12-18-2004, 06:04 PM
கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்குகிறாரே இலங்கை ராணி
எரிக் சொல்ஹெய்ம் மீண்டுமொரு தடவை இலங்கை சென்று திரும்பியிருக்கிறார்.
ஈழப்பிரச்சனையில் மறக்கப்பட முடியாத ஒரு நாடாக நோர்வேயும் மற்றும் எரிக் சொல்ஹெய்ம் அவர்களும் கவனிப்புப் பெறுகிறார்கள். 2000 இல் தொடங்கிய அவர் பயணம் இன்னமும் முடியவே இல்லை. கொழும்பு வருவதும் அரச பிரதிநிதிகளை சந்திப்பதும் பின்னர் விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளைச் சந்திப்பதும் பின்னர் மீண்டும் அரசு உறுப்பினர்கனைச் சந்திப்பதுமாக அவரது பணி ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் தொடர்கிறது.
அது தவிர அவ்வப்போது லண்டன் சென்று புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கங்கத்தை சந்திப்பதுவும் சில சமயங்களில் புது டில்லி சென்று இந்திய உயர் அதிகாரிகளுகளுக்கு விளக்கம் அளிப்பதுவுமென மேலதிக பணிகளும் அவரை ஒட்டிக் கொள்கின்றன.
கடந்த தடவை அவர் கிளிநொச்சிக்கு செல்வதுக்கு முன்பாக இனிமேல் புலிகளின் பகுதிகளுக்குள் ஹெலிகொப்ரர் சேவையினை நடாத்துவதில்லை என விமானப் படை முடிவு செய்திருந்தது.
பலாலியில் அல்லது வவுனியாவில் இறக்கிவிடப் படும் எரிக் சொல்ஹெய்ம் தரை வழியாக புலிகளின் பகுதிக்கு செல்ல வேண்டியிருக்கும் எனவும் கூறப்பட்டது.
இது எப்படி இருக்கிறது என்றால்... இலங்கை அரசு எரிக் சொல்ஹெய்மைப் பார்த்து, நீங்களாச்சு புலிகள் ஆச்சு.. எமக்கும் இதற்கும் எந்த வித தொடர்பும் இல்லை. விரும்பினால் வாங்க, புலிகளைச் சந்தியுங்க... என்பது போல இருக்கிறது.
இருப்பினும் இறுதி நேரத்தில் (ஐனாதிபதியிடமிருந்து விசேட உத்தரவு வந்ததாம்) அவர் ஹெலிகொப்ரரிலேயே அழைத்துச் செல்லப்பட்டார். ஆனாலும் காலநிலை சரியில்லாததால் அவர் அனுராத புரத்தில் இறக்கிவிடப்பட்டு தரை வழியாகச் சென்றே தமிழ்ச்செல்வனைச் சந்தித்தார்.
நோர்வேயின் அனுசரணைப் பணி வெற்றியடைந்து சமாதானம் மலர்கிறதோ இல்லையோ நோர்வே ஈழத்தமிழர்களின் நட்பு நாடாக என்றும் திகழும் என்பது உண்மை.
----------------------------------------------------------------------------
டோக்கியோ உதவி வழங்கும் நாடுகளின் இணைத்தலைமை வகித்த நாடுகளின் பிரதிநிதிகள் வெளியிட்ட அறிக்கைக்கு ஜே வி பி தனது பதிலினை வெளியிட்டிருக்கிறது. சமாதான முயற்சிகளுக்கு தாம் எதிரானவர்கள் இல்லை என்றும் புலிகளே உண்மையில் சமாதானத்தை விரும்பவில்லை என்றும் ஆனால் இடைக்கால தன்னாட்சி சபை (இடைக்கால அரசு) குறித்து தாம் பேச அனுமதிக்கப் போவதில்லை எனவும் அதன் பதிலறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அத்துடன் நோர்வே நாடு பக்கச் சார்பாக புலிகளுக்கு ஆதரவாக நடந்து கொள்கிறது என்ற குற்றச் சாட்டினையும் ஜே வி பி தெரிவித்திருக்கிறது.

அரச பங்காளிக்கட்சியான ஜே வி பி இடைக்கால அரசு பற்றி பேசுதல் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அறிவித்திருக்கின்ற நிலையில் அரசின் அடுத்த கூட்டணிக் கட்சியினைச் சேர்ந்தவரும் ஜனாதிபதியுமான சந்திரிகா அவர்கள் இடைக்கால நிர்வாக அலகு குறித்துப் பேசலாம் என நோர்வேயிடம் தெரிவித்திருக்கிறார்.
பாவம் அவர்..
பேசினால் ஆட்சியிலிருந்து விலகுவோம் என்று ஜே வி பி மிரட்டுகிறது. அவ்வாறாயின் ஆட்சியை இழக்க வேண்டியிருக்கும்.
பேசாவிட்டால் கோடிக்கணக்கான நிதியுதவிகளை நிறுத்தி விடுவோம் என உதவி வழங்கும் நாடுகள் மிரட்டுகின்றன. அவ்வுதவிகள் கிடைக்காவிட்டால் யுத்தத்தால் ஒடிந்து போயிருக்கின்ற இலங்கைப் பொருளாதாரம் கொஞ்சமாய்த் தன்னும் முதுகு நிமிர்த்த முடியாது.
என்ன செய்ய போகிறார்..

Thanx: Sayanthan
http://sajee.yarl.net/archives/002420.php#more

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>