Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மகனை கருணை கொலை செய்ய தாய் கெஞ்சல்
#4
இரண்டும் ஒண்டொ.....

உடலுறுப்பு தானம் செய்யமுடியாதுபோன ஆந்திர செஸ் வீரர் மரணம்


உயிரிழக்கும் தருவாயிலும் உதவும் எண்ணம்
ஆந்திரத் தலைநகர் ஹைதராபாத்தில் குணப்படுத்தமுடியாத வியாதி ஒன்றுடன் போராடிவந்த முன்ளாள் செஸ் வீரர் வெங்கடேஷ் மரணம் அடைந்துள்ளார்.

இந்தியாவில் கருணைக் கொலை தொடர்பான விவாதங்களின் கவனம் இவர் மீது குவிந்திருந்தது.

இருபத்தைந்து வயதான வெங்கடேஷ் மூளையைப் பாதிக்கும் ஒரு பரம்பரை வியாதியால் பெரும் துன்பத்தை அனுபவித்து வந்தார். மருத்துவமனையில் இருவருக்கு சுவாசக் கருவி பொருத்தப்பட்டிருந்தது.

தனது உடலுறுப்புகளை தானம் கொடுக்க வேண்டும் என்பது இவரது ஆசை. ஆனால் மூளை மரணம் அடைந்தவர்கள்தான் - அதாவது விபத்தில் சிக்குண்டு உடலில் மற்ற பாகங்கள் செயல்பட்டாலும் மூளைச் செயற்பாடுகள் நின்றுபோன நிலையில் இருப்பவர்கள்தான் உடலுறுப்புகளை தானம் கொடுக்க முடியும் என்று இந்தியச் சட்டங்கள் கூறுவதால் இவரது ஆசையை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

அந்த நீதிமன்ற முடிவு ஏற்படுத்திய மனவலியுடன் தனது மகன் இறந்திருப்பதாக வெங்கடேஷின் தாயார் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார்.

மற்ற உறுப்புகளைக் தானம் கொடுக்க முடியாது போனாலும் இவர் தனது கண்களை தானம் தந்துவிட்டுள்ளார்.

BBC TAMIL
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by tamilini - 12-09-2004, 11:41 AM
[No subject] - by kuruvikal - 12-09-2004, 01:04 PM
[No subject] - by KULAKADDAN - 12-17-2004, 09:30 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)