராகச் சபா நாயகர் செயற்பட்டால் அடுத்த கணமே அவர் அப்பதவியில் இருந்து தூக்கியெறியப்படுவார்.
- இப்படிக் கூறுகிறார் அமைச்சர் அநுரா பண்டாரநாயக்க.
காணி உறுதியற்றவர்களுக்குக் காணி உறுதி வழங்கும் வைபவம் கடந்த சனிக் கிழமை குருநாகல் மாவட்டத்தில் காணி மறு சீரமைப்பு மற்றும் சிறுதோட்ட அமைச்சின் ஏற் பாட்டில் நடைபெற்றது. அந்த வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரை யாற்றிய சமயமே அநுரா பண்டாரநாயக்க இவ்வாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது:-
எதிர்க்கட்சியினர் ஜனாதிபதித் தேர்தலைக் குறிவைத்து அதற்குரிய வேலைத் திட்டங்களில் இறங்கியுள்ளனர். ஜனாதிபதித் தேர்தலொன்று நடைபெறாது என்பதை அவர்கள் அறியமாட் டார்கள்.
ஜே.ஆரின் அரசமைப்பு இல்லாதொழிக்கப் படும். நாடாளுமன்றுக்கு முழு அதிகாரம் வழங் கப்படல் வேண்டும். நாட்டின் தலைவியோ தலைவரோ தமது கருமங்களை நாடாளுமன் றில் அமர்ந்து அங்குள்ள ஜனநாயக முடிவு களுக்கு ஏற்ப ஆற்றவேண்டும்.
இந்த நாட்டின் தேர்தல் முறை மாற்றிய மைக்கப்படும். ஜேர்மனியில் உள்ள தேர்தல் முறை இங்கு நடைமுறைக்கு வரும். ஜே. ஆரின் தேர்தல் முறை இந்த நாட்டுக்கு அவசி யமற்ற ஒன்று. நாம் பெரும்பான்மையான வாக் குகளைப் பெற்றபோதும் நாடாளுமன்றில் பெரும் பான்மை பெற்ற ஓர் அரசாகத் திகழமுடிய வில்லை. இருப்பினும்ää அந்தக் குறைபாட்டை ஜனாதிபதி நீக்கிவிட்டார். இன்று எமக்கு நாடாளு மன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ளது. எமக்குத் தேவையான அரசியல் மாற்றங்களை நாம் ஏற்படுத்தமுடியும். விரை வில் அதை நாம் ஏற்படுத்துவோம்.
ஐ.தே.கட்சி நீதிக்குத் தலைவணங்க வேண்டும். எஸ்.பி.திஸநாயக்கவை விடுவிப் பதற்காக ஆர்ப்பாட்டமும்ää ஊர்வலமும் செய் யும் நிலைக்கு அக்கட்சி தள்ளப்பட்டுள்ளது. இது அக்கட்சியின் அரசியல் வங்குரோத்துத் தன்மையைக் காட்டுகிறது. ஜே.ஆர்.ஜெயவர்த் தனா எனது தாய்மீது பொய்க்குற்றச்சாட்டு களைச் சுமத்தி நாடாளுமன்றத்தில இருந்து அவரை வெறியேற்றியபோது அதைக் கண்டித்து நாம் ஊர்வலம் நடத்தவில்லை. ஷஜே.ஆர்.ஜெய வர்த்தனவே! உமக்குத் தேவையானதைச் செய்துகொள்!| என்று கூறிவிட்டு எனது தாய் நேராக வீட்டுக்கு வந்தார். அதற்குப் பின்னர் அவர் இரண்டு முறை இந்த நாட்டின் பிரதம ராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஒரு கையெழுத்துடன் ஒரே நேரத்தில் ஏழு நீதியரசர்களை ஜே.ஆர்.ஜெயவர்த்தன வீட்டுக்கு அனுப்பினார். நாம் அப்படிச் செய்ய வில்லை.
