Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தினமும் ஷாம்பூ போட்டு குளிப்பவரா நீங்க...
#1
வாஷிங்டன்: நீங்கள் தொடர்ந்து தலைமுடிக்கு ஷாம்பூ பயன்படுத்துபவரா? அப்படியென்றால் உங்கள் நரம்பு மண்டலத்துக்கு ஆபத்து ஏற்படும் என்று மருத்துவ ஆய்வு தெரிவிக்கிறது.

அமெரிக்காவில் பிட்ஸ்பர்க் நகரில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் இது குறித்த ஆய்வு நடந்து வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தை சேர்ந்த நரம்பியல் துறை பேராசிரியர் ஒருவர் ஆய்வு குறித்து கூறியதாவது:

ஒருவர் தொடர்ந்து தலைமுடிக்கு ஷாம்பூவும், கைகளுக்கு லோஷனும் பயன்படுத்தி வந்தால் அவரது நரம்பு மண்டலம் மோசமாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. ஷாம்பூ மற்றும் லோஷன்களில் உடலில் உள்ள நுண்ணுயிர்களை அழிக்கும் தன்மையுள்ள பொருட்கள் உள்ளன. செல்களுக்கு இடையே தகவல்களை அனுப்பும் நரம்பு கட்டமைப்பை இவை பாதிக்கின்றன. அதன் உச்சகட்டமாக நரம்பு மண்டலத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தப்படுகிறது.

இந்த ஆபத்து குறித்து சிறிய வகை எலிகளிடம் சோதனை நடத்தி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது எலிகளின் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டது. இந்த சோதனை தற்போது துவக்க அளவிலேயே உள்ளது. தீவிரமாக தொடர்ந்து ஆய்வு நடத்திய பிறகே இறுதி முடிவுகள் தெரிய வரும்.இவ்வாறு அந்த பேராசிரியர் கூறினார்.
Reply


Messages In This Thread
தினமும் ஷாம்பூ போட்டு குளிப்பவரா நீங்க... - by aathipan - 12-09-2004, 06:16 AM
[No subject] - by Danklas - 12-09-2004, 12:18 PM
[No subject] - by ஊமை - 12-09-2004, 08:33 PM
[No subject] - by தூயா - 04-18-2005, 04:38 PM
[No subject] - by tamilini - 04-18-2005, 05:03 PM
[No subject] - by தூயா - 04-19-2005, 12:50 PM
[No subject] - by vasisutha - 04-19-2005, 06:48 PM
[No subject] - by kavithan - 04-20-2005, 10:46 PM
[No subject] - by sinnappu - 04-20-2005, 11:03 PM
[No subject] - by தூயா - 04-21-2005, 06:42 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)