Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Invite SRK again to correct Lanka's image: JVP
#4
<b>நடிகர் சாரூக்கானை நோக்கி வீசப்பட்ட குண்டு சிறீலங்கா இராணுவத்திற்குச் சொந்தமானதென ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன </b>

கொழும்பில் இந்திய நட்சத்திரங்கள் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சியில் வீசப்பட்ட கைக்குண்டு இலங்கை இராணுவத்தினரால் பயன் படுத்தப்படும் கைக்குண்டு என அரச பகுப்பாய்வு அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.

இராணுவத்தில் பயிற்றப்பட்ட ஒருவராலேயே இந்த குண்டு வீசப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகின்றது.

ஐ.தே.க.யின் மீது பழிபோடுவதற்காக, சிறீலங்காவின் ஆளும் கட்சியான சந்திரிகா தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியோ அல்லது அதன் கூட்டணிக் கட்சியான ஜே.வி.பி.யோ :?: :?: இச் சதிமுயற்சியின் சூத்திரதாரிகளாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக அன்றைய தினம் இடம்பெற்ற வன்முறைகளின் போது பொலிசாரால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட 12 பேர் உட்பட 40 பேரின் வாக்குமூலங்கள் இது வரை பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் கூறுகின்றார்கள்.

இதுதொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் பொறுப்பு குற்றப் புலனாய்வுத் துறையினரிடம் தற்போது கையளிக்கப்பட்டுள்ளது.

நன்றி புதினம்
Reply


Messages In This Thread
[No subject] - by Vaanampaadi - 12-14-2004, 07:47 PM
[No subject] - by ஊமை - 12-14-2004, 11:44 PM
[No subject] - by Kanani - 12-15-2004, 10:38 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)