08-04-2003, 05:08 PM
<img src='http://www.kumudam.com/kumudam/21-07-03/17t.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.kumudam.com/kumudam/21-07-03/17.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.kumudam.com/kumudam/21-07-03/17p.jpg' border='0' alt='user posted image'>
வீட்டுக்குள் நுழையும்போதே தக... திம்மு... என்று இதமான நாதம். தீர்மானங்கள் பளிச் பளிச் சென்று விழுந்தன. ஹாலில் கோரைப் பாயில் பொரிந்து கொண்டிருந்தவர் கிரிஜா. எதிரே கணவர் விஜயேந்திரன், கண்கள் நிறைய பிரமிப்புடன் தாளம் போட்டு உற்சாகப்படுத்திக் கொண்டிருக்க, பக்கத்தில் குட்டிப் பெண் விருக்ஷா, அம்மாவை ரசித்துக் கொண்டிருந்தாள். அசுரத்தனமான அந்த ஆவர்த்தனம் முடிய இருபது நிமிடங்கள் ஆனது! கிரிஜா முகத்தில் வியர்வைத் துளிகள். சட்டென்று சூறாவளி ஓய்ந்த நிசப்தம், சாதகம் முடிந்தவுடன் கிரிஜா சிரித்தார். இடம்: சென்னை, வளசரவாக்கம்.
எங்களுக்குச் சொந்த ஊர் நெரூர். அப்பா ‘நெரூர் மூர்த்தி’ ஒரு காலத்தில் பிரபலமான மிருதங்க வித்வான். எங்க வீட்டுத் திண்ணையில் அப்பா மணிக்கணக்கா உட்கார்ந்து சாதகம் செய்வார். நான் படிக்கும்போதோ, அம்மாவுக்குத் துணையாக சமையற்கட்டில் இருக்கும்போதோ... எல்லா நேரங்களிலும் இந்த ஒலி ஆனந்தமா கேட்டுக்கொண்டே இருக்கும். அப்பா வெளியே போயிருக்கும்போது, நானும் எடுத்துத் தட்டுவேன். அப்படி ஆரம்பிச்ச ஆசை... ஒன்பதாவது படிக்கும்போது, அப்பாவிடம் என் விருப்பத்தைச் சொன்னப்போ, சராசரித் தந்தையா இருந்திருந்தா, ‘இது பொம்பளை வாசிக்கிற வாத்யம் இல்லை’ன்னு சொல்லியிருப்பார். தாராளமா வாசிக்கலாம் என்றார் அப்பா. அம்மாவும் ஐமாய்டி என்றார்.’’ அந்த நாட்களை சந்தோஷத்தோடு அசை போட்டார்.
அதேசமயம், பள்ளிக் கூடத்தில் சக மாணவிகள், அக்கம்பக்கத்தவர்கள், ‘‘என்னடி, எப்ப பார்த்தாலும் டப் டப்புன்னு தட்டிகிட்டே இருக்கே... உனக்கு என்ன ஆச்சு...’’ என்று கிண்டலடிப்பார்களாம்.
‘‘எந்த விமர்சனத்தைப் பற்றியும் நான் கவலைப்பட்டதில்லை. அப்பா தவிர, தஞ்சாவூர் டி.ஆர். சிறீனிவாசனிடமும் கற்றுக் கொண்டேன். 1984_ல் மூத்த வித்வான் பி.ராஜம் அய்யர் கச்சேரிக்கு உட்கார்ந்ததுதான் என் மிருதங்க அரங்கேற்றம். அப்புறம் நிறைய வித்வான்களுக்கு வாசிச்சுட்டேன்’’ என்று கூறும் கிரிஜாவை, ‘அழகி’ படத்திற்கு மிருதங்கம் வாசிப்பது போன்ற காட்சி எடுக்கவும் அழைப்பு வந்ததாம். ஊரில் இல்லாததால் அந்த வாய்ப்பு நழுவியதை வருத்தத்தோடு சொல்கிறார். பி.ஏ.மியூஸிக் டிகிரியும் வாங்கியுள்ளார் இவர்.
‘‘அடையாறு மியூஸிக் காலேஜில் ஒரு கிறிஸ்துமஸ் அன்று காலை ஆரம்பிச்சு 35 மணி நேரம் இடைவிடாமல் ஐந்து பேர் வாசிச்சு சாதனை படைச்சோம். அதில் நான் மட்டும் பெண். சாப்பாடு, க்ளுகோஸ் வாட்டர் மட்டும். 35 மணி நேரம் மட்டுமில்லை. 35 வகையான தாளங்களில் வாசிச்சது யாரும் செய்யாதது. இது கடவுளுக்கு அர்ப்பணம் என்பதால், கின்னஸ§க்கு அனுப்பவில்லை’’ என்று சொல்லும் கிரிஜா இன்னொரு முறை செய்த சாதனை...
‘‘இரண்டு கைகளிலும் வேற வேற தாளம் போடணும். அதேபோல இரண்டு கால்களிலும் வேற வேற தாளம். இதைச் செய்யும்போதே முதுகில் ஒருத்தர் சோழி போட்டுக்கொண்டே இருப்பார். அதையும் எண்ணணும். மியூஸிக் காலேஜில் குருநாதர் டி.ஆர்.சிறீனிவாசன் இந்த சவால் ஐடியாவைச் சொல்ல... தயங்காமல் செய்தேன். இதுக்குப் பேர் பஞ்ச அவதாரம். காலேஜில் அத்தனை பேரும் பிரமித்தார்கள்’’ என்று பெருமிதப்படும் கிரிஜாவின் கணவர் விஜயேந்திரனும் ஒரு மிருதங்கவித்வான். ‘‘திருக்கோவிலூரில் ஒரு கச்சேரியில் டபுள் மிருதங்கம் போட்டார்கள். நாங்க இரண்டு பேரும் போட்டி போட்டுக்கொண்டு வாசிக்கிறோம். ஊரே புருஷன்_பெண்டாட்டி வாசிக்கறாங்கன்னு கூடிவிட்டது. பெண்கள் எனக்கு கைதட்ட, ஆண்கள் அவருக்கு கைதட்ட, ஒரே இசைக் களேபரம் போங்க...’’ என்று கணவரைப் பார்த்து சிரித்தார்.
‘‘பெண் பக்க வாத்யக்காரர்களை ஒதுக்குகிறார்கள் _ அதுவும் சில பாடகிகளே! கஞ்சிரா, கடம் போன்ற தாளவாத்யக் கருவிகளை தைரியமாக எடுத்து பெண்கள் வாசிக்க வேண்டும். மனசு வைத்தால் பெண்களால் முடியாதது எதுவும் இல்லை. எவ்வளவு சிக்கலான லயக்கணக்கில் பாடகர் இறங்கினாலும் அதைத் திருப்பி வாசிக்க எங்களால் முடியும். ஈகோ பார்க்காமல் வாய்ப்பு கொடுங்கள்’’ _மிருதங்கத்தில் பொரிவது போல பொரிந்தார் கிரிஜா.
படங்கள்: சித்ரம் மத்தியாஸ்
நன்றி குமுதம். (21.07.03)
அட....... பொம்பிளைகள் எல்லாத்துறைகளிலேயும் புகுந்து விளையாடுகிறார்கள். பலே.. பலே..