12-15-2004, 07:40 AM
சிறுமையின் சின்னமாய் மாறியுள்ள அம்மானிற்கு!
உங்களைப் பற்றி நான் எழுதிய இரண்டாவது கடிதத்திற்கு வழக்கம் போலவே வாழ்த்துக்களும், பாராட்டுக்களும், கருத்துக்களுமாக ஏராளமான மின் அஞ்சல்கள் வந்திருந்தன. சில மின் அஞ்சல்கள் மிரட்டல்களாகவும் வந்தன. அத்தோடு சில ஆலோசனைக் கடிதங்கள் போராளிகளிடம் இருந்து வந்தவை போல இருந்தன. உள்விடயங்கள் வெளியாவதில் சங்கடங்கள் பற்றிப் பிரஸ்தாபித்திருந்தார்கள். ஆனால், இன்னொரு பிழையைத் தவிர்ப்பதற்காகச் சிலதைச் சொல்லியே ஆகவேண்டும் என்பது எனது நிலைப்பாடு. நான் ஏன் தொடர்ந்து எழுதவில்லையென்று கேட்டும் சில கடிதங்கள் வந்திருந்தன. புனிதத் திருநாட்களான மாவீரர் வாரத்தை அவர்களை நினைப்பதிலேயே செலவழித்தேன். அதனால் தான் இந்தத் தாமதம்.
நிற்க, நமது பிரச்சனைக்கு வருவோம், அம்மான். உங்கள் ~பேச்சைக்| கேட்டேன், பார்த்தேன். உச்சமான பயத்தில் நீங்கள் இருப்பதை உங்கள் தோற்றம் படம்பிடித்துக் காட்டியது. ஓடி ஒளிவதற்கு இடம் தேடுகிறவனைப் போல நீங்களும் கூனிக்குறுகிப் போயுள்ளீர்கள். தூக்குக் கயிறு கழுத்தில் மாட்டப்பட்டு அது இழுப்பதற்குத் தயாரான நிலையிலுள்ள கைதி மாதிரி உங்கள் முகம் சரியாக வெளிறிப் போயுள்ளது. ~நல்ல பாம்பு ஆடுதெண்டு நாக்கிழியாம்புளுவும் ஆடியதாம்| என்பது போல ஒரு கேலிக்கூத்து செய்திருக்கிறீர்கள். என்ன செய்வது, சிங்களப்படைகளும், உங்களால் ஒரு காலத்தில் (-----) என்று கேலியாகப் பேசப்பட்ட துரோகிகளும் சொல்வதை செய்ய வேண்டியது தானே இப்போது உங்களின் கடமை.
அடுத்து உங்களின் பெயரில் வெளியிட்டதாக சில பக்கங்களை மின்னஞ்சலில் நண்பர்கள் அனுப்பியிருந்தார்கள். அதிலுள்ளவை பல எனக்கு நகைப்பையே கொடுத்தன. ஏனென்றால் சிங்கள அரசாங்கம் செய்ய வேண்டியதையே நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதைத் தான் அவை காட்டின. முக்கியமாக பொறியில் அகப்பட்டுப் பீதியில் அலறுவது போன்ற உங்களின் சின்னம் உங்கள் பேயறைந்த நிலையைப் பிரதிபலிப்பது போலவே இருந்தது. சிங்களப்படைகள் தருவதைத் தானே நீங்கள் பாவிக்க முடியும்.
