Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஆக்ஷன் ஹீரோக்களுக்கு அதிரடி டியூஷன்
#1
<b>ஆக்ஷன் ஹீரோக்களுக்கு அதிரடி டியூஷன்!</b><img src='http://www.vikatan.com/av/2004/dec/19122004/p137.jpg' border='0' alt='user posted image'>

வி.சி.டி. ஒழித்தது, விருதுகள் வழங்கியது என அடுத்தடுத்து அன்பு மழை பொழிவதால் கோடம்பாக்கத்துக்கு, அம்மாதான் இப்போ இஷ்டதெய்வம்! அதே சமயம், அரசு விருதுகள் வழங்கும் விழாவில்,''எப்படியெல்லாம் சினிமா எடுக்கக்கூடாது' என முதல்வர் அள்ளி வீசிய அட்வைஸ் மழையில் ஆடிப்போயிருக்கிறது கோடம்பாக்கம். அட்வைஸோடு நின்றுவிடாமல், இதை அழுத்தமாக டியூஷன் எடுத்து அமல்படுத்த வேண்டும் என்று முதல்வருக்கு ஆசை. உடனடி ஆக்ஷனில் மந்திரிகள் இறங்க, விஜயகாந்த் தலைமையில், நடிகர் படைக்கு அதிரடி டியூஷன் ஆரம்பம்...

<b>விஜயகாந்த்</b> (எடுத்த எடுப் பில்): 'நேத்துக் கூட தண்ட்ராம்பட்டு பக்கத்துல, ஒரு குக்கிராமத்துல ''நெறஞ்ச மனசு'' படத்தை கேபிள் டி.வி|யில போட்டுப் பாத்திருக் கானுங்க. போலீஸ் பொறப்பட்டுப் போயி, அவனுங்கள வளைச்சுப் பிடிச்சு செவுட்டுல போட்ருக்கு. அம்மா எடுத்த ஆக்ஷன்லதான் எங்களுக்குச் சோறு போட்டு மோரு ஊத்தற சினிமாவே இன்னிக்குப் பொழச்சு இருக்கு!''

<b>சிம்பு </b>(மெதுவாக): 'அட... அப்பிடி யாச்சும் உங்க படத்தை ஜனங்க பார்க்க றாங்களேனு பெருமைப்படுங்க!''

<b>விஜயகாந்த்:</b> ''ஆனா, இந்த டி.வி|க் காரனுங்க தொல்லைதான் தாங்கமுடிய லீங்க. நாங்க செத்துச் சுண்ணாம்பாகிப் படமெடுக்கிறோம். இவனுங்க கடப்பாறையை முழுங்கின மாதிரி, குஷன் சோபாவுல உட்காந்துக்கிட்டு 'நெறஞ்ச மனசு | கொறஞ்ச மனசு'னு எதுகை மோனையில எகனை மொகனையாப் பேசறானுங்க. அம்மா அவனுங்களுக்கும் ஆக்ஷன் ஆப்பு அடிக்கணும்ங்க!''

<b>ஜெ:</b> ''மிஸ்டர் விஜயகாந்த்! அப்படி நாலு பேர் பேசிடக்கூடாதேனுதான் இந்த டியூஷனே! என்ன இருந்தாலும் சினிமா என் தாய்வீடு இல்லையா... அதனால நான் சொல்ற மாதிரி சமத்தா நல்ல படம் எடுத்தீங்கன்னா, யாரும் உங்களைப் பத்தித் தப்பா பேசமாட்டாங்க. என்ன, சரியா?''


''ஓகே மேடம்!'' என கோரஸ் குரல்கள்...

<b>சிம்பு</b> (மனசுக்குள்): ''ஆகா, நாமெல் லாம் நடிகருங்களா இல்லே நர்ஸரி ஸ்கூல் பிள்ளைங்களானு தெரியலையே''

<b>ஜெ:</b> ''முதல்ல, படத்துல வன்முறை இருக்கக்கூடாது!''

<b>ஓ.பன்னீர்:</b> ''ஆமாம்மா! இப்பல்லாம் எவனைப் பார்த்தாலும் 'ஏய்...ஏய்'னு குரல்வளையைக் கடிச்சுத் துப்புற மாதிரியே பேசிட்டு அலையறானுங்க. சத்தம் தாங்க முடியலீங்க!''

<b>பொன்னையன்:</b> ''ஆமா ஸ்டூடண்ட்ஸ்! இனிமே படத்துலகூடச் சண்டை போடாம நீங்கள்லாம் ஒத்துமையா இருக்கணும். குறிப்பா, காய்கறி மார்க்கெட் செட்டுக்குள்ளே யாருமே சண்டை போடக்கூடாது!''

