12-10-2004, 11:09 AM
தி.மகேஸ்வரனை கொலை செய்வதற்காகப் போடப்பட்ட திட்டம் அம்பலம்.
ஜ வெள்ளிக்கிழமைஇ 10 டிசெம்பர் 2004 ஸ ஜ கொழும்பிலிருந்து நிதர்சனா ஸ
ஐ.தே.க. சிறீலங்கா பாராளுமன்ற உறுப்பினர் தி.மகேஸ்வரனுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு எவ்வித முன்னறிவித்தலுமின்றி திரும்பப் பெறப்பட்டுள்ளதுடன் அவர் வசிக்கும் பிரதேசத்தில் ஆயதம் தாங்கிய சந்தேகத்திற்கிடமானவர்களின் நடமாட்டம் அதிகரித்திருப்பதாகவும் தெரியவருகிறது. சிறீலங்கா ஜனாதிபதியின் செயலகத்திலிருந்து விடுக்கப்பட்ட பணிப்புரையொன்றின் பெயரில் மகேஸ்வரனின் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அம்மையாரின் இரகசிய உத்தரவுக்கமைய எதிர்வரும் சில காலத்திற்குள் மகேஸ்வரனைத் தீர்த்துக்கட்டுமாறு பொலிஸ் அதிகாரி ஒருவர் தனது சகாவிற்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
இந்த விடயத்தை மகேஸ்வரனுக்கு நம்பிக்கையானவர்கள் சிலர் உறுதிபடுத்தியுள்ளதாகவும் அறியமுடிகிறது. கடந்த பொதுத்தேர்தலில் கொழும்புத் தொகுதியில் மகேஸ்வரன் சந்திரிக்கா அம்மையாரின் பாதுகாப்புப் பிரிவினரால் கொலைசெய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உயிர்தப்பியமை இங்கு நினைவுபடுத்தப்படுகிறது. குமார் பொன்னம்பலத்தின் பாதுகாப்பு விலக்கப்பட்டு அவர் அம்மையாரின் உத்தரவுக்கு அமைய கொலை செய்யப்பட்டதுடன் அவருக்கான இரங்கல் கடிதமும் மரணத்தின் முன்பு அனுப்பி வைக்கப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.