Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
முகாம்
#4
~~நிரந்தர சமாதானம் தோன்றுவதற்காகவும் எமது மக்கள் எதிர்பார்க்கும் விடியல் கிட்டுவதற்காகவும் மேலும் விட்டுக்கொடுப்புகளைச் செய்வதற்கு நாம் தயாராகவுள்ளோம்.||- இப்படிக் கூறியுள்ளார் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல் வன்.திருகோணமலை, சம்பூரில் வெள்ளி இரவு மறவர் படையினருக்காக நடத் தப்பட்ட கூட்டத்தில் பேசுகையில் தமிழ்ச்செல்வன் இப்படிக் கூறினார்.சம்பூர் போர்ப் பயிற்சிக் கல்லு}ரி மைதானத்தில் நடந்த இக்கூட்டத்தில் திருமலை மாவட்ட கட்டளைத் தளபதி கேணல் பதுமன், அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.திலக், மூது}ர் கோட்ட நிர்வாகப் பொறுப்பாளர் தேவன் ஆகி யோர் கலந்துகொண்டனர்.தமிழ்ச்செல்வன் அங்கு பேசுகை யில் மேலும் கூறியதாவது:-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் வே.பிரபாகரனின் இறுக்கமான பணிப்பின்பேரில் இன்று வரை நாம் சமாதானத்துக்காக அர்ப் பணிப்புடன் செயற்பட்டு வருகின்றோம். நிரந்தர சமாதானம் தோன்றுவதற்கும், எமது மக்கள் எதிர்பார்க்கும் விடியல் கிட்டுவதற்கும் மேலும் விட்டுக்கொடுப் புகள் செய்யத் தயாராகவுள்ளோம்.
தமிழர் தாயகம் ஆரம்பகாலம் முதல் திட்டமிட்டு - பறிக்கப்பட்டு - ஆக்கிரமிக்கப்பட்டு வந்தமை யாவ ரும் அறிந்த விடயம். ஏனைய சமூகத் தவர்களின் நிலத்தை எண்ணளவு கூட நாம் கேட்கவில்லை. எமது நிலம் எமக்கு வேண்டும். எமது நிலத் தின் ஓர் அடியைத்தன்னும் விட்டுக் கொடுக்கமுடியாது. நாம் இருப்பது வாடகை வீடல்ல, மாதிரிக்கிராமமல்ல, காலம் காலமாக உறுதி எழுதப்பட்ட தமிழர் பூமி. எமது வீட்டில் இருந்து எம்மை விரட்டமுடியாது அதற்கு விட் டுக்கொடுக்கவும் நாம் தயாரில்லை.
குரங்குபாஞ்சான் முகாம் விவகாரம் கூட அப்படித்தான். அதில் நீண்டகாலமாக நாம் வாழ்ந்த இடம். எவர் வந் தாலும் அதனை உறுதிப்படுத்த முடியும். குரங்குபாஞ்சான் விவகாரம் சமா தானத்தைக் குழப்பும் சக்திகளால் ஏற்படுத்தப்பட்டது. இதில் அலட்டிக் கொள்வதற்கு எதுவுமில்லை.இந்த விடயத்தில் மக்கள் குழம்ப வேண்டியதில்லை. இதனால் மீண்டும் யுத்தம் ஏற்படுமோ என அஞ்சத்தேவை யில்லை.
வலிந்து நாம் சண்டைக்குப் போக மாட்டோம். அதேவேளை எமது படை களைப் பலப்படுத்தும் நடவடிக்கை கள் தொடரும். இது எமது எதிர்கால நலனையும், எமது மண்ணையும் காக் கும் நோக்கம் கொண்டது. இது யுத் தத்திற்கு தயாராகின்றோம் என்ப தற்கு அறிகுறியல்ல. ஒரு நாட்டின் பலம் அதன் படைகளிலேயே தங்கி யுள்ளது. இன்று நாம் சிறந்த படை பலத்துடனும், மனோதிடத்துடனும் இருப்பது உலகறிந்த விடயம்.எம்மீது வலிந்து போர்தொடுக்கப் படுமானால் நாம் தற்பாதுகாப்பு நட வடிக்கை எடுப்பது தவிர்க்கமுடியாது போகும். எனினும் எமது தலைமை போரில் ஆர்வங்காட்ட விரும்பவில்லை. சமாதானம் நிரந்தரமாக்கப்படவேண் டும் என்றே விரும்புகின்றது. நெடுந் தீவில் புதிய படை முகாம்கள் அமைக் கப்பட்டமை, திருமலை, கோபாலபுரத் தில் புதிய கடற்படை முகாம் அமைத் தமை, குரங்குபாஞ்சான் எமது முகா மிற்கு சமீபமாக (04 கி.மீ தொலைவில்) 75இற்கு மேற்பட்ட படையின ரைக் குவித்திருப்பது உட்பட உயர் பாதுகாப்பு வலயப் பிரச்சினை மற்றும் உடன்படிக்கையில் கூறப்பட்டவற்றை நிறைவேற்றப்படாமை ஆகிய அரசின் நடவடிக்கைகளை மக்கள் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.இதுவரை உடன்படிக்கையை மீறியது யார் என்பதையும், இழக்கமுடியாத பெரும் இழப்புக்களுக்கு மத்தியில் பொறுமை காத்து நிற்பது யார் என்பதையும் மக்கள் உணரவேண்டும்.இப்போது அமைக்கப்பட்டிருக்கும் மறவர்படை எமக்கு மேலும் வலுச் சேர்க்கும். ஒவ்வொரு தமிழனும் துணிந்து செயற்பட முன்வரும்போது எமது அச்சம் பறந்து விடுதலை கையில் கிடைக்கும்.
அம்பாறை, திருகோணமலை மாவட்டங்கள் திட்டமிட்டு சிங்கள அரசுகளால் பறிக்கப்பட்டிருக்கின்றன. இந்த தென்தமிழீழத்தை மீட்கும் நட வடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும்.எமக்கு ஒரு நல்ல ஒரு நிர்வா கம் கிடைக்கும் போது, நன்கொடையாக கிடைக்கப் பெறுகின்ற பெருந் தொகை நிதியானது எமது மக்க ளின் அபிவிருத்திக்காகவே பயன் படுத்தப்படும்.இப்போது இடைக்கால நிர்வாகம் குறித்த வரைவு சமர்ப்பிக்கப்பட்டுள் ளது. அது முழுமையான தீர்வு அல்ல. பரிசீலிக்கப்படும் தமிழர்களின் உரி மைகள் எவ்வகையிலும் கிடைக்கும் என நம்புவோம். துணிந்து செயற் படுங்கள் - என்றார்.
Reply


Messages In This Thread
முகாம் - by sethu - 08-02-2003, 07:07 PM
[No subject] - by sethu - 08-02-2003, 07:08 PM
[No subject] - by GMathivathanan - 08-02-2003, 07:17 PM
[No subject] - by sethu - 08-03-2003, 07:58 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)