12-12-2004, 06:22 AM
குண்டுவெடிப்புபற்றிய செய்தி இந்திய தினமலர் நாளிதழில்..
கொழும்பு : இலங்கை அரசின் ஆதரவுடன் இந்தி திரைப்பட நடிகர் ஷாரூக்கான் தலைமையில் பிரமாண்டமான கலை நிகழ்ச்சி கொழும்பு நகரில் நேற்று(சனிக்கிழமை) நடந்தது. இந்த கலைநிகழ்ச்சிக்கு அங்குள்ள புத்த துறவிகள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர். இவர்களை போலீசார் கண்ணீர் குண்டுகளை வீசியும், தண்ணீர் பீச்சியும் கூட்டத்தை கலைத்தனர். இந்நிலையில் நிகழ்ச்சி நடந்த ரேஸ் கோர்ஸ் திறந்த வெளி மைதானத்தில் திடீரென பலத்த குண்டு சத்தம் கேட்டதுஉ இந்த குண்டு வெடிப்பில் நிகழ்ச்சியை காணக் கூடியிருந்த ரசிகர்கள் கூட்டத்தில் 2 பேர் பலியானார்கள். பலர் காயமடைந்துள்ளனர். 32 வயதுடைய ஒரு பெண்ணும், 22 வயதுடைய ஆண் ஒருவரும் பலியாகியுள்ளனர். இந்த குண்டு வெடிப்பில் குழந்தைகள் பலர் காயமடைந்துள்ளனர் என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கிறது. இதில் நடிகர்கள் குழுவிற்கு எந்த வித காயமும் ஏற்படவில்லை