Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அவசரகால நிலை.
#4
திரு நடா அவர்களே.....................
நான் நெ***.தே**. போண்ற இணையங்களுக்கு வக்காளத்து வாங்க வரவில்லை. அவர்களுக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. எனக்கு தெரியவேண்டும் தீவிரவாதிகளால் கைதுசெய்யப்பட்ட தமிழனை விடுவிக்க ஏன் தமிழர்களாகிய நீங்கள் முன் வரவில்லை. ஓர் இணையம் மட்டுமே இதற்கு ஆதரவாக குரல் கொடுத்தது. அதை தமிழர்களின் மேம் பாட்டுக்காய் உழைக்கும் மற்றய இணையங்கள் ஏன் செய்யவில்லை. இதுதான் எனது ஆதங்கம். மற்றயபடி தேசத்துரோகிகளுக்கு நான் என்றுமே துணைபோவதில்லை. ஏனெனில் நான் பிறந்த தேசமும் தமிழீழம் தான். நீங்கள் என்னை துரோகிகளுக்கு வக்காளத்துவாங்குகிறேன் என்று சொல்வது தான் எனக்கு மிகவும் மனவேதனையாய் இருக்கிறது. திரு நடா அவர்களே உங்கள் உயிருக்கு இப்படி ஒரு ஆபத்தான நிலை ஏற்பட்டாலும் எம்மனம் இப்படித்தான் துடிக்கும். எம்மாலான சகல உதவிகளையும் பாதிக்கப்பட்டவருக்குச் செய்வோம்.

மற்றும் படி இந்த பெண்கள் விடையம் என்று தமிழ் அவர்கள் கூறுவதற்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. சந்தர்ப்பம் ஏற்பட்டால் ஜேர்மனியில் நான் இருக்கும் நகருக்கு வர வாய்ப்பிருந்தால் என்னை சந்த்தித்துப் பார்க்கவும் ( சினேகிதரீதியாக )
அப்படி ஏதும் என்னில் குறைகண்டால் நான் நீங்கள் சொல்லுவது போண்று மனநோயாளியே...... எமது நகரிலும் சரி ஜேர்மனியின் இதர பாகங்களிலும் சரி தமிழனுக்கு கொடுமை இழைக்கப்பட்டால் அதனை நாங்களும் தட்டிக்கேக்கிறோம். முடியாத பட்சங்களில் ஜேர்மன் காவல்த்துறையினரை அணுகி இவற்றிற்கு தீர்வு காண முற்படுகிறோம்.

எனது பெயர் இப்போ உங்களுக்கு தெரிந்திருக்கும் அதனால் நான் வசிக்கும் நகரிலே வசிக்கும் தமிழரை நீங்கள் சந்திக்க வாய்ப்பிருந்தால் எனது பெயரைக் கூறி என்னைப் பற்றி விசரியுங்கள். அப்படி ஒரு பெண் என்னைப் பற்றி தரக்குறைவாகச் சொன்னால் நான் நீங்கள் கூறியவாறு மனநோயாளிதான்.

நான் இந்த இனையத்திலே ஒரு கருத்துக்கு மாற்று கருத்து வைத்தால் தான் விடயம் சூடு பிடிக்கும் என்ற நினைப்பில் அவ்வாறு மாற்றுக் கருத்துகளை முன்வைத்தேன். இதை நான் ஒரு பகிடியாகவே நினைத்து செய்துவந்தேனே தவிர வேறெது உள்நோக்கங்களும் கிடையாது.

******

திரு நடா அவர்களே நான் 1979 இல் பிறந்தவன். நான் உங்கள் எல்லோரையும் விட வயதிலும் அறிவிலும் இளையவன். அந்த படத்தில் இருப்பது நான் தான். இதுவரை நான் எந்தப் பெண்ணின் மனம் நோகும்படி பேசியதே கிடையாது. ஏனெனில் நானும் 2 பெண்களுக்கு அண்ணன். என் அம்மாவும் ஒரு பெண்தான்.

இதனால் தயவுசெய்து உங்கலிடம் ஒரு விண்ணப்பத்தை விடுகிறேன். எதிர்காலத்தில் இப்படி அவதூறாக யாரும் சொல்லும் பொய் வார்த்தைகளை நம்பி இப்படி வயதிலும் அறிவிலும் வளர்ந்தவர்கள் உங்கள் கருத்துகளை உங்கள் பெயருக்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் முன் வைக்காதீர்கள்.

நீங்கள் கூறும் போது இவை எல்லம் பகிடி என்றே நினைத்து நானும் எதிர்க்கருத்துக்களை தெரிவித்தேன், ஆனால் இறுதியில் விடயம் உண்மைபோல் சூடு பிடிக்கவே நானும் இது பகிடி இல்லை நியமாக தான் சொல்லுகிறீர்கள் என்பதை உணர்ந்துள்ளேன்.

தமிழ் என்பவரை எனக்கு யார் என்றே தெரியாது. அவருக்கும் எனக்கும் என்ன கொடுக்கல் வாங்கலோ நான் அறியேன். ஆனால் அந்த தமிழ்கடையின் தொலைபேசி இலக்கங்களை நான் அவருக்கு கொடுக்கவும் இல்லை.

மற்றயபடி மீரா என்பவர் நான் இல்லை.

எனது மனதில் இதுவரை இருந்த ஆதங்கங்கள் உங்களுக்கு புரிந்திருக்கும் என நம்புகிறேன்.

அதனால் தான் அந்த தமிழனுக்கு உதவி செய்த இணையத்தை இதுவரை பெருமையாய் கதைத்தேன்.

உண்மையாய் அதிரடி இணைய கருத்துகளத்தில் போய் பார்க்கவும் எப்படி கருணாவை கிழித்து எழுதியுள்ளேன் என்று வாசித்து பார்க்கவும்.

ஆனால் பெயர் ஊர் தெரியாத டென்மார்க் துரோகிகளுடன் தயவுசெய்து என்னை இப்படி இனைத்துப் பேசாதீர்கள். ஏனெனில் இந்த செய்திகள் சிலவேளை தாயகம் வரை செல்லக் கூடும்.

ஜேர்மனியில் இருக்கும் இலங்கையச் சேர்ந்த மூன்றாவது தரப்பினரோடு ( உங்களுக்கு புரியும் என நம்புகிறேன். முஸ் ) நாம் இயக்கத்திற்கு ஆதரவாகவே வாதாடி வருகிறோம். இவற்ரை அவர்கள் அறிந்தால் நாளைக்கு அவர்கள் இயக்கத்திற்கும் தமிழருக்கும் எதிராக கதைத்தால் நாம் திருப்பி ஏதும் கதைக்க முடியாத நிலை ஏற்படும்.

இப்படிக்கு அன்புடன்
ஊமை


Messages In This Thread
[No subject] - by MEERA - 12-17-2004, 01:31 AM
[No subject] - by Nada - 12-17-2004, 02:43 AM
[No subject] - by ஊமை - 12-17-2004, 04:09 AM
[No subject] - by ஊமை - 12-17-2004, 04:31 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)