Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இதுதான் உலகம்
#1
நோபல் பரிசு பெற்82 வயது விஞ்ஞானி கல்லூரி மாணவியை மணக்கிறார்

பீஜிங், டிச. 18_

சீனாவைச் சேர்ந்த விஞ்ஞானி டாக்டர் சென் நிங் யாங். 82 வய தான இவர் இயற்பியல் துறையில் இன்னொரு விஞ்ஞானியுடன் கூட்டு சேர்ந்து ஆராய்ச்சி செய்து அதன் மூலம் சில கண்டுபிடிப்பு களை செய்தார். இதற்காக 1957_ம் ஆண்டு இந்த ஜோடிக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

சென் நிங் யாங்கின் மனைவி கடந்த ஆண்டு மரணம் அடைந் தார். இதைத் தொடர்ந்து

28 வயது வோங் பான் என்ற கல் லூரி மாணவியை அவர் மணந்து கொள்ள இருக்கிறார். யாங்கும் அவர் மனைவியும் வோங்கை 1995_ம் ஆண்டு சந்தித்தனர்.

`கடவுள் எனக்கு கொடுத்த கடைசிப் பரிசு வோங்' என்று சென் நிங் யாங் கூறி இருக்கிறார்.

"மனதளவில் யாங் இளமை யானவர். நான் அவரைப் பெரி தும் மதிக்கிறேன். அவர் அறிவி யலுக்கு பெரும் தொண்டாற்றி இருக்கிறார் என்று வோங் கூறி னார்.



தாம்பத்ய உறவு இல்லாத திருமணம்
சீனாவில் பிரபலமாகி வருகிறது


பீஜிங், டிச. 18_

தாம்பத்ய உறவு இல்லாத திரு மணங்கள் சீனாவில் இப்போது பிரபலமாகி வருகின்றன. இப்படி தாம்பத்யம் இல்லாத திருமணம் செய்து கொள்ள விரும்பும் மணமக்களுக்கு உதவுவதற்காக தரகர்கள் தனி அலுவலகம் தொடங்கி உள்ளனர்.

இதேபோன்ற ஒரு திருமண ஏஜென்சி ஜியாங்சு மாநில தலை நகர் நான்ஜிங்கில் தொடங்கப் பட்டு உள்ளது.

தாம்பத்ய உறவு இருந்தால் உடல் ரீதியாகவும், மன ரீதியாக வும் பிரச்சினைகள் ஏற்படுவதாக வும், அவற்றைத் தவிர்ப்பதற்கு தாம்பத்ய உறவு இல்லாத திரு மணங்கள் பிரபலமாகி வருவ தாக அந்த ஏஜென்சி கூறி உள் ளது.
Reply


Messages In This Thread
இதுதான் உலகம் - by aathipan - 12-18-2004, 05:57 AM
[No subject] - by aathipan - 12-19-2004, 10:21 AM
[No subject] - by kuruvikal - 12-19-2004, 01:26 PM
[No subject] - by tamilini - 12-19-2004, 03:00 PM
[No subject] - by MEERA - 12-19-2004, 03:17 PM
[No subject] - by aathipan - 12-25-2004, 06:59 AM
[No subject] - by aathipan - 12-25-2004, 07:01 AM
[No subject] - by aathipan - 12-25-2004, 07:02 AM
[No subject] - by kavithan - 12-25-2004, 08:04 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)