Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நட்சத்திரஇரவு கொண்டாட்டத்தில் குண்டு வெடிப்பு இருவர் பலி
#11
மாலைமலர் செய்தி

இலங்கை தலைநகர் கொழும்புவில் இந்தி திரை உலக முன்னணி நட்சத்திரம் ஷாருக்கான் தலைமையில் `வசீகரம்-2004' என்ற பெயரில் கலைநிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த விழாவில் ஷாருக்கான் தவிர நடிகைகள் பிரீத்தி ஜிந்தா, பிரியங்கா சோப்ரா, செலினா ஜேட்லி, நடிகர்கள் சயீப் அலிகான், ஜாவேத்கான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரி மனைவி மற்றும் இலங்கையில் உள்ள முன்னணி நிறுவனங்கள் செய்திருந்தன.

இந்த நிகழ்ச்சிக்கு புத்தமத துறவிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மிகவும் பிரபலமான புத்த துறவி காங்கோடி லா சோம நினைவு நாளில் கலை நிகழ்ச்சியை நடத்தக்கூடாது மீறி நடத்தினால் தீக்குளிப்போம் என்று அவர்கள் மிரட்டல் விடுத்து இருந்தனர்.

ஆனால் திட்டமிட்டப்படி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நடிகர் ஷாருக்கான் தலைமையில் இந்தி நடிகர், நடிகைகள் கொழும்பு சென்றனர். இதை கண்டித்து புத்த துறவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நிகழ்ச்சி நடந்த ரேஸ்கோர்ஸ் திறந்தவெளி மைதானத்திற்கு சென்று ரசிகர்களையும், வாகனங்களையும் அவர்கள் தாக்கினார்கள்.

இதையடுத்து பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டு இருந்த போலீசார் கண்ணீர் புகைக்குண்டு வீசி கூட்டத்தை கலைத்தனர். வன்முறையில் ஈடுபட்ட 12 பேரை கைது செய்தனர்.

இதையடுத்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்களுடன் நடிகர் ஷாருக்கான் ஆலோசனை நடத்தினார். பின்னர் புத்த துறவிகளை சந்தித்து பேசினார். ஆறு மாதங்களுக்கு முன்பு இந்த நிகழ்ச்சிக்கான நாளை தேர்ந்து எடுத்தோம்.

துறவியின் நினைவு நாள் வருவதை அப்போது சுட்டிக்காட்டி இருந்தால் மாற்று தினத்தை தேர்வு செய்து இருக்கலாம். உங்களுடைய உணர்வுகளை நாங்களும் பகிர்ந்து கொள்கிறோம் என்று அவர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து நிகழ்ச்சி நடத்துவதற்கு புத்த துறவிகள் சம்மதம் தெரிவித்தனர்.

இதையடுத்து திட்டமிட்டப்படி கலைநிகழ்ச்சி தொடங்கியது. அரங்கிற்குள் நுழைந்த ரசிகர்களை 4 இடங்களில் சோதனை செய்து விட்டு போலீசார் உள்ளே அனுப்பினார்கள். கலை நிகழ்ச்சி முடிந்த பிறகு நடிகர் ஷாருக்கான் மற்றும் நடிகர், நடிகைகள் மைதானத்தை விட்டு வெளியேறினார்கள். அவர்களைத் தொடர்ந்து பொதுமக்களும் மைதானத்தை விட்டு வெளியேறிக்கொண்டு இருந்தார்கள்.

அப்போது அரங்கினில் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள கேலரியில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் இலங்கையைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணும், 22 வயது மதிக்கத்தக்க வாலிபரும் பலியானார்கள். 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். நள்ளிரவு 11.30 மணி அளவில் இந்த சம்பவம் நடந்தது. நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த ரவி சாஸ்திரியின் மனைவியும் காயம் அடைந்தார். காயம் அடைந்தவர்களில் பலர் குழந்தைகள்.

இலங்கைக்கான இந்திய தூதர் நிருமாராவும் விழாவில் கலந்து கொண்டார். குண்டு வெடித்த உடன் அவரை பாதுகாப்பு அதிகாரிகள் பத்திரமாக வெளியே அழைத்துச் சென்றனர். விழா முடிந்ததும் முன் வரிசையில் அமர்ந்து இருந்தவர்கள் மீது கையெறி குண்டு வீசப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்தவர்களுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

குண்டு வெடித்தது குறித்து ரவி சாஸ்திரியின் மனைவி கூறும்போது, ஒரு நபர் எங்களை நோக்கி குண்டுவை எறிந்தான். அரங்கினில் இருந்தவர்கள் முதலில் பட்டாசு வெடிப்பதாக நினைத்தனர். பிறகுதான் குண்டு வெடித்தது தெரிந்ததும் பரபரப்பு ஏற்பட்டது என்று தெரிவித்தார். இந்த சம்பவம் இலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Reply


Messages In This Thread
[No subject] - by killya - 12-11-2004, 10:47 PM
[No subject] - by tamilini - 12-11-2004, 11:34 PM
[No subject] - by Danklas - 12-11-2004, 11:41 PM
[No subject] - by kuruvikal - 12-12-2004, 01:28 AM
[No subject] - by kuruvikal - 12-12-2004, 03:23 AM
[No subject] - by aathipan - 12-12-2004, 06:11 AM
[No subject] - by aathipan - 12-12-2004, 06:22 AM
[No subject] - by hari - 12-12-2004, 08:09 AM
[No subject] - by hari - 12-12-2004, 08:14 AM
[No subject] - by aathipan - 12-12-2004, 11:26 AM
[No subject] - by MEERA - 12-12-2004, 12:45 PM
[No subject] - by tamilini - 12-12-2004, 01:18 PM
[No subject] - by tamilini - 12-12-2004, 01:18 PM
[No subject] - by killya - 12-12-2004, 04:59 PM
[No subject] - by killya - 12-12-2004, 04:59 PM
[No subject] - by hari - 12-12-2004, 05:17 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)