12-12-2004, 09:53 PM
yarl Wrote:விடுதலைப்புலிகளுக்கு உலங்குவானூர்தி சேவை நிறுத்தம் அல்லது நிறுத்தப்படும்.
?
முழுமையான செய்தி இன்னமும் கிடைக்கவில்லை.
பி.கு சந்திரிகா விளையாட்டை ஆரம்பிக்கிறா
முடிக்கத்தெரியாமல் பழையபடிபோல அல்லாடப்போகிறா<!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
நேர்வே தரப்பிற்கு உலங்குவானூர்தி கொடுப்பதில்லையென சிறிலங்கா விமானப்படை முடிவு.
ஜ ஞாயிற்றுக்கிழமைஇ 12 டிசெம்பர் 2004 ஸ ஜ அப்துல்லா ஸ
தமிழீழ விடுதலைப்புலிகள் உறுப்பினர்களுக்கும் , நோர்வேத் தரப்பினருக்கும் இனிமேல் உலங்குவானூர்தி சேவையை வழங்குவதில்லை என சிறிலங்கா விமானப்படை முடிவெடுத்திருப்பதாகத் தெரியவருகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப்பிரதேசத்திலிருந்து கட்டுநாயக்கா விமானநிலையத்துக்கோ அல்லது வடக்கு கிழக்குப் பகுதிகளுக்கிடையிலோ , சமாதானப் பிரதிநிதிகளுகான போக்குவரத்து சேவையை இனி மேற்கொள்வதில்லை என பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்து நடத்திய ஆலோசனையின் பின்னர், விமானப்படை தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோர்வே அனுசரணையாளர்கள் மற்றும் இராஜதந்திரிகளையும் இனிமேல் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்கு அண்மையிலுள்ள சிறிலங்கா விமானநிலையம்வரை விமானப்படையினர் கொண்டு சென்று விடுவது என்றும், புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் அவர்கள் தரை மார்க்கமாகவே செல்ல வேண்டும் எனவும் விமானப்படை முடிவெடுத்துள்ளது. இந்தத் திரைமறைவு நாடகத்தில் ஜே வி பி அமைப்பினர் இருப்பதாகவும் அறியமுடிகிறது.
(nitharsanam)


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->