12-19-2004, 10:21 AM
கர்ப்பிணி வயிற்றைக் கிழித்து குழந்தை திருட்டு : இந்த கொடூரத்தை செய்தவரும் ஒரு பெண்ணே!
கன்சாஸ் சிட்டி: கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து குழந்தையைச் திருடிச் சென்ற பெண் சிக்கினார்.
அமெரிக்கா, மிசோரி மாகாணம், ஸ்கிட்மோர் என்ற இடத்தைச் சேர்ந்தவர் பாபி ஸ்டின்னெட். வயது 23. எட்டு மாத கர்ப்பிணி. எலி போன்ற அரிய வகை குட்டி நாய்களை இனப் பெருக்கம் செய்து விற்பவர். இன்டர்நெட் மூலம் வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு நாய்களை விற்பார். நாய் வைத்திருப்பவர்களுக்கு வேண்டிய ஆலோசனைகளை வழங்குவார்.
கடந்த வியாழக்கிழமை மிகவும் கொடூரமான முறையில் பாபி கொல்லப்பட்டுக் கிடந்தார். அவருடைய வயிறு கிழிக்கப்பட்டு இருந்தது. குழந்தை திருடப்பட்டு இருந்தது. அவருடைய வீட்டிலேயே இந்த கொடூரச் சம்பவம் நடந்திருந்தது. அப்போது அவருடைய தாயார் வீட்டில் இல்லை. அவர் வந்து மகளின் கொடூர கோலத்தைக் கண்டார்; கதறினார்.
பாபியின் தாய், தனது மகள் கொல்லப்பட்டதாக நினைக்கவில்லை. வயிறு வெடித்து இறந்து விட்டதாக தான் முதலில் நினைத்தார். பிறகு, வயிற்றில் இருந்த குழந்தை என்னவாயிற்று என்ற நினைப்பு அவருக்கு வந்தது. போலீசாருக்கு புகார் சென்றது. விசாரணை ஆரம்பித்தது.
ஏன் இப்படிப்பட்ட சம்பவம் நடந்தது? யார் செய்திருப்பார்கள்? வயிற்றில் இருந்து எடுக்கப்பட்ட குழந்தை எங்கே? உயிருடன் தான் இருக்கிறதா? இறந்து விட்டதா? அல்லது அதுவும் கொல்லப்பட்டதா? ஏகப்பட்ட கேள்விகளுடன் விசாரணையை முடுக்கினர் போலீசார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
போலீசாரின் துரித விசாரணைக்கு 24 மணி நேரத்தில் விடை கிடைத்தது. பாபியை கொன்றவர் ஒரு பெண். பெயர் மான்ட்கோமெரி. வயது 36. பாபி வயிற்றைக் கிழித்து திருடிச் செல்லப்பட்ட குழந்தையும் அவருடைய வீட்டில் உயிருடன் இருந்தது. அது, பெண் குழந்தை. மான்ட்கோமெரிக்கு ஏற்கனவே இரண்டு பிள்ளைகள் உள்ளனர். அவர்களும் இவருடைய சொந்த குழந்தைகள் தானா என போலீசார் விசாரிக்கின்றனர்.
கம்ப்யூட்டர் மூலம் இப்பெண்ணை போலீசார் பிடித்தனர். நாய் வாங்க அல்லது ஆலோசனைக்காக பாபியை இன்டர்நெட் மூலம் தொடர்பு கொண்டவர்களின் விவரங்களை போலீசார் சேகரித்தனர். சம்பவம் நடந்த தினத்தன்று வீட்டுக்கு வருவதாக தகவல் தந்தவர்களின் முகவரிகளை எடுத்தனர். அதில், மான்ட்கோமெரியின் முகவரியும் ஒன்று. விசாரணையில் வசமாக மாட்டிக் கொண்டார். குழந்தை தற்போது தந்தையின் அரவணைப்பில் உள்ளது.
இப்படிப்பட்ட கொடூரச் சம்பவத்துக்கான காரணம் என்ன? மான்ட்கோமெரி மனநிலை பாதித்தவரா? விடை தெரியவில்லை. அவர் மீது கடத்தல் மற்றும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இக்குற்றத்துக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது.