Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மது அருந்தக் காரணங்கள்
#1
இதுவரை நான் குடித்த பீர் அனைத்தையும் யோசித்தால் எனக்கு அவமானமாக இருக்கிறது. பிறகு கண்ணாடி டம்ளரைப் பார்க்கிறேன். பீர் கம்பெனியில் வேலை செய்யும் அனைத்து தொழிலாளர்களின் நம்பிக்கைகளையும் கனவுகளையும் யோசிக்கிறேன். இந்த பீரை நான் குடிக்காமல் இருந்தால், அவர்களது கனவுகள் அனைத்து சுக்குநூறாகும். பிறகு நான் என்னிடமே சொல்லிக்கொள்கிறேன், " சுயநலத்துடன் என்னுடைய ஈரலைப் பற்றிக் கவலைப்படுவதைவிட, இந்த பீரை குடித்து அவர்களின் கனவை நிறைவேற்றுவதே சிறந்தது என்று முடிவெடுக்கிறேன்".

- ஜாக் ஹாண்டி


குடிப்பதின் தீமைகளைப் பற்றி படித்ததும் விட்டுவிட்டேன் - படிப்பதை

- ஹென்றி யங்மேன்


குடிக்காதவர்களைப் பற்றி பரிதாபப்படுகிறேன். அவர்கள் காலையில் எழுந்ததும் அவர்கள் என்ன உணர்கிறார்களோ அதனைத்தான் நாள் முழுவதும் உணரவேண்டும்

- ப்ராங்க் சினாட்ரா

ஒரு புத்திசாலியான ஆள் சில நேரங்களில் முட்டாள்களுடன் நேரத்தை செலவழிப்பதற்காக குடிக்கும்படி ஆகிவிடுகிறது

- எர்னஸ்ட் ஹெமிங்வே


24 மணி நேரங்கள் - ஒரு பெட்டி பீரில் 24 பீர் பாட்டில்கள். தற்செயலா என்ன?

- ஸ்டீபன் ரைட்


நாம் குடிக்கும்போது, நாம் குடிபோதை ஏறிவிடுகிறோம். நமக்கு நன்றாக குடிபோதை ஏறினால், நமக்கு தூக்கம் வந்துவிடுகிறது. நாம் தூங்கும்போது எந்தப் பாவத்தையும் பண்ணுவதில்லை. நாம் பாவம் பண்ணுவதில்லை என்றால் நாம் சொர்க்கத்துக்குப் போவோம். ஆஆஆகவே.... நாம் எல்லோரும் குடித்துச் சொர்க்கத்துக்குப் போவோம்.

- ப்ரையன் ஓ-ரோர்க்கே


கடவுள் நம்மிடம் அன்பு செலுத்துகிறார் என்பதற்கும் நாம் சந்தோஷமாக இருக்கவேண்டும் என்றும் விரும்புகிறார் என்பதற்கு பீரே அத்தாட்சி

- பெஞ்சமின் ப்ராங்க்ளின்


***
Reply


Messages In This Thread
மது அருந்தக் காரணங்கள் - by Vaanampaadi - 12-21-2004, 06:48 PM
[No subject] - by tamilini - 12-21-2004, 06:59 PM
[No subject] - by killya - 12-21-2004, 07:02 PM
[No subject] - by Haran - 12-21-2004, 10:54 PM
[No subject] - by kavithan - 12-22-2004, 12:04 AM
[No subject] - by tamilini - 12-22-2004, 12:27 AM
[No subject] - by kavithan - 12-22-2004, 12:43 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)