இருந்தாலும்ää சிங்களப் படைகளுக்கும் உங்களுக்கும் தொடர்பே இல்லாதது போலக் காட்ட முனைந்திருக்கிறீர்கள். ஏரிக்கரைச் சாலையென்று முகவரி போட்டீர்கள். இதை ரவுனுக்குள் உள்ள நண்பனிடம் கேட்டேன். வருவானா பார்ப்போம் என்று அவன் தொலைபேசியில் கறுவினான். எனக்குத்தெரியும். நீங்கள் அங்கே ஒருபோதும் போகமாட்டீர்கள். இப்போது நீங்கள் இருக்கிற சிங்கள படைக் குகையில் கூடக் காலைக்கடன் கழிக்க துணையில்லாமல் போக மாட்டீர்கள். புலிப்பரம்பரையில் வந்த எங்கள் போராளிகள் எங்குமே புகுந்து விளையாடுவார்கள் என்றதைக் கண்கூடாகக் கண்டவர் தானே நீங்கள்!.
என்ன அம்மான்! எங்கள் மாவட்டங்களின் போராளிகளை வன்னிக்கு அழைத்தார்கள் என்ற பழைய பல்லவியைப் பாடியிருக்கிறீர்கள். கிழக்கிற்கான யுத்தம் எங்கே புரியப்படவேண்டும் என்பது உங்களைத் தவிர சிங்களப்படை உள்ளிட்ட அனைவருக்கும் விளங்கியே இருந்தது. ஆனால் உங்களிற்கு சிங்களப் படைகளிடம் போன பின்பும் கூட இது விளங்க மாட்டேன் என்பதை நினைக்க வேதனையாக இருக்கு. இதில் சிரிப்பு என்னவென்றால் வடக்கைச் சேர்ந்த டக்ளசும், ஞானராஐhவும் உங்களின் தோழர்கள். அவர்களுடன் இருந்து கொண்டே நீங்கள் நன்றாக பிரதேசவாத மட்டையடிக்கிறீர்கள். ஆனால் நீங்கள் தொடர்ந்து பிரதேசவாதத்தைப் பேசப் பேச அது நாற்றமெடுக்கிறது. கடலளவு அத்தர் ஊற்றினாலும் இனி உங்களின் செயற்பாட்டு நாற்றத்தை மறைக்க முடியாது. அந்தளவு நாற்றமானது உங்களின் செயற்பாடுகள். இப்போதைக்கு அதைவிடுவோமே.
அதுசரி அம்மான், என்ன எக்கச்சக்கமான பொடியள் உள்ளதாக உங்களுடன் சேர்ந்தவர்களிடம் ஐ_வாலாகக் கதை விட்டு மாட்டுப்பட்டீர்களாமே? தந்த காசைத் திருப்பிச் தரச் சொல்லிக் கேட்கிறார்களாமே? இனியபாரதியைத் தவிர ஒருவரையுமே இப்ப நீங்கள் சந்திப்பதில்லை என்று தானே கேள்விப்பட்டேன். அந்தளவிற்கு நம்மடை பொடியள் உள்ளுக்குள் புகுந்து இருந்தவர்களையெல்லாம் இல்லாது செய்து உங்களையும் நித்திரை கொள்ளமுடியாத அளவிற்குச் செய்து விட்டார்கள். என்ன அம்மான் செய்வது? யாரை நம்புவது என்ற பயம் உள்ள உங்களிடம், யாருமே இல்லை என்ற உண்மையும் இப்போது வெளியே வந்துவிட்டது.
இருந்தாலும் உங்களுடன் கூட்டுச் சேர்ந்து உங்களிற்கு செயலாளர் என்று நீங்கள் அறிவித்தவரும் காணாமல் போய்விட்டாராமே? மெய்தானா? பிரதேசவாதம் பேசுகிற உங்களிற்கு வடக்கைச் சேர்ந்த செயலாளர் என்றவுடன் எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை. இப்ப அவருடைய மர்ம மறைவும் விளங்கவில்லை! என்ன செய்வது! நீங்கள் இன்னுமொருவரைச் செயலாளர் வேலைக்கு அழைக்க வேண்டும். --- என்று நீங்கள் முன்னர் திட்டித் தீர்க்கும் அந்தமாதிரிப் பிறந்தவர்கள் யாரும் இருப்பார்கள். விடாமல் முயற்சியுங்கள்.