<b>விஜய்</b> (பதறி): ''அய்யய்யோ... அஸ்தி வாரத்தையே ஆட்டிப் பார்க்கறீங்களே! ஆக்ஸிஜன் இல்லாமக்கூட வாழ்ந்துரு வோம். ஆனா, ஆக்ஷன் இல்லாம வாழ முடியாதுங்களேம்மா!''

<b>பொன்:</b> ''அப்புறம், இந்தப் பாழாப் போன பஞ்ச் டயலாக்கு! 'ஏய்... வெளியில வந்தா வெளி மூலம், உள்ளே வந்தா உள் மூலம், உன் பேரு ஆதிமூலம், உன் சாவு என் மூலம்!'னு நாராசமா பேசறானுங்கம்மா! அதனால, இனிமே யாரும் பஞ்ச் டயலாக்கே பேசக்கூடாது. குண்டர் சட்டம் மாதிரி பஞ்ச்சர் சட்டம்னு ஒண்ணு போட்டு, பஞ்ச் டயலாக் பேசறவங்களையெல்லாம் பிடிச்சு உள்ளே தள்ளி, லாடம் கட்ட ஏற்பாடு செய்யுங்கம்மா!''

<b>அஜீத் </b>(அலறி): ''இத்துல எனக்கு இஸ்டமில்ல! நான் நம்பர் ஒன்னா வர்றது, யார்க்கோ பிடிக்ல! அதான் இப்டிச் சட்டம் போட்டுச் சதி பண்றாங்க. ஆனா, நான் நம்பர் ஒன்னா வர்றதை ஆராலும் தடுக்க முடியாது!''

<b>ஓ.பன்னீர் </b>(அவசரமாகக் குறுக்கிட்டு): ''யம்மா! முதல்ல இவர் பேட்டி கொடுக் கறதுக்கு ஒரு தடைச் சட்டம் போடணும்மா! நாட்டுக்குள்ள அவனவன் அடுத்தவேளை நாஷ்டாவுக்கு வழி இல்லாம அலையறானுங்க. இவரோட நம்பர் ஒன் டார்ச்சர் தாங்க முடியலை!''

<b>விஜய்:</b> ''கலக்கிட்டீங்ணா!

<b>அஜீத்</b> (ஆவேசமாகச் சுவரைப் பார்த்து): ''ஏய்... தல இர்க்கும்போது வால் ஆடக்கூடாது!''


<b>விஜய்:</b> ''ஊய்... நான் வால் இல்லீங்ணா, வாளு!''

<b>பொன்</b> (மெதுவாக): ''பார்த்தீங்களாம்மா, இதெல்லாம் அடுத்த படத்துல டயலாக்கா வெச்சிருவானுங்க!''

<b>ஓ.பன்னீர்:</b> ஆமா! இந்த அடிதடி, பஞ்ச் டயலாக் இதுக்கெல்லாம் இனிமே தடா! மீறி, எவனாவது கைய, காலைத் தூக்கிப் பேசினா, மிட்நைட் அரெஸ்ட் தான். ஜாக்கிரதை!''

<b>சத்யராஜ்:</b> ''அட, பார்றா ஒரு சிக்ஸர! கெரகம் கௌப்பிட்டீங்க!''

<b>பொன்:</b> ''வாங்கய்யா கோயம்புத்தூர குசும்பரே! அம்மா, இந்தாளு மேடையில தான் வெள்ளைச் சட்டை போட்டுட்டு பகுத்தறிவு பேசறாரு. திரையில பார்த்தா தக்கனூண்டு பொண்ணுகூட உம்மா... உம்மம்மானு செம டான்ஸைப் போடறாரும்மா! இவரு புள்ள சிபிராஜு ஆடவேண்டிய ஆட்டத்தையெல்லாம், இந்த வயசுல இவரு போட்டுட்டிருக் காரும்மா!''

<b>ஜெ:</b> ''ம்... கேள்விப்பட்டேன். மிஸ்டர் சத்யராஜ்! நீங்க எல்லோரையும் ஓவரா நக்கலடிக்கறீங்களாமே..?''


<b>ஓ.பன்னீர்:</b> ''இப்படியே பண்ணிட்டு இருந்தீங்கன்னா, இனிமே நீங்க ஊமைப் படம்தான் எடுக்கணும்னு சட்டம் போட்ருவோம். ஜாக்கிரதை!''

<b>சத்யராஜ்</b> (மெதுவாக): ''ஆஹா... திரும்ப நம்மளத் தெருக்கூத்துக்கு அனுப்பிடுவானுங்க போலயிருக்கே! பேசாம 'அமைதிப்படை' அமாவாசையா மாறிட வேண்டியதுதான்! (சத்தமாக) நக்கல் எல்லாம் ச்சும்மாம்மா! நமக்கு ரோல்மாடலே வாத்தியாரும் அம்மா நீங்களும் தான். நீங்க சமூகநீதி காத்த வீராங்கனை. பெண் பெரியார்! மங்கையாகப் பிறந்த மார்க்ஸ்!''

