12-11-2004, 05:55 AM
ஒருநாள் கோவில் அருகில் ஒதுங்கிய போது இரண்டு ஐயர்கள் பேசிக்கொள்வது காதில் விழுந்ததது. ஒருவர் சொல்கிறார். வருவாய் போதவில்லை வேறுகோவிலுக்கு வேலைக்கு போய்விடலாம் என்று. மற்றஐயர் ,அருகில் வேறு கோவிலில் வேலைசெய்யும் ஐயர்பற்றி பொறாமையுடன் சொல்கிறார். குறிப்பிட்டகோயிலுக்கு வந்தபின் அவர் பணக்காரர் ஆகிவிட்டார் என்று. அதற்கு மற்ற ஐயர் சொல்கிறார் அங்கு காலை மாலை பக்திப்பாட்டுகள் போட அனுமதிக்கிறார்கள். மின் விளக்குகளால் கோவிலை அலங்காிக்க அனுமதிக்கிறார்கள். சதுர்த்தி எதுவானாலும் பக்தர்களிடம் பணம் வாங்கி அவர்கள் பெயரை இன்று உபயம்என்று வெளியே பலகையில் எழுதிவைக்க அனுமதி உண்டு. பெண்கள் கூட்டத்தை கவர எல்லா வசதியும் உண்டு. அதனால் நல்ல கூட்டம். இங்கு மாலையில் பாட்டு போட்டால் அறங்காவலர் சண்டைக்கு வருகிறார். கூட்டத்தை வர ஏதுவாக எதும் செய்ய விடுவதில்லை. எப்படி நாம் சம்பாதிப்பது?. இதுபழமைவாய்ந்த கோயில் தான் ஆனால் என்ன பயன். எங்காவது சின்னக்கோவிலை எடுத்தால் கூட நல்ல கூட்டம் வரவைக்க முடியும்.....

