Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மன்னிப்பு கேட்ட ஷாருக்கான்
#1
இலங்கை: மன்னிப்பு கேட்ட ஷாருக்கான்

கொழும்பு:

இலங்கையில் மறைந்த புத்த மத துறவி கங்கோதவிலா சோமாவின் முதலாவது ஆண்டு நினைவு தினமான இன்று, கொழும்பு நகரில் நடைபெறும் இந்தி திரைப்பட விழாவை ஒத்திவைக்காவிட்டால் தீக்குளித்து இறப்போம் என்று புத்த மத துறவிகள் (பிட்சுகள்) மிரட்டல் விடுத்தனர்.


நினைவு தினம் என்று தெரியாமல் விழா தேதியை முடிவு செய்துவிட்டதாக அவர்களிடம் ஷாருக்கான் மன்னிப்பு கோரினார். இதையடுத்து புத்த பிட்சுக்கள் மிரட்டலை கைவிட்டு கலைந்து சென்றனர். புத்தத் துறவிகளின் இந்தப் போராட்டத்துக்கு பொது மக்களின் ஆதரவு கிடைக்கவில்லை என்பதும் மிரட்டலைக் கைவிட ஒரு காரணமாகும்.

நடிகர் ஷாருக்கான், பிரீத்தி ஜிந்தா, பிரியங்கா சோப்ரா, சைப் அலிகான் உள்ளிட்ட இந்திப் பிரபலங்கள் கலந்து கொள்ளும் டெம்ப்டஷேன்2004 என்ற திரை விழா இன்று கொழும்புவில் நடைபெறவுள்ளது.

புத்த மதத் துறவி கங்கோதவிலா சோமாவின் முதலாவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. எனவே திரைப்பட விழாவைத் தள்ளி வைக்க வேண்டும் என்று புத்த மத துறவிகள் நிகழ்ச்சி அமைப்பாளர்களைக் கேட்டுக் கொண்டனர். ஆனால் அதற்கு நிகழ்ச்சி அமைப்பாளர்கள் மறுத்து விட்டனர்.

இதையடுத்து நேற்று விழா அமைப்பாளர்களை சந்தித்த சில புத்த மதத் துறவிகள், எங்களது உணர்வுகளை மீறி இன்று விழா நடந்தால் விழா அரங்கம் முன்பு தீக்குளித்துத் தற்கொலை செய்து கொள்வோம் என்று மிரட்டல் விடுத்னர்.

இதன் தொடர்ச்சியாக இன்று விழா நடக்கும் பகுதியில் புத்த துறவிகள் குவிந்தனர். இதனால் அந்தப் பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. போலீஸாரும் ராணுவத்தினரும் அப் பகுதியில் குவிக்கப்பட்டனர்.

இதையடுத்து இன்று அவர்களிடம் நிகழ்ச்சி அமைப்பாளர்களின் சார்பில் நடிகர் ஷாருக்கான் மன்னிப்பு கோரினார். நினைவு தினம் என்பது தெரியாமல் நாள் குறிக்கப்பட்டுவிட்டதாகவும், விழாவைத் தொடங்கும் முன் மறைந்த துறவிக்காக அஞ்சலி செலுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

இதையடுத்து போராட்டத்தை புத்த பிட்சுக்கள் கைவிட்டனர்.
Reply


Messages In This Thread
மன்னிப்பு கேட்ட ஷாருக்கான் - by Vaanampaadi - 12-11-2004, 06:27 PM
[No subject] - by yarl - 12-11-2004, 09:36 PM
[No subject] - by tamilini - 12-11-2004, 11:13 PM
[No subject] - by hari - 12-12-2004, 07:43 AM
[No subject] - by tamilini - 12-12-2004, 01:40 PM
[No subject] - by hari - 12-12-2004, 03:35 PM
[No subject] - by tamilini - 12-12-2004, 04:02 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)