Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கொலஸ்ட்ரால் குறையணுமா? பார்லி சாப்பிடுங்க.
#1
கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த விரும்புவோருக்கு பார்லி ஒரு கண்கண்ட மருந்தாகும். அதில் காணப்படும் பீட்டா குளுக்கான் என்ற கரையக் கூடிய நார்ச்சத்து கொலஸ்;ட்ராலை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதேப் போன்ற நார்ச்சத்து மற்ற வகை முழு தானியங்களிலும், பழங்கள் மற்றும் காய்கறி களிலும் காணப்படுகிறது. இருப்பினும் மற்ற முழு தானியங்களைக் காட்டிலும் பார்லியில் தான் பீ;ட்டா குளுக்கான் அதிகமாக உள்ளது. இதயத்துக்கு கெடுதல் செய்யும் எல்.டி.எல். என்ற கொழுப்பை பார்லியானது 8 முதல் 17.4 சதவீதம் வரை குறைக்கிறது என்று ஆய்வில் கண்டுபிடித்து உள்ளனர்.
ஆனால் பார்லியின் இந்த அதீத் சக்தி நம்மில் பலருக்கு தெரிவதில்லை. இதனால் மற்ற முழு தானியங்களுடன் ஒப்பிடும் போது பார்லியின் பயன்பாடு குறைவாகவே உள்ளது. ஆகையால் கொலஸ்ட்ரால் குறைய விரும்புபவர்கள் பார்லியை அதிகமாக பயன்படுத்துவது நன்மை பயக்கும்.
Reply


Messages In This Thread
கொலஸ்ட்ரால் குறையணுமா? பார்லி சாப்பிடுங்க. - by ஊமை - 12-11-2004, 03:22 PM
[No subject] - by sinnappu - 01-04-2005, 06:36 PM
[No subject] - by ஊமை - 01-04-2005, 11:30 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)