12-14-2004, 07:39 PM
<img src='http://kuruvikal.yarl.net/archives/crown.jpg' border='0' alt='user posted image'>
அது ஒரு உலகம்
அங்கு...
அன்பின் அடையாளம்
அன்னை
பண்பின் அடையாளம்
தந்தை
பாசத்தின் அடையாளம்
உடன் பிறந்த உறவுகள்
நேசத்தின் அடையாளம்
சூழ இரு சுற்றம்
இத்தனையும் குறைவிலா
வாழ்வு வாழ்ந்திட...
கருணையது
மனிதனைச் சிறப்பிக்க
அன்பது கோலோஞ்ச
இறை எனும்
ஞானம் வழிகாட்ட
மனிதன் அறிவு வளர்த்து
பகுத்தாய்ந்து
மானுடம் கொண்டு
மாண்புடன் வாழ்ந்தான்....!
இன்று அந்த உலகில்...
அன்னைக்குரியவள்
அன்பு தொலைத்து
அலையும் விலங்கானாள்
பண்புக்குரியவன்
பாவியாகி பரிதவிக்கிறான்
பாசத்து உறவுகள்
பஞ்சமா பாதகங்கள் புரிய
சூழ இரு சுற்றம்
குற்றம் இரு சுற்றமாச்சு....!
கருணை சுருக்கில் தொங்க
அன்பு அடைக்கப்பட்டு
கொடுங்கோலாட்சி நடக்குது...
இறை ஞானம் மறந்து
மனித ஆணவம்
விஸ்வரூபம் எடுக்குது...
மெஞ்ஞானம் போய்
அஞ்ஞானம் வளருது....
அறிவுக்கு வேலை போய்
ஆயுதத்துக்கு வேலை கொடுத்தாச்சு....
ஆக்கம் போய் அழிவு
விளைவாச்சு....!
இவை கண்டு
அன்பின் முதல்வன்
அனுப்பி வைத்தான்
தன் புதல்வன்...!
மானிலத்தில்
அன்பு ஆட்சி செய்ய...
மானுடம் மரிக்காது
மனித மனங்கள் கொண்ட
மாசறுத்து மனுநீதி வளர்த்து
மனிதனை மாண்பு கொண்டு
சிறப்பிக்க....!
ஆனால்....
பாவத்தின் விதி வலைக்குள்
சிக்கிவிட்ட மானிடன்
அன்பின் அர்த்தம் புரியா
விலங்கினும் கொடிய மிருகமாய்....
அன்பின் தூதனை
முட்கிரீடமிட்டு
குருதியால் பூஜித்தான்...!
அதன் பலனாய்
இன்றும் இதயத்துள் அன்பின்றி
முட்களைச் சுமக்கிறான்
அன்பு அர்த்தமற்றதாய்
அவனை அழிக்கிறது....
பாவ வலைக்குள்
மீளமுடியாச் சிக்கலில்
அவன் ஆயுள் முடியும் வரை....!
மனிதா..
உனக்கொரு ஆறுதல் வார்த்தை....
காதில் விழுந்தால் பற்றிக் கொள்
கவலை விடு...
பாவத்தின் வலைக்குள்
சிக்கலுக்குள்
நீ பரிதவிப்பது உணரின்
இன்னும் இருக்கு
மீட்சிக்கு வழி
உணர்ந்து கொள்....!
அன்புக்கு அன்று
நீ முட்கிரீடமிட்டாய்
இன்று
அன்பு முட்கிரீடமாய்
உனக்கு...!
நீ செய்த
பாவத்தின் விளைவு களைந்து
அன்பை அரவணைக்க வேண்டின்
அணிந்து கொள்
இக் கிரீடம்...!
முள்ளானாலும்
உன் இதயம் கிழித்தாயினும்
மீண்டும் உன்னுள்
அன்பு மலர வைக்கும்....!
நன்றி.. http://kuruvikal.yarl.net/
அது ஒரு உலகம்
அங்கு...
அன்பின் அடையாளம்
அன்னை
பண்பின் அடையாளம்
தந்தை
பாசத்தின் அடையாளம்
உடன் பிறந்த உறவுகள்
நேசத்தின் அடையாளம்
சூழ இரு சுற்றம்
இத்தனையும் குறைவிலா
வாழ்வு வாழ்ந்திட...
கருணையது
மனிதனைச் சிறப்பிக்க
அன்பது கோலோஞ்ச
இறை எனும்
ஞானம் வழிகாட்ட
மனிதன் அறிவு வளர்த்து
பகுத்தாய்ந்து
மானுடம் கொண்டு
மாண்புடன் வாழ்ந்தான்....!
இன்று அந்த உலகில்...
அன்னைக்குரியவள்
அன்பு தொலைத்து
அலையும் விலங்கானாள்
பண்புக்குரியவன்
பாவியாகி பரிதவிக்கிறான்
பாசத்து உறவுகள்
பஞ்சமா பாதகங்கள் புரிய
சூழ இரு சுற்றம்
குற்றம் இரு சுற்றமாச்சு....!
கருணை சுருக்கில் தொங்க
அன்பு அடைக்கப்பட்டு
கொடுங்கோலாட்சி நடக்குது...
இறை ஞானம் மறந்து
மனித ஆணவம்
விஸ்வரூபம் எடுக்குது...
மெஞ்ஞானம் போய்
அஞ்ஞானம் வளருது....
அறிவுக்கு வேலை போய்
ஆயுதத்துக்கு வேலை கொடுத்தாச்சு....
ஆக்கம் போய் அழிவு
விளைவாச்சு....!
இவை கண்டு
அன்பின் முதல்வன்
அனுப்பி வைத்தான்
தன் புதல்வன்...!
மானிலத்தில்
அன்பு ஆட்சி செய்ய...
மானுடம் மரிக்காது
மனித மனங்கள் கொண்ட
மாசறுத்து மனுநீதி வளர்த்து
மனிதனை மாண்பு கொண்டு
சிறப்பிக்க....!
ஆனால்....
பாவத்தின் விதி வலைக்குள்
சிக்கிவிட்ட மானிடன்
அன்பின் அர்த்தம் புரியா
விலங்கினும் கொடிய மிருகமாய்....
அன்பின் தூதனை
முட்கிரீடமிட்டு
குருதியால் பூஜித்தான்...!
அதன் பலனாய்
இன்றும் இதயத்துள் அன்பின்றி
முட்களைச் சுமக்கிறான்
அன்பு அர்த்தமற்றதாய்
அவனை அழிக்கிறது....
பாவ வலைக்குள்
மீளமுடியாச் சிக்கலில்
அவன் ஆயுள் முடியும் வரை....!
மனிதா..
உனக்கொரு ஆறுதல் வார்த்தை....
காதில் விழுந்தால் பற்றிக் கொள்
கவலை விடு...
பாவத்தின் வலைக்குள்
சிக்கலுக்குள்
நீ பரிதவிப்பது உணரின்
இன்னும் இருக்கு
மீட்சிக்கு வழி
உணர்ந்து கொள்....!
அன்புக்கு அன்று
நீ முட்கிரீடமிட்டாய்
இன்று
அன்பு முட்கிரீடமாய்
உனக்கு...!
நீ செய்த
பாவத்தின் விளைவு களைந்து
அன்பை அரவணைக்க வேண்டின்
அணிந்து கொள்
இக் கிரீடம்...!
முள்ளானாலும்
உன் இதயம் கிழித்தாயினும்
மீண்டும் உன்னுள்
அன்பு மலர வைக்கும்....!
நன்றி.. http://kuruvikal.yarl.net/
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

