08-05-2003, 01:14 PM
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு களுத்துறை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதி ஒருவர் தொடர்ந்தும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இவர் சிறைச்சாலைக் கட்டிடத்தின் கூரை மீது ஏறி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாக களுத்துறை சிறைச்சாலை அதிகாரியொருவர் தெரிவித்தார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இவர் தமக்கு எதிரான வழக்கை துரிதப்படுத்துமாறு அல்லது விடுதலை செய்யுமாறு கோரி இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரி கூறுகின்றார்.
இதுகுறித்து சிறைச்சாலை ஆணையாளர் ரூமி மர்சூக்கிடம் கேட்டபோது, 8 வருடங்களாக இந்தக் கைதி தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.
கைதியின் இந்தக் கோரிக்கைகள் குறித்து சட்டமா அதிபருடன் கலந்துரையாடவுள்ளதாகவும் சிறைச்சாலை ஆணையாளர் தெரிவித்தார்.