முஸ்லிம்களின் மேல் உங்களுக்கு திடீர் அனுதாபம் ஒன்று ஏற்பட்டிருப்பதாக நீங்கள் காட்டுவதாகத் தகவல். அம்மான்! 2001 இல் முள்ளியவளை உதயம் முகாமில் நடந்த நிகழ்வின்போது முஸ்லிம் சகோதரர்களோடு எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்று தேசியத் தலைவர் ஆலோசனை தர நீங்கள் தேள்கொட்டிய திருடனாக விழித்ததை அவ்வளவு அவசரப்பட்டு மறந்திருந்தாலும் கூட அதன் ஒளிப்பதிவுப் பேழைகள் எங்களுடன் இருந்த பலரிடமும் இப்போதும் இருக்கும். முடிந்தால் அதில் தலைவர் உங்களுக்கு எப்படிப் புத்தி சொல்லியிருக்கிறார் என்று ஒருமுறை நினைவை மீட்டுப்பாருங்கள்.
அதன்பிறகு எங்களுக்கே எத்தனை முறை தலைவர் விடுகிறார் இல்லை இல்லையென்றால் உவங்களை... என்று கூறியிருப்பீர்கள். இப்போது அதே பிளேற்றை மாற்றி உங்களை நல்ல பிள்ளையாக காட்ட முனைகிறீர்களே அம்மான். அதுதவிர ஓட்டமாவடி முஸ்லிம் மக்களும் நீங்கள் தொலைத்தொடர்பு சாதனத்தில் திருவாய் மலர்ந்த சிலவற்றின் ஒலிப்பதிவுகளை வைத்திருக்கிறார்களாம். தேவையேற்பட்டால் நசலைப்பிரட்டுவதற்கு அவர்களும் தயாராகவே இருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஏனம்மான் காசைக்கொடுத்து குத்துமாடு வாங்குகிறீர்கள்.
அடுத்து உங்களைத் தமிழீழப் போராட்டத்திலிருந்து பிரிக்க முடியாது என்றொரு கருத்தை அள்ளி வீசியிருக்கிறீர்கள். அது மிகச்சரி. தமிழீழப் போராட்டத்திற்கு துரோகம் செய்யப் புறப்பட்டு முடியாமல் சிங்களவரின் காலில் விழுந்து மடிந்த ஒரு நயவஞ்சகன் என்று தமிழீழ வரலாற்றின் எங்காவது ஒரு பக்கத்தில் உங்களைப் பற்றி எழுதப்பட்டிருக்கும். எனவே உண்மையில் உங்களைத் தமிழீழப் போராட்ட வரலாற்றிலிருந்து பிரிக்க முடியாது தான்.
நீங்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாகவும் ஒரு கருத்துத் தெரிவித்திருந்தீர்கள். அது உண்மை அம்மான். நீங்கள் இப்போது ஒரு சோரம்போன பிரேதம். யோசித்துப் பாருங்கள். எங்கள் மாவட்டத்தைச் சேர்ந்த பெடியள் ஒருவருடன் கூட நம்பிப் பழக முடியாத நிலை. தங்களுக்குத் தேவையானதை உங்களின் பெயரில் சிங்களப்படை துண்டுப் பிரசுரமாக வெளியிடுகிறது. எழுதித் தருவதை, வாசி என்றவுடன் வாசிக்கிற கீழ்நிலைச் சீவியம் என்று இருப்பதும் ஒன்று தான். உண்மையில் இறந்துபோவதும் ஒன்றுதான். உங்கள் முடிவு எதுவானாலும் உங்களுக்கு இனி உயிர்ப்பு ஏற்படப்போவதில்லை. செத்துப் போனவற்றை உடன் எரிப்பதோ அல்லது புதைப்பதோ தான் மனித வழக்கு. மறுபடியும் சந்திப்போம்.
-அருகிலிருந்தவன்