<b>ஓ.பன்னீர்:</b> ''விட்டா, இந்தாளு இன்னிக்கே மந்திரியாகிடுவாரு போல இருக்கே!''

அப்போது தனது அந்நியன் ஜடா முடியை விக்ரம் உலுக்க... அது, பொன் னையன் மூக்கில்பட்டு, அவர் அடுத்தடுத்து தும்முகிறார்.

<b>பொன்</b> (கடுப்பாகி): ''முதல்ல இந்தாளைக் குண்டுக்கட்டா தூக்கிட்டுப் போய், சலூன்ல வெச்சு முடி வெட்டி விடுங்கப்பா..!''

<b>விக்ரம்:</b> ''ஹேய்... ஸாரிய்யா! ஸோ ஸாரி!''


<b>ஓ.பன்னீர்:</b> ''என்னா ஸாரி பூரினு! யம்மா, இவங்க அடிக்கிற கெட்\அப் கூத்தை முதல்ல ஒழிக்கணும். தலைக்கு கலர் டை அடிக்கறது, பல்லுக்கு பெயிண்ட் அடிக்கிறதுனு பயமுறுத்து றாங்க!''

<b>விக்ரம்:</b> ''நான் மட்டுமா கெட்\அப் மாத்தறேன். சூர்யாகூடத்தான் டிஸைன் டிஸைனா அலையறாரு... அவரைக் கேட்கமாட்டீங் களா?''

<b>சூர்யா</b>(மனசுக்குள்): ''ஆகா! மாட்டிவிட்டுட்டாரே!''

<b>ஓ.பன்னீர்:</b> ''அதே மாதிரி, இந்த சிம்பு இனிமே தலையில ஒரு பேண்டு கட்டறதை விடச் சொல்லுங்கம்மா. 'ஆ... ஊÕனா நெத்திக் கட்டைப் போட்டுக்கிட்டு சண்டை போடறது, பஞ்ச் டயலாக் பேசறது, ட்ரம்ஸ் வாசிக்கறதுனு இவர் அட்டூழியம் தாங்கமுடியலைம்மா''

<b>சிம்பு:</b> ''அதாவது சார், ஃபிலிம் ரோல் இல்லாமக்கூட படம் எடுத்துரலாம். ஆனா ஸ்டைல் இல்லாம, இந்த சிம்பு என்ன சார் செய்வான்?''எனப் பதற, அதைப் பார்த்துச் சிரிக்கிறார் தனுஷ்.

<b>பொன்:</b> ''என்ன தனுஷ சிரிக்கிறே? உங்க குடும்பத்துக்குத்தான் பெரிய லிஸ்ட்டே இருக்கு!''

<b>ஓ.பன்னீர்:</b> ''ஆமாம்மா! நடுராத்திரியில சுவரேறிக் குதிச்சு, ஹீரோயினோட பெட்ரூமுக்குள்ள ஹீரோ போறது மாதிரி இனிமே எடுக்கட்டும்... கஸ்தூரி ராஜாவைக் குடும்பத்தோட அரெஸ்ட் பண்ணிட வேண்டியதுதான்!''

<b>ஓ.பன்னீர்:</b> ''கேப்டன்! உங்களுக்கும் தனியா சில கண்டிஷன் இருக்கு. நீங்க எத்தனை தீவிரவாதிங்களை வேணும்னாலும் பிடிச்சுக்குங்க... சுட்டுக்கங்க. ஆனா, அரசியல்வாதிகளைச் சுட்டுக்கொல்றது, அரசு ஊழியர்களைக் கடத்தறதுங்கறதெல்லாம் இனிமே கூடாது! அப்புறம் அஞ்சு இஞ்சுக்கு மேக்கப் போட்டுக்கிட்டு, கலர் கலர் சட்டையில மழையில ஆடக்கூடாது. அது சட்டம் |ஒழுங்கைப் பாதிக்கிற செயல். ஆமா, சொல்லிப்புட்டோம்!''

<b>பொன்</b>: ''ஏம்மா, இவங்களைத் திருத்தணும்னா... நாமளே களத்துல குதிச்சாத்தாம்மா உண்டு. நாமளே ஒரு கதை இலாகா உருவாக்கி, அதுக்கு ஒரு அமைச்சரைப் போட்டு, தமிழ் சினிமாவுக்குக் கதைகள் சப்ளை பண்ணினா என்ன? பாட்டி வடை சுட்ட கதை, நரி திராட்சைப் பழம் தின்ன கதை, சிங்கமும் மாடும் கதைகளையெல்லாம் கொஞ்சம் மாடர்னாக்கி இவங்களை நடிக்க வெச்சோம்னா, பிள்ளைகளுக்கும் அது படமா இல்லாம பாடமா இருக்கும்ல?''

