Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நிமோனியாவை உண்டு பண்ணும் பற்சிதைவு
#1
பல் சிதைவு மற்றும் காரை ஆகியவற்றில் காணப்படும் நுண் கிருமிகள் நுரையீரலுக்குள் சென்று மிகக் கடுமையான நிமோனியா நோயை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாக அமொpக்க ஆராய்ச்சியாளர்கள் கூறி உள்ளனர். நியூயார்க் பல்கலைக்கழக மருத்துவர்கள் நடத்திய ஒரு ஆய்வில் இந்த உண்மை தொpய வந்துள்ளது.
அங்குள்ள ஒரு மருத்துவமனையில் சுவாசக் கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்ட 49 நோயாளிகளை பாpசோதனை செய்து பார்த்த போது, அவர்களில் சாpப் பாதி பேருக்கு பல்சிதைவு மற்றும் காரையில் காணப்படும் நுண் கிருமிகளே நிமோனியா பிரச்சினைக்கு காரணமாக இருந்தது தொpய வந்தது. மீதிப் பேருக்கு வேறு காரணங்களால் நிமோனியா வந்திருந்தது.

நிமோனியா எப்படி வருகிறது? என்று கூர்ந்து கவனித்த போது பல்நோய்களுக்கு காரணமான நுண் கிருமிகள் மெல்ல மெல்ல நுரையீரலுக்குள் புகுந்து பிரச்சினையை உண்டு பண்ணுவது கண்டுபிடிக்கப்பட்டது. பல்சிதைவுகளில் காணப்படும் நுண் கிருமிகள் இதய நோய்களுக்கும் காரணமாக இருப்பதாக ஏற்கனவே நிரூபிக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Reply


Messages In This Thread
நிமோனியாவை உண்டு பண்ணும் பற்சிதைவு - by ஊமை - 12-11-2004, 03:04 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)