எமது குடும்பம் இந்த நாட்டை மாறிமாறி ஆட்சிசெய்துள்ளது. இருந்தபோதும் நீதித் துறையை நாம் மதித்தே வந்திருக்கின்றோம். எஸ்.பியைப் பார்த்து ஷநீர் அடுத்த வருடம் சிறைச்சாலையில்தான் இருப்பீர்!| என்று கூறி னேன். ஏனெனில்ää அவர் செய்திருப்பது மகா குற்றம். எனவேää அதற்குரிய தண்டனை அவ ருக்குக் கிடைத்துள்ளது. நான் அவரது தீர்ப் புப் பற்றிக் கூறினேன் என்ற காரணத்தை வைத்து ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ என்ற ஐ.தே. கட்சி எம்.பி. எனக்கெதிராக வழக்குத் தொடர்ந்திருக்கிறார். நீதித்துறை பற்றி நான் ஒருபோதும் குறை கூறமாட்டேன்.
நாடாளுமன்றில் உள்ள எம்.பிக்களை ரணில் தூண்டிவிட்டு வேடிக்கை பாhக்கிறார். மகேஸ்வரன் எம்.பி. இந்த நாட்டின் தலைவி யைக் கடுமையாகச் சாடுகிறார். அப்படியான ஒருவருக்குப் பாதுகாப்புத் தேவையில்லை.
ஏனெனில்ää புலிகளுக்குச் சார்பாகக் கதைக் கும் அவருக்கு ஆபத்து யாராலும் வரப்போவ தில்லை.
இன்று இந்த நாட்டு அரசியலில் பெருந் தலை வர்கள் என்று கூறும் அளவுக்கு யாரும் இல்லை. அரசியல் குள்ளர்கள் மட்டுமே உள்ளனர்.
எனக்கும் பிரதமராகவோ அன்றி ஜனா திபதியாகவோ வரும் எண்ணம் கிடையாது. எதிர்க்கட்சியினரும் அவை பற்றி இனிக் கனவிலும் நினைக்கக்கூடாது. அப்படியொரு எண்ணம் இருந்தால் அதைச் சவப்பெட்டியில் போட்டுப் புதைத்துவிடும்படி அவர்களுக்குத் தெளிவாகக் கூறிவைக்கவிரும்புகிறேன்.
இனப்பிரச்சினைக்குப் பேச்சு மூலம் தீர்வு காணப்படவேண்டும். ஆனால்ää நாம் இருக்கும் வரை நாட்டில் இருக்கும் புல் - பூண்டைக் கூடப் பிரிப்பதற்கு நாம் அனுமதிக்கமாட்டோம்.
யுத்தம் ஒன்றுக்குச் செல்ல நாம் விரும்ப வில்லை. அது வலிந்து திணிக்கப்பட்டால் அதற்கும் தயார். எமக்கு உதவிசெய்ய இந் தியா தயாராகவிருக்கிறது. யுத்தமொன்று ஏற்பட்டால் அதற்கு நாம் முகங்கொடுப்பது குறித்து அவ் வேளையில் ஜனாதிபதி உரிய முடிவெடுப்பார்.
ஜே.வி.பி. மீது ஸ்ரீல.சு. கட்சியினர் குற்றஞ் சாட்டமுடியாது. எமது குறைகளை முதலில் நாம் நீக்கவேண்டும். எமக்கு மக்கள் வாக் களித்திருப்பது அரசியல் அதிகாரங்களைப் பயன்படுத்துவதற்குத்தான் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும் - என்றார் அவர்.

¯ó¾ ¸¢ÆðÎ ¯º¢ÄÁÉ¢ «í¸¢éìÌ ±ôÀÀ¡÷ò¾¡Öõ ÌêõÒ¾¡ý... :oops: :evil:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
†§Ä¡ ¿¡ý ÅÊ§Åø §ÀͧÈÛí§¸¡... -¿ýÈ¢ ¯¾Âý - by Danklas - 12-22-2004, 01:15 PM
[No subject] - by Nada - 12-22-2004, 01:30 PM
[No subject] - by selvanNL - 12-22-2004, 02:02 PM
[No subject] - by DV THAMILAN - 12-23-2004, 04:26 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)