12-19-2004, 12:14 AM
manimaran Wrote:cannon Wrote:அங்கே ஆதரவான குரல்கள் கேட்கத் தொடங்குதோ இல்லையோ எங்கடைகளிலை ஒண்டு இரண்டுக்கு வயிறெரியத் தொடங்கி விடும். பழையதுகளை கிண்டிக் கிண்டி சேறாக்கி நாற்றுவதில் ஒரு தனி இன்பம். ஈனப்பிறவிகள்!!!!!!
வெறுமனே புலி எதிர்ப்பு ஒன்றையே குறியாக கொண்டு எழுதும் தமிழக எழுத்தாளர்களை விடுத்து மற்றைய தமிழக எழுத்தாளர்கள் என்ன சொல்கின்றார்கள் அல்லது எண்ணுகின்றார்கள் என்பது பற்றி நாங்கள் அறிந்திருத்தல் அவசியமானது. அப்போதுதான் நாங்கள் அவர்கள் கருத்துக்கு பதிலளிக்கவோ அல்லது எதிர்காலத்தில் அவர்களை எம்பால் இழுக்கக்கூடியதாகவோ செயலாற்ற முடியும்.
தமிழ்தேசியம் மீதான எமது பற்று அல்லது புலிகள் மீதான நேசம் என்பது எமது இனத்தின் ஆக்கபூா்வமான வளா்ச்சிக்கு உதவுவது என்பதனை குறியாக கொண்டதொன்றே. மாறாக அது உணா்ச்சிவசப்பட்ட வெறித்தனமாக மாறுமாயின் புலிகளது மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழின வீழ்ச்சிக்கே வழிகோலும். புலிகளது செயல்கள் எப்போதாவது வழிதவறிப்போகுமாயின் அதனை புரிந்து அவா்களை ஆக்கபூா்வமான வழியில் விமா்சித்தல் நிச்சயம் எல்லோரது வளா்ச்சிக்கும் வழி வகுக்கும்.
சரியாக சொன்னீர்கள்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

