12-15-2004, 06:20 PM
கோலிவுட்டின் பந்தாபரமசிவ நடிகர்
வருஷத்திற்கு மூன்று ஹிட் கொடுக்கிற விஜய் 'கம்'மென்று இருக்கிறார். தேசிய விருது வாங்கிய விக்ரம்? இருக்கும் இடம் தெரியாத பரம சாது. சரி, சூர்யா? எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை.
முன்னணி ஹீரோக்களே இப்படி கண்ணியம் காக்கும்போது ஆறுநூறு தமிழர்களுக்கு கூட முக பரிட்சயம் இல்லாத ஜெய் ஆகாஷ் போடும் ஆட்டம் லோக்கல் கரகாட்டத்தையே தோற்கடித்துவிடும்.
'அமுதே' என்றொரு படம். பெரிய ஸ்டார்களின் படமாக இருந்தாலும் ஐம்பது நாளில் 'பர்ஸ்ட் காப்பி' ரெடி பண்ணும் எழில், இதன் டைரக்டர். ஜெய் ஆகாஷ், உமா என்று சின்னச் சின்ன ஸ்டார்கள் தானே.. நாற்பது நாள்களுக்குள் படத்தை எடுத்து முடித்துவிடலாம் என்பது எழிலின் திட்டம். படத்தின் புரொடியூசர்களும் தடையில்லாமல் பணம் செலவழிக்க தயார். ஆனால் இதற்கு ஒரே தடை... படத்தின் ஹீரோ ஜெய்ஆகாஷ்.
தேவையில்லாதது எல்லாம் குப்பை தொட்டியில் சேர்வது போல, வாரத்திற்கு நாலு படம் 'புக்'காக கால்ஷீட்டை தன் போக்கில் சொதப்புகிறார். யாராவது இது பற்றி கேட்டால், ஒரே படத்தில் நடிக்க நானென்ன படமில்லாமல் இருக்கிறேனா என்று மளிகை கடை லிஸ்ட் ஒன்றை காட்டுகிறார். ஜெய் ஆகாஷ் நடிக்கும் படப்பட்டியல் அது.
ஜெய் ஆகாஷின் இந்த லொள்ளால் 'அமுதே' படம் அமுல் பேபியாக ஆறு மாசத்தில் முடியுமோ.. ஆறு வருடத்தில் முடியுமோ என தட்டுத்தடுமாறி திண்டாடிக்கொண்டிருக்கிறது.
அளவுக்கு மீறினால் அஜீரணம்தான் மிஞ்சும் என்று உண்மையை ஜெய் ஆகாஷுக்கு யாராவது எடுத்துச் சொல்லக்கூடாதா?
Thanx: Cinesouth

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>