<b>தனுஷ்</b> (மெதுவாக): ''ஐயையோ! ஏ சர்டிஃபிகேட் படமெடுக்கிற எங்களை, 'ஏ ஃபார் ஆப்பிள்' படம் எடுக்க வெச்சிடுவாங்க போலிருக்கே!''

<b>ஓ.பன்னீர்:</b> ''அப்படியே 'சந்திரமுகி'யிலே இருந்து 'சச்சின்' வரைக்கும் இருக்கிற கதையையெல்லாம் மாத்திட்டு, நாம தர்ற கதையைத்தான் இனிமே படமா எடுக்கணும்னு ஸ்டிரிக்ட்டா சொல்லிருவோம். 'சந்திரமுகி'க்கு வேணும்னா இந்த மரவெட்டி, கோடாலி, தேவதை கதையைத் தந்துருவோம். ரஜினி தம்பி கொஞ்சம் மந்திர தந்திரக் கதைனா விரும்புவாப்ல!''


<b>பொன்</b>: ''அதேமாதிரி, குத்துப் பாட்டுங்கதாம்மா இப்ப கோடம்பாக் கத்தைப் பிடிச்சிருக்கிற பெரிய வியாதி. ஆளாளுக்கு அலப்பறை பண்றாங்க. அதனால 'போடாங்கோ', 'அப்படிப் போடு'னெல்லாம் எழுதற கவிஞருங்களையெல்லாம் மடக்கிப் பிடிச்சு வேலூர், கடலூர், பாளையங் கோட்டைனு அனுப்பினாத்தாம்மா சரிப்படும். அதுக்கும்கூட இந்த நர்ஸரி ரைம்ஸ்களையே கொஞ்சம் மாத்தி எழுதிப் பாட விட்ருவோம்!''

<b>விஜய்:</b> ''ண்ணா, என்னங்ணா! நானும் த்ரிஷாவும் கட்டிப்பிடிச்சு 'அம்மா இங்கே வா வா, ரெயின் ரெயின் கோ அவே!'னெல்லாம் பாடினா நல்லா இருக்காதுங்ணா!''

<b>பொன்:</b> ''சூ... சும்மா இருங்க! அம்மா, இந்த கலைஞர் வேற திரும்ப கதை, வசனம்னு டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சுட்டாரு. அதனால, ஒரு நல்ல படம் எப்படி இருக்கணும்னு நீங்களே ஒரு படம் எடுத்தா என்ன? 'கண்ணம்மா' மாதிரி 'அம்மம்மா'னு டைட்டில் வெச்சுக்குவோம். நீங்கதான் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம். ரஜினி, கமல், விஜயகாந்து, விக்ரம், விஜய், சிம்பு, தனுஷ்னு அத்தனை பேரையும் பிடிச்சுப் போட்ருவோம். வீரப்பன் என்கௌண்டர், ஜெயேந்திரர் கைதுனு அத்தனை சாதனைகளையும் போட்டுத் தூவி விட்டோம்னா, தேர்தல் நேரத்துல அடிச்சுத் தூக்கிர லாம்ல?''

<b>ஜெ:</b> ''ஓகே! இந்த ரூட்லயே மேற்கொண்டு பேசி முடிவு பண்ணுங்க. மிஸ்டர் விஜயகாந்த்! நீங்கதான் முன்னாடி நின்னு எல்லார் கால்ஷீட்டும் வாங்கணும், புரியுதா? ஓகே, கேரி ஆன்!'' என்றபடி ஜெயலலிதா எழுந்து உள்ளே போக...

''அடடா! அப்படி இப்படிப் பேசி அரசியலுக்கு வரலாம்னு பார்த்தா நம்மளை இப்படி 'ஆர்கனைஸிங்' வேலை பார்க்கவெச்சே காலி பண்ணிருவாங்க போலிருக்கே!'' என அதிர்ச்சியில் உறைகிறார் விஜயகாந்த்.

சுட்டது: (வேற எங்க இங்கதான்..) <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> www.vikatan.com
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply


[-]
Quick Reply
Message
Type your reply to this message here.

Image Verification
Please enter the text contained within the image into the text box below it. This process is used to prevent automated spam bots.
Image Verification
(case insensitive)

Messages In This Thread
ஆக்ஷன் ஹீரோக்களுக்கு அதிரடி டியூஷன் - by vasisutha - 12-11-2004, 05:32 AM
[No subject] - by tamilini - 12-11-2004, 11:31 PM
[No subject] - by kuruvikal - 12-12-2004, 01:33 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)