Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கோபிகா விபத்தில் சிக்கினார்...!
#1
<img src='http://thatstamil.com/images25/cinema/gopika-mother-ather550.jpg' border='0' alt='user posted image'>

பெற்றோருடன் கோபிகா..!

தொட்டி ஜெயா படப்பிடிப்பில் ரயில் முன் விழுவது போன்ற காட்சியில் நடிகை கோபிகா படுகாயத்துடன் உயிர் தப்பியிருக்கிறார்.

கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க துரை இயக்கும் இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் கோபிகா.

கடந்த சில நாட்களாக சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள ரங்கநாதன் மேம்பாலத்தில் இந்தப் படத்தின் சூட்டிங் நடந்து வருகிறது. இரவு நேரங்களில் நடந்து வரும் இந்தப் படப்பிடிப்பில் ரயிலை மையமாக வைத்து காட்சிகள் எடுக்கப்பட்டன.

ஒரு தண்டவாளத்தில் ரயில் வரும்போது அருகில் உள்ள இன்னொரு தண்டவாளத்தில் எதிர் திசையில் கோபிகா ஓட வேண்டும். இது போன்ற காட்சி நேற்று முன் தினம் இரவு எடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது.

ரயில் வந்து கொண்டிருந்தபோது எதிரே அடுத்த தண்டவாளத்தில் கோபிகா ஓட அதை ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகரன் படம் பிடித்துக் கொண்டிருந்தார். சூட்டிங்கிற்காக அந்த ரயில் வாடகைக்கு எடுக்கப்பட்டிருந்தது.

ஓட ஆரம்பித்த கோபிகா திடீரென தண்டவாளத்தில் தடுக்கி விழுந்தார். ரயில் வரும் பாதையில் விழுந்து விடாமல் சமாளித்துக் கொண்டு மறு பக்கத்தில் விழுந்தார் கோபிகா. கொஞ்சம் தடுமாறி ரயில் வந்த பக்கத்தில் விழுந்திருந்தால் பெரும் அசம்பாவிதம் நடந்திருக்கும்.

கீழே விழுந்த கோபிகாவின் காலில் வெட்டு ஏற்பட்ட ரத்தம் வழிந்தது. இதையடுத்து அவர் அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். சம்பவம் குறித்து அறிந்து கோபிகாவின் தந்தை ஆண்டோ பிரான்சிசும் தாயார் டெய்சியும் அலறியடித்துக் கொண்டு ஓடி வந்தனர்.

ஒரு நாள் அப்பல்லோவிலேயே சிகிச்சையுடன் ஓய்வெடுத்த கோபிகா இன்று மீண்டும் காரைப்பாக்கம் பகுதியில் நடந்த தொட்டி ஜெயா சூட்டிங்கில் பங்கேற்கச் சென்றார்.

காயம் சிறியது தான் என்றாலும் ரயில் சக்கரத்தில் சிக்கயிருந்ததால் கோபிகா பெரும் அதிர்ச்சியடைந்துவிட்டதாக சூட்டிங் ஸ்பாட்டில் இருந்தவர்கள் கூறுகின்றனர்.

சூட்டிங் ஸ்பாட்டில் நடக்கவிருந்த மிகப் பெரிய அசம்பாவித சம்பவம் அதிர்ஷ்டவசமாக தவிர்க்கப்பட்டுள்ளதாக கோலிவுட்டில் கூறுகிறார்கள்.

தட்ஸ்தமிழ்.கொம்
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
கோபிகா விபத்தில் சிக்கினார்...! - by kuruvikal - 12-19-2004, 01:07 PM
[No subject] - by Danklas - 12-19-2004, 02:14 PM
[No subject] - by nirmalan - 12-19-2004, 02:18 PM
[No subject] - by Danklas - 12-19-2004, 02:39 PM
[No subject] - by kuruvikal - 12-19-2004, 02:47 PM
[No subject] - by Danklas - 12-19-2004, 03:13 PM
[No subject] - by tamilini - 12-19-2004, 03:25 PM
[No subject] - by sOliyAn - 12-21-2004, 02:54 AM
[No subject] - by Mathan - 12-21-2004, 04:03 AM
[No subject] - by Mathan - 12-21-2004, 04:04 AM
[No subject] - by கறுணா - 12-21-2004, 10:16 AM
[No subject] - by கறுணா - 12-21-2004, 10:30 AM
[No subject] - by tamilini - 12-21-2004, 12:39 PM
[No subject] - by kuruvikal - 12-21-2004, 01:38 PM
[No subject] - by tamilini - 12-21-2004, 01:59 PM
[No subject] - by sOliyAn - 12-21-2004, 04:54 PM
[No subject] - by kuruvikal - 12-21-2004, 06:30 PM
[No subject] - by vasisutha - 12-22-2004, 07:27 AM
[No subject] - by tamilini - 12-22-2004, 07:25 PM
[No subject] - by வெண்ணிலா - 12-23-2004, 11:07 AM
[No subject] - by tamilini - 12-23-2004, 02:43 PM
[No subject] - by kuruvikal - 12-23-2004, 04:03 PM
[No subject] - by கறுணா - 12-23-2004, 05:36 PM
[No subject] - by shiyam - 12-23-2004, 05:53 PM
[No subject] - by வெண்ணிலா - 12-23-2004, 06